August 28, 2010

விசித்திரமான மனித மனங்கள்

இந்த வாரம் கேள்விப்பட்ட இரு விடயங்கள் மனதை வெகுவாக கனக்கச் செய்தன. இரண்டு விடயங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்றாலும் எதிரானவை. அவற்றை வலைப்பூவில் பகிர்ந்து கொள்ளலாம் என்று தான் இந்த பதிவை எழுதுகிறேன்.

முதல் விடயம் சந்தேகத்தினால் சொந்த மகளின் உயிரை எடுத்த தந்தையின் கோரம் என்றால் இரண்டாவது விடயம் நேசத்தால் சொந்த சகோதரனுக்காக தனது உயிரை விட்ட சகோதரனின் மெய்சிலிர்க்க வைக்கும் பாசம்.

இரு தினங்கள் முன்பு, மதுரையில் இளம்பெண் ஒருவர் தனது தந்தையால் (மூன்று வாலிபர்கள் துணையுடன்) கொலை செய்யப்பட்டிருக்கிறார். அந்த பெண்ணின் காதில் பூச்சிக்கொல்லி மருந்தை ஊற்றியிருக்கின்றனர். அதன் முன்னர் ஆண் செவிலியன் (Male NURSE) ஒருவனால்  ஊசி வழியாக மயக்க மருந்தும் கொடுக்கப்பட்டிருக்கிறார் அந்த இளம்பெண். கேட்கவே கொடூரமாக இருக்கிறது, அந்த பெண் எப்படி சகித்திருப்பாள் என்பதை நினைத்தால் மனம் மேலும் கனக்கிறது.

இத்தனைக்கும் அவளுக்கு உறவினர் ஒருவருடன் சில தினங்களில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. கைது செய்யப்பட்ட அவளது தந்தை கூறுகையில் 'அவளது வருங்கால கணவனுக்கு உண்மையாக இருக்க மாட்டாளோ என சந்தேகம் எழுந்ததால் தான அவளை கொலை செய்ததாக கூறியிருக்கிறார்'. இதற்கு முன்னர் பல ஆண்களுடன் அவளது பெண் தொடர்பு வைத்திருந்ததாகவும் அதனால் சந்தேகம் மேலும் வலுத்ததாகவும் கூறியிருக்கிறார்.  

தனது பெண்ணின் நடத்தை சரியில்லை என்றால் அவளுக்கு அறிவுரை கூறி நல்வழிப்படுத்தியிருக்கலாம். இல்லையென்றால் திருமணத்திற்கு பின்னர் திருந்தும் வாய்ப்பு இருக்கிறதா என நிதானமாக கவனித்திருக்கலாம். இப்போது தனது பெண்ணின் வாழ்க்கையையும், அவரது வாழ்க்கையையும், குடும்பத்தினரின் வாழ்க்கையையும் ஒரு சேர தொலைத்து விட்டு நிற்கிறார் ஒரு தகப்பன்.

உயிரை எடுத்த ஒருவரின் கொடிய மனம் இப்படியென்றால் கனிவான மனம் கொண்டு சொந்த சகோதரனுக்காக தனது உயிரை விட்ட ஒருவரின் நெஞ்சம் நெகிழச் செய்த நிகழ்வும் அமெரிக்காவில் இந்த மாதம் நடந்திருக்கிறது. Ryan Arnold, Chad Arnold ஆகிய இருவரும் சகோதரர்கள், இவர்களில் Chad ற்கு (PSC) Primary Sclerosing Cholangitis எனும் நோயினால் கல்லீரல் முற்றிலுமாக செயலிழந்து விட்டது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றால் அவர் சில மாதங்களில் மரணமடையக்கூடும் என மருத்துவர்கள் காலக்கெடு குறித்து விட்டார்கள்.

இதையறிந்த Ryan Arnold, தானாகவே தனது கல்லீரலின் ஒரு பகுதியை தனது சகோதரனுக்கு அளிக்க முன்வந்திருக்கிறார். Chad எனது சகோதரன், அவனை நான் அதிகம் நேசிக்கிறேன், இன்னும் பல வருடங்கள் அவன் குடும்பத்தினருடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என இந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை பதிவு செய்ய வந்திருந்த FOX தொலைக்காட்சி நிருபர்களிடம்  Ryan தெரிவித்திருக்கிறார்.

ஆபத்தான அறுவை சிகிச்சை என்றாலும் ஒரு சதவீதம் மட்டுமே கல்லீரலை கொடுப்பவர்   மரணமடைய வாய்ப்புள்ள அறுவை சிகிச்சை இது என கடந்த கால அறுவை சிகிச்சைகள் மூலம் தெரியவந்திருக்கின்றன. அதோடு கல்லீரலைக் கொடுப்பவருக்கே அதிக பின்விளைவுகள் ஏற்படும் என்பதையும் கொலரோடா பல்கலைக்கழக மருத்துவமனை மருத்துவர்கள் Ryan உடன் தெரிவித்திருக்கின்றனர். இருந்தும் அவர் இதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

ஜூலை 29 அன்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டு Ryan ன் 60 % கல்லீரல் Chad ற்கு பொருத்தப்பட்டிருக்கிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து இருவரும் ஜூலை 30அன்று பொதுவான சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். எதிர்பாராத விதமாக ஜூலை 31 அன்று Ryan ன் உடல்நிலை மோசமாகியிருக்கிறது, அவர் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டு செயற்கை சுவாசமளிக்கும் எந்திரத்தில் (Ventilator) பொருத்தப்பட்டிருக்கிறார்.

நடுவிலிருப்பவர் மரித்துப் போன Ryan Arnold
இரு தினங்களுக்கு பின் ஆகஸ்ட் 2 அன்று சிகிச்சை பலனளிக்காமல் Ryan Arnold மரித்துப் போனார். எவ்வித நோய் நொடியும் இன்றி மனைவி மற்றும் 1,4 மற்றும் ஆறே வயதான மூன்று மகன்களுடன் வாழ்ந்து வந்த Ryan Arnold இன்று இந்த உலகில் இல்லை. சகோதரனுக்காக தனது உயிரை தியாகம் செய்திருக்கிறார்.

அவரது கல்லீரலால் இன்று உயிருடன் இருக்கும் Chad Arnold அவரது மரணம் குறித்து கூறுகையில், வெளியே அறுவை சிகிச்சையால் ஏற்பட்ட தழும்புடனும், உள்ளே எனது சகோதரன் மரணத்தால் ஏற்பட்ட பெரிய தழும்புடனும்   வாழ்ந்து வருகிறேன் என்றிருக்கிறார். மற்றவர்களுடன் எவ்விதம் கனிவாக இருக்க வேண்டும் என காண்பித்து சென்றிருப்பதாகவும் மரித்த தனது சகோதரனைக் குறித்துக் கூறுகிறார்.

மனதை கனக்கச் செய்து, கண்களில் கண்ணீரையும் வரவழைத்தது கனிவான இருதயம் கொண்ட Ryan Arnold ன் உயிர் தியாகம்.

CARING and SHARING are the things that are Still keeping this Cruel world a HAPPIEST and MOST BEAUTIFUL Place என எங்கேயோ படித்தது இப்போது நினைவிற்கு வருகிறது. அந்த வாக்கியத்தில் தான் எத்தனை உண்மை.
நன்றி: FOX & NDTV

8 comments:

Chitra said...

CARING and SHARING are the things that are Still keeping this Cruel world a HAPPIEST and MOST BEAUTIFUL Place

...Absolutely right!!!

யூர்கன் க்ருகியர் said...

first one is worst.
second one is great.

சின்னு said...

தனது மகள் , தனது உறவு வழியில் திருமணம் செய்யாமல் மனைவி வழி சொந்தத்தில் மணம் முடிக்க இருந்ததால் மனைவியையும்,மகளையும் பழி வாங்கவே இந்த பாவி இந்தக் கொலையை செய்திருக்கிறான். தனக்கு கெட்ட பெயர் வராமலிருக்க தமிழ்நாட்டு பரதேசிகள் வழக்கமாக செய்யும் கேரக்டர் அஸ்ஸாசினேசன் செய்துவிட்டன அந்த பொறம்போக்கு அப்பன். நல்ல தகப்பனாவிருந்தால் நிசமாலுமே தன் மகள் தவறிளைத்திருந்தாலும் வெளியே சொல்லிருக்கமாட்டன்.

Arnold Annan Vazhi Vandhavanga(AAVV) said...

Ezhutthu sudhandhiram namakku undenumbothu, koodave ezhutthu naagareegam matrum panbu nammaal kaakkappadavendum.Solla vandha karutthai migavum azhagaaga, arumaiyaana vaartthaigalai ubayogitthu solra unga panbukku vaazhttukkal Edwin.Pirarai chaadumbodhu kooda adhrkkaana vaartthaigalai thearndhu ezhudhum ungal akkarai migavum paaraattukku uriyadhu. Nammoda karutthukkalai padhivu seigayil namadhu ulla kaodhippai, kabatthai, valiyai..... pirar(padippavar) elidhaaga unarum vagaiyil solla thamizhil etthanaiyo vaartthaigal irundhum, thanadhu karutthai padhivu seidha Chinnu sila naagareegamatra vaartthaigalai ubayogitthiruppadhu satre nerudugiradhu,adhilum podhuvaaga thamizhnaattu paradhesigal endru kurippittirukka veandaame.Irandu edhiredhiraana nigazhvugalai arpudhamaaga padhivu seidhirukkeenga. Manidha manangal endrume karppanaikku appaarpattavai, eppodhu enna seiyum, edhai sindhikkum.... yaaraal solla iyalum.Vedhanaikkuriya mudhal sambavam, negizhchikkuriya irandaavadhu sambavam, ellaame manidhrgalin seyalgale....

எட்வின் said...

@ Chitra
@ யூர்கன் க்ருகியர்
நன்றி

சின்னு said...

//தனக்கு கெட்ட பெயர் வராமலிருக்க தமிழ்நாட்டு பரதேசிகள் வழக்கமாக செய்யும் கேரக்டர் அஸ்ஸாசினேசன் செய்துவிட்டன அந்த பொறம்போக்கு அப்பன்.//

சரியாத்தான் சொல்லியிருக்கீங்க.

எட்வின் said...

@ யார் வழியோ வந்தவங்க?!!

நன்றி.

சின்னு அவர் நெனச்சத சொல்லியிருக்காரு. அவர் அனுபவங்களில் சந்தித்த மனிதர்கள் அவரை அந்த விதம் எழுத உந்தியிருக்கக்கூடும். அவரது மனநிலையில் இருந்து பார்க்கும் போது அதில் அத்தனை தவறிருப்பதாகத் தெரியவில்லை.

சின்னு said...

to யார் வழியோ வந்தவங்க?!!

ஐயா, செயல் கீழ்தரமாக அமைகிறபட்சத்தில் அதற்கெதிரான வார்த்தைகளும் கீழறங்கிவிடுகிறது. மேலும் பரதேசி குரூப்பில் நானும் ஒருவனே! ஒரு பெண்ணை அடக்க அல்லது அழிக்க நினைக்கும் போது உடனே அவளை தேவிடியாளக்கிவிடும் நமது அசிங்கம் பிடித்த கலாச்சாரத்தையே சாடியுள்ளேன். Please do not take personally!

Arnold Annan Vazhi Vandhavanga said...

Adhu enna yaar vazhiyo vandhavanga? Naangathaan sariya Arnold Annan Vazhi Vandhavangannu solli irukkome...........Elaa Chinnu idha ipaadi sollaadhalaa, adhu thppunnu sonna adhavida nalla illaadha innonnai solrade. Chutti kaatnadhu ennoda thappulaa. Mannichikko. Nalladhai yaaru sonnaalum ketkanumlaa. Adhaan sari-Nalla pillaikku azhagu. puriyudhaalaa? Edwin Anna avar sandhittha sila manidhargal avarai andhavidham solla thoondiyirukkalaam. Appadinna avarum sila thamizhnaattu paradesigal endru kurippittu irukkalaam. vakkalatthu vaangaatheenganne.

Post a Comment

Related Posts with Thumbnails