ஆஸ்திரேலியாவில் பற்றியெரியும் காட்டுத்தீ இது வரை 200 க்கும் மேலான உயிரையும் 1000 த்திற்கும் மேலான வீடுகளையும் காவு கொண்டிருக்கும் நிலையில் உதவிக்கரங்கள் பல பகுதிகளிலுமிருந்து வந்த வண்ணமிருக்கின்றன.

குறிப்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று தம் பங்கைச் செய்திருக்கின்றனர். அதோடு செஞ்சிலுவை சங்கம் மற்றும் Salvation army, (911 ன் போதும் சேவை செய்தவர்கள்) போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் உதவிக்கரம் நீட்டியுள்ளன.
வீடு இழந்த சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடிய பான்டிங்க்காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தை பார்வையிட்டு விட்டு வந்த பின்னர் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளிக்கையில் துக்கம் தாளாமல் கண்கலங்கினார்.
ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட்
மக்களோடு மக்களாக ஒன்றி விடும் இவரைப்போன்ற தலைவர்கள் எங்கே! நம் அரசியல்வாதிகள் எங்கே!! மக்களை அழ வைக்காமலிருந்தால் அதுவே பெரிய விஷயம்.
பாதிக்கப்பட்ட பகுதிகளின் சில புகைப்படங்கள் இங்கே

செயற்கைக்கோள் புகைப்படம்





Darwin's Aerial View, Australia
















Nicole Kidman with Brandon Walters
