December 14, 2010

ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் கோல்டன் க்ளோபில்


ஸ்லம்டாக் மில்லினியருக்காக ஏற்கெனவே சென்ற வருடம் கோல்டன் க்ளோப் விருதை பெற்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் 2010 வருடத்திற்கான கோல்டன் க்ளோப் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்.

ஸ்லம்டாக் மில்லினியரை இயக்கிய டேனி போயலுடன் இணைந்து பணியாற்றிய 127 Hours என்ற திரைப்படத்திற்காகத் தான் இந்த பரிந்துரை என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விருதுகள் ஜனவரி 16 அன்று அறிவிக்கப்படவுள்ளன.


ஏற்கெனவே இந்த வருடம் நோபல் விருது வழங்கும் விழாவில் இசையமைத்து மேலும் புகழ் தேடிய ரஹ்மானின் புகழ் உலகின் எல்லா திசைகளிலும் இன்னும் எட்ட வாழ்த்துவோம்.

1 comment:

Chitra said...

ஏற்கெனவே இந்த வருடம் நோபல் விருது வழங்கும் விழாவில் இசையமைத்து மேலும் புகழ் தேடிய ரஹ்மானின் புகழ் உலகின் எல்லா திசைகளிலும் இன்னும் எட்ட வாழ்த்துவோம்.


..... Jai Ho! Sure!

He is making us all proud. :-)

Post a Comment

Related Posts with Thumbnails