October 03, 2011

என்ன கேட்பாய்! என்னவென கேட்பாய்!!

எப்படி இருக்கிறாய் என
என்னிடம் வினவினாலும்

என்ன செய்கிறேன் என
என் நண்பனிடம் கேட்டாலும்

என்ன நிகழ்ந்தது என
என் உறவுகளிடம் அங்கலாய்த்தாலும்

என் மனதை நீ அறிவாய்
என நீ கருதினாலும்

என் தலையணையை
என் கண்ணீர் ஈரமாக்கிய
என் தலையணையை - நீ வினவாத வரை

என் கவலையை - நீ
என்றும் விளங்கிக் கொள்ளவியலாது

2 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

காதலில் அழுகை எப்போதும் தலையணையுடன்தான்...

அழகு...

K.s.s.Rajh said...

அழகு...வேற என்ன சொல்லுவது அழகு எப்படி சொல்ல நினைத்தாலும் ஒரே சொல்தான் உங்கள் கவிதை அழகு

Related Posts with Thumbnails