Showing posts with label மைக்கேல் ஜாக்சன். Show all posts
Showing posts with label மைக்கேல் ஜாக்சன். Show all posts

June 25, 2010

மைக்கேல் ஜாக்சனின் மறுபக்கம்

இன்றோடு (25.06.2009) பாப் இசை உலகின் மன்னன் என வர்ணிக்கப்படும் மைக்கேல் ஜாக்சன் இறந்து ஒரு வருடம் ஆகிறது.

அவர் காலஞ்சென்று ஒரு வருடமாகிய பின்னும் அவரது மரணத்திற்கான காரணம் சரிவர தெளிவாகவில்லை.பிரபலமானவர்களின் மரணம் பெரும்பாலும் விசித்திரமாகவே இருக்கிறது.

அவர் உயிரோடு இருக்கையில் போதை பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார்; சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்; என பல குற்றச்சாட்டுகள் அவர் மீது வீசப்பட்டன.

அவரது குழந்தையை உயரத்திலிருந்து கீழே போடுகின்ற விதம் பயமுறுத்திய நிகழ்வு ஒன்று அவரது மனநிலையைக் குறித்த பல கேள்விகளை எழுப்பியது.

இவைகள் இப்படியிருந்தாலும் MJ வின் நற்பணிகளையும் மறக்க முடியாது. 1991 ல் வறுமையில் வாடும் சிறார்களை மனதில் கொண்டு "Heal The World" என்ற பாடலை அவரே எழுதியிருந்தார். அந்த பாடலைத் தான் அவர் பாடிய பாடல்களிலே சிறந்த பாடலாகக் கருதுவதாக பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

I think about the generations and they say we want to make it a better place for our children and our children's children so that they know it's a better world for them and I think they can make it a better place.இப்படித் தான் பாடலுக்கு முன்னர் மைக்கேல் கூறிப்போகிறார்.

Michael Jackson - Heal The World .mp3
Found at bee mp3 search engine

அதன் தொடர்ச்சியாக 1992 ல் "Heal The World Foundation" என்ற அமைப்பை ஏழ்மை மற்றும் வறுமையினால் வாடும் சிறுவர்களுக்கு மருத்துவ உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளும் செய்யும் வகையிலும்; மனோ ரீதியாக, உடல் ரீதியாக, பாலியல் ரீதியாக குழந்தைகள் துன்புறுத்தப்படுவதற்கு எதிராக குரல் கொடுக்கும் நல்லெண்ணத்திலும் ஏற்படுத்தினார்.

பல மில்லியன் டாலர்களையும் இதற்கென்றே செலவிட்டிருக்கிறார் மைக்கேல் ஜாக்சன்.

1984 ல் Pepsi Cola வின் விளம்பரம் ஒன்றில் நடிக்கையில் ஏற்பட்ட தீக்காயத்திற்காக அவருக்கு பெப்ஸிகோலா நிறுவனம் நஷ்ட ஈடாக வழங்கிய 1.5 மில்லியன் டாலர்கள் முழுவதையும் "Michael Jackson Burn Center" தொண்டு நிறுவனத்திற்கு வழங்கியிருக்கிறார்.

இதற்காக அமெரிக்க அதிபர் ரீகனிடமிருந்து விருதும் பெற்றிருக்கிறார்.

"Can You Feel It", "We Are the World" மற்றும் "Man in the Mirror" ஆகியவை உலக அமைதிக்காகவும், பிரிவினைகளுக்கு எதிராகவும் MJ ஆல் பாடப்பட்ட பிற பாடல்கள். இவற்றில் "We Are the World" பாடல் 1985 ல் ஆப்பிரிக்காவில் வறுமையால் வாடுபவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக 39 இசைக்கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ஒன்று.  அந்த பாடலை Lionel Richie என்ற மற்றொரு பாப் பாடகருடன் சேர்ந்து MJ எழுதினார். இப்படி MJ செய்த நற்பணிகள் பலப்பல.

ஆனா இன்னைக்கு நம்மூரிலயே பல பேர் கொஞ்சம் காச பாத்திட்டாங்கன்னா கண்ணு மண்ணு தெரியாம ஆடுவாங்க. உதவின்னு வந்தா ஓடி ஒளிவாங்க. எல்லாத்துக்கும் மனசு தான் காரணம். "மனம் இருந்தா மார்க்கம் உண்டு".

Lionel Richie Stevie Wonder Micheal Jackson - We Are The World.mp3
Found at bee mp3 search engine

அவர் உயிரோடு இருக்கையில் அவர் சம்பாதித்ததை விட அவர் இறந்த பின்னர் இதுவரை அவரது இசை சம்பாதித்தது தான் அதிகமாம்.ஒரு பில்லியன் டாலர்களாம்!!

நன்றி: dailymail & wiki  
Heal The World

October 23, 2009

Boyzone-Gately, மைக்கேல் ஜாக்சன், கிறிஸ்தவம்-ஓரினத்திருமணம்


தொண்ணூறுகளில் ஆங்கில பாப் இசைப்பிரியர்களையும்,இளவட்டங்களையும் கவர்ந்த குழுக்களில் Back Street Boys, Westlife, Boyzone போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவற்றில் Boyzone குழுவின் பாடல்களைத் தான் தொண்ணூறுகளில் நான் அதிகம் கேட்டு வந்திருந்தேன்.

அயர்லாந்தைச் சார்ந்த ஐந்து நண்பர்களால் உருவாக்கப்பட்டது Boyzone பாப் இசைக்குழு. கடந்த சில நாட்கள் முன்னர் இந்த இசைக்குழுவைச் சார்ந்த Stephen Gately என்பவர் ஸ்பெயினில் விடுமுறைக்காக சென்றிருக்கையில் தனது உறக்கத்திலேயே (தனது 33 ஆவது வயதில்) மரணமடைந்தது பாப் இசை உலகில் பெரிதாகப் பேசப்பட்டது.

அவர் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் அல்லது தற்கொலை செய்திருக்கலாம் என ஆரம்பத்தில் பேசப்பட்டாலும் இயற்கையான காரணங்களாலேயே அவர் மரணமடைந்ததாக பின்னர் தெளிவுபடுத்தப்பட்டது. இவர் ஒரு Gay என்பது குறிப்பிடத்தக்கது.

Boyzone பாடல் ஒன்று காணொளியாய்




----------

மைக்கேல் ஜாக்ஸன்

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். அதனை MJ இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என சொன்னாலும் தகும் என்றே படுகிறது. சில தினங்கள் முன்னர் This Is It என்ற பெயரில் மைக்கேல் ஜாக்ஸன் லண்டனில் செய்யவிருந்த நிகழ்ச்சிக்காக செய்த முன்னேற்பாடுகளையும், அவர் மற்றும் அவரது குழுவினரின் பயிற்சிகளையும் தொகுத்து முன்னோட்டமாக ஜாக்ஸனின் நெருங்கிய நண்பரும், அவரது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், நடன இயக்குனருமான Kenny Ortega வெளியிட்டார்.


This Is It திரை அரங்குகளில் இந்த மாதம் 28 அன்று வெளிவர இருக்கிறது. அதன் இயக்குனரும் Kenny Ortega தான். இப்போதே முன்பதிவுகளும் துவங்கி விட்டன. ஜாக்ஸன் உயிரோடு இருக்கையில் அவரது குறிப்பிட்ட பாடல் தொகுப்பு ஒன்றிற்கு கிடைத்த விலையை விட அவர் மறைந்த பின்னர் வெளியாகவுள்ள இந்த தொகுப்பிற்கு அதிக விலை கிடைக்கும் எனத் தெரிகிறது.

------------
கிறிஸ்தவம்-ரினத் திருமணம்

ஸ்வீடன் நாட்டைச் சார்ந்த லுத்தரன் ஆலயம் ஒன்று ஓரினத் திருமணங்களை நடத்த அனுமதி அளித்துள்ளது. ஓரினத் திருமணங்களுக்கு அனுமதி அளித்து கடந்த மே மாதம் ஸ்வீடன் நாடு சட்டம் இயற்றியிருந்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐரோப்பாவில் நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், நார்வே நாடுகளுக்கு அடுத்தபடியாக ஓரினத் திருமணங்களை அனுமதிக்கும் ஐந்தாவது நாடாகிறது ஸ்வீடன்.

ஆனால் கிறிஸ்தவர்களின் புனித நூலான விவிலியமோ ஓரினத் திருமணத்திற்கு எதிரான கருத்தையே கொண்டுள்ளது என்பது சுவாரஸ்யமானது.

இது சரியா தவறா என்னவென்பது இன்னும் எனக்கு புரிந்தபாடில்லை. மேலே குறிப்பிட்ட Boyzone ன் Stephen Gately ம் ஓரினச் சேர்க்கையாளர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

November 21, 2008

பாப் பாடகர் மைக்கேல் ஜாக்ஸன் இஸ்லாம் மதத்தைத் தழுவினார்!!!

ஆங்கில பாப் உலகின் ராஜா என அழைக்கப்படும் உலகப் பிரசித்தி பெற்ற பாடகர் மைக்கேல் ஜாக்ஸன் மிக்கயீல் (Mikaeel) என தனது பெயரை மாற்றியிருக்கிறார் அதோடு இன்று லாஸ் ஏஞ்சல்ஸில் இஸ்லாம் மதத்தை தழுவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதியதாக அவர் வெளியிடவிருக்கும் ஒரு இசை ஆல்பத்தின் தயாரிப்பாளர் மூலம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

அதோடு நிற்காமல் யூதர்களை இரத்தம் குடிக்கும் காட்டேறிகள் எனவும் கூறியிருக்கிறார்.உலகை ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் எனவும் சாடியிருக்கிறார்

வளைகுடா நாடான பஹ்ரைனின் செயற்கை தீவு ஒன்றில் நிலங்களை வாங்கியிருப்பதாகவும் விரைவில் அங்கு குடியேறவிருக்கிறார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.மேலும் அவரது ரெக்கார்டிங் ஸ்டுடியோவையும் பஹ்ரைனிற்கே மாற்ற இருப்பதாகவும் கூறப்படுகிறது.பிறப்பால் அமெரிக்கராவார் மிக்கயீல் என்ற மைக்கேல் ஜாக்ஸன்
Related Posts with Thumbnails