நேற்று(15.04.09) ndtv தொலைக்காட்சியில் நவம்பர் 2008 மும்பை தாக்குதலின் விசாரணை குறித்த விவாதம் நடைபெற்றது. Times Of India's Consulting Editor ம் தனது மனைவியுமான திருமதி.சபீனா சாந்தனுவை, மும்பைத் தாக்குதலில் இழந்த திரு.சாந்தனு அவர்களும் பங்குபெற்று தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.அப்போது அவர் குறிப்பிடுகையில் அஜ்மல் கசாப் வழக்கின் விசாரணையை நாங்கள் பின் தொடரவில்லை;அதனைக் குறித்து அறியவும் விரும்பவில்லை; நானும் எனது இரு பிள்ளைகளும் விரும்புவது எல்லாம் அஜ்மல் கசாப் மரண தண்டனைக்கு விலக்கப்பட வேண்டும்.அவர் உயிருடன் வைக்கப்பட வேண்டும்.
எனது மனைவி மும்பை தாக்குதலில் குறிவைக்கப்படவில்லை; தீவிரவாதிகளின் தாக்குதலில் மடிந்த மற்றுமொரு பலிகடா, அவ்வளவு தான்.
எங்களுக்கு வருத்தம் இல்லாமலில்லை,ஆனாலும் கசாப் மீது எந்த கோபமோ வெறுப்போ எங்களுக்கு இல்லை.அவர் மீது கோபம் கொள்வதினாலோ மேலும் கவலை அடைவதாலோ நாங்கள் எதனையும் ஈட்டப் போவதில்லை.மறைந்த எனது மனைவி மீண்டு வந்து விடப் போவதுமில்லை என கூறினார்.
அதோடு அவரின் 12 வயது மகன் அஜ்மல் கசாப்பை சிறைச்சாலையில் சென்று சந்திக்க விரும்புவதாக தெரிவித்து இருக்கிறான் எனவும் கூறினார்.
ஏற்கெனவே நளினியை சிறைச்சாலையில் பிரியங்கா காந்தி சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இவர்களைப் போன்ற மனித நேயம் மிக்கவர்களை எவ்வளவு புகழ்ந்தாலும் பாராட்டினாலும் தகும்.திரு.சாந்தனு அவர்களை மகான் என தலையங்கத்தில் குறிப்பிட்டதும் தகும் என்றே கருதுகிறேன்.
இந்த நிகழ்ச்சியின் போது பங்கு பெற்று பேசிய மூத்த வழக்கறிஞரும்,இந்திராகாந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்காக வாதிட்டவருமான திரு.ராம்ஜெத்மலானி, சாந்தனுவை வெகுவாக பாராட்டியதோடு இந்த கருத்துக்களை கேட்கும் ஒவ்வொரு தீவிரவாதியும் வெட்கப் பட வேண்டும் என்றார்.அதோடு இந்த கருத்துக்களை அனைத்து செய்தி ஊடகங்களும் வெளியிட வேண்டும் என்றும் கூறினார்.

இந்தியாவின் பொருளாதார மையமான மும்பையில் 2008,நவம்பர் மாதம் நடந்த தாக்குதலுக்கும் தற்போது லாகூரில் நடந்த தாக்குதலுக்கும் பெரிதாக வித்தியாசங்கள் இல்லையெனவே படுகிறது.