December 31, 2012
கடல் - மூங்கில் தோட்டம் - 2012 ன் பரிசு
December 14, 2010
ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் கோல்டன் க்ளோபில்
April 20, 2010
கானாடுகாத்தான் முதல் கெய்ரோ வரை
March 27, 2010
விண்ணைத்தாண்டி வருவாயா-JESSIE-நான்
இதனை VINNAITHANDI VARUVAYA-"விண்ணை தண்டி வருவய" என கூட எழுதியிருக்கக் கூடும்(அப்படித்தான் அனைத்து திரைப்படத் தலைப்புகளும், பாடல்களும், பலரின் பெயர்களும் கூட எழுதப்பட்டு வருகின்றன. உதாரணம் சூப்பர் ஸ்டாரின் SIVAJI-சிவாஜி, இதனை 'சிவஜி' என்று வாசிப்பதா? இல்லை 'சிவாஜி' என்று வாசிப்பதா?)
February 24, 2010
சச்சின் எனும் பெருமைமிகு இந்தியன்
February 01, 2010
இசைப்புயல் ரஹ்மானிற்கு கிராமி விருதுகள்
விவரங்கள் Grammyன் இந்த தளத்தில் http://www.grammy.com/nominees?category=167
January 20, 2010
ஆஸ்கர் நாயகன் ரஹ்மான் மீண்டும் ஆஸ்கரில்
குறு குறு கண்களிலே
எனை அவள் வென்றாளே
இதோ இதோ
அவள் எனை பதம் பார்க்கிறாள்
சிறு சிறு வெண்ணிலவே
என் துணை ஆவாளோ
சிறு சிறு வெண்ணிலவே
என் பசி தீர்ப்பாளோ
இதோ இதோ
அவள் எனை பதம் பார்க்கிறாள்
குறு குறு கண்களிலே
நன்றி: விக்கி ஆஸ்கர்ஸ் கலாட்டா
January 18, 2010
தமிழ் பாப் பாடல்கள் Vs சினிமா பாடல்கள்
January 14, 2010
விண்ணைத் தாண்டி வருவாயா-ஓசன்னா/ஹோசன்னா
கவிஞர் தாமரையின் வரிகள் ஒவ்வொன்றும் அப்படியே கட்டிப்போடுகின்றன. குறிப்பாக ஹோசன்னா பாடலின் ஆரம்ப வரிகளான ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே! என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே என்ற வரி என்னை வெகுவாகவே கவர்ந்தது.
(ஈழத்திற்காக கவிஞர் தாமரை பேசிய பேச்சைக் கேட்டு மிரண்டு போயிருந்தேன். அந்த புயலிடமிருந்து மீண்டும் இப்படி ஒரு தென்றல் போன்ற வரிகளா என்பது ஆச்சரியப்பட வைக்கிறது)
ஹோசன்னா பாடலை பாடியிருக்கும் விஜய் பிரகாஷ் என்பவரின் குரலை இதற்கு முன்னர் இசைப்புயலின் yuvraaj (2008) என்ற இந்தித் திரைப்படத்தின் Manmohini Morey பாடல் மூலம் கேட்டிருக்கிறேன்.
அந்த பாடலும் ஏறக்குறைய இதே சுருதியில் அமைக்கப்பட்ட பாடல் தான். அந்த பாடலில் கர்நாடக சங்கீத ஆலாப்களால் மனதை ரீங்காரமிடுவார் விஜய் பிரகாஷ். அதே போன்று ஹோசன்னாவிலும் கலக்கியிருக்கிறார்.
Manmohini Morey
உடன் பாடியிருக்கும் Suzanne வையும், Blaaze வையும் குறித்து சொல்லவே தேவையில்லை. Blaaze வை குறித்து தனி பதிவே போடலாம்.
yuvraaj திரைப்படத்தின் பாடல்கள் அத்தனையும் அத்தனை அருமையாக இருக்கும். அதில் பீத்தோவனின் இசையையும் சேர்த்திருப்பார் நம் ஆஸ்கர் நாயகன். கேட்காதவர்கள் நிச்சயம் கேளுங்கள்
'ஓமனப் பெண்ணே' பாடலில் பென்னி தயாளும், கல்யாணி மேனனும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். மலையாள வாசம் ரொம்பவே வீசுகிறது. நாதஸ்வரத்தின் சேர்க்கை 'ஓமனப் பெண்ணே' வில் வித்தியாசமாக இருக்கிறது.

'மன்னிப்பாயா' பாடலில் ஷ்ரேயா கோஷலும், ரஹ்மானும் வாழ்ந்திருக்கிறார்கள். "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்" அன்பிலார் எல்லாம் தமக்குரியர்" என திருக்குறள்களையும் கவிஞர் தாமரை சேர்த்து விட்டிருப்பது சற்றும் எதிர்பாராதது, பாராட்டுக்குரியது.
'ஆரோமலே' பாடலின் ஆரம்பத்தில் Guitar ன் ஆக்கிரமிப்பு நம்மை ஆக்கிரமிக்கிறது. பாடலின் பிற்பகுதியில் வரும் சுலோகங்கள் சரிவர பிடிபடவில்லையென்றாலும் வித்தியாசமாகவே இருக்கிறது.
'அன்பில் அவன்' துள்ளலிசை பாடல் வகை. ரஹ்மானின் ஆஸ்தான பாடகி சின்மயி தேவனுடன் இணைந்து பாடியிருக்கிறார். எப்போதும் போல் சின்மயியின் குரல் சில்லென ஒலிக்கிறது. இடையிடையே வரும் மிருதங்கம், organ மற்றும் பிற இசைக்கருவிகளின் சங்கமம்(fusion) வியக்கவைக்கிறது.
கண்ணுக்குள் கண்ணை பாடலில் அ... ஆ வின் மரங்கொத்தியே சாயலும் ரங் தே பசந்தியின் சாயலும் சற்றே தெரிகிறது.
Title Song விண்ணைத் தாண்டி வருவாயா கார்த்திக்கின் மெல்லிய குரலில் வசீகரிக்கிறது.
ஹோசன்னா பாடலில் கவிஞர் தாமரை சொல்ல வந்தது விவிலியத்தில் கூறப்படும் ஓசன்னாவா இல்லை வேறு ஹோசன்னாவா இல்லை ஓ... சனா வா என்பது தான் நான் இப்போது எனக்குள்ளேயே கேட்டுக்கொள்ளும் கேள்வி.
January 07, 2010
ஆஸ்கர் நாயகனிடம் இத்தனை எளிமையா!
மனிதர் மிக எளிமையாக பேசிவிட்டு போனார், சென்னையிலிருக்கும் இசைப்பள்ளியைக் குறித்தும், அவர் பாடல்களுக்கு எவ்விதம் மெட்டமைக்கிறார் போன்ற விடயங்களையும், ஹாலிவுட் வாய்ப்புகளையும் குறித்து விவரித்தார்.
ஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படத்திற்காக கிடைத்த இரு ஆஸ்கர்களுக்கு பின்னர் மேற்கத்திய உலகில் பரவலாக பேசப்பட்டும், எழுதப்பட்டும் வருகிறார் நம் இசைப்புயல்.
ஆஸ்கருக்குப் பின்னர் அமெரிக்காவின் பிரபல ஓப்ரா மற்றும் ஜே லெனோ நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார்; ஆங்கில பாப் இசைக்குழுவான Pussy Cat Dolls உடன் பணியாற்றியிருக்கிறார்; என சொல்லிக்கொண்டே போகலாம்.
(அண்மை காலத்து பேட்டி என்று தான் ஆரம்பத்தில் கருதினேன். ஆனால் அது மே மாதம் 2009 ல் அவர் அளித்த பேட்டி என்று பின்னர் தான் தெரியவந்தது)
எதுவாயினும் ஆங்கில தொலைக்காட்சிகளில் பேட்டியளிப்பதே பெரிய விஷயம் அதுவும் மேற்கத்திய நாடுகள் நம்மவர் ஒருவரை திரும்பிப் பார்க்கிறது என்றால் நமக்கெல்லாம் அது பெருமையே
January 06, 2010
2010 ல் எதிர்பார்க்கும் 10 விடயங்கள்
இன்று (06.01.2010) பிறந்த நாள் காணும் ஆஸ்கர் நாயகன், இசைப்புயல் ரஹ்மான் இரண்டு கிராமி விருதிற்காக பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார். இந்த மாதம் 31 ஆம் தியதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் விழாவில் முடிவு தெரிந்து விடும்.2. உலககோப்பை-ஹாக்கி
கிரிக்கெட்டில் மூழ்கிக் கிடக்கும் இன்றைய இளைஞர்கள் பலருக்கு இந்தியாவின் தேசிய விளையாட்டு கிரிக்கெட்டா ஹாக்கியா என சந்தேகம் வலுப்பதில் ஆச்சரியமில்லை.
பிப்ரவரி 28 முதல் ஆரம்பிக்கும் உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டிகளை இந்த முறை இந்தியாவே நடத்துகிறது. நவம்பர் 2008 மும்பை தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தியாவில் போட்டிகளை நடத்த வேண்டாம் என சர்ச்சைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.3. உலகக்கோப்பை-கால்பந்து
நான்கு வருடமாக எதிர்பார்த்திருந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் ஜூன் 11 ல் ஆரம்பிக்கின்றன. கிரிக்கெட் மேனியா இந்தியாவில் கால்பந்திற்கு என்ன மாதிரியான வரவேற்பு இருக்கும் என பார்ப்போம்.4. இலங்கை-ஜனாதிபதி தேர்தல்
எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது ஜனவரி 26 ஆம் தியதி நடைபெறவிருக்கும் இலங்கை ஜனாதிபதி தேர்தல்.
முன்னாள் ராணுவ தளபதி சரத்தின் திடீர் ராஜினாமாவும், அரசியல் பிரவேசமும், தற்போதைய ஜனாதிபதி மீதான அவரின் குற்றச்சாட்டுகளும் மேலும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன. தினம் மடிந்து வரும் இலங்கைத் தமிழர் நலனுக்கு என்ன செய்யப்போகிறார்க்ள என பார்ப்போம்5. ஷங்கர்,ரஜினி,ஐஸ்,ரஹ்மான்-எந்திரன்
இந்த வருடம் பலராலும் ஆவலாய் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்று எந்திரன். எந்திரனின் எதிர்பார்ப்பை கூட்டியிருப்பது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமல்ல... இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்ட காட்சியமைப்பு, ஆஸ்கர் நாயகன் ரஹ்மானின் இசை, உலக நாயகி ஐஸ்வர்யா, என பலவற்றைப் பட்டியலிடலாம்
எந்திரன் ஏப்ரல் 14 அன்று வெளிவருமா என்பது ஏப்ரல் 14 அன்று தான் தெரியும் :)
6. வேட்டைக்காரன்-கோட்டைக்காரன்!!!
குருவி, வில்லு, வேட்டைக்காரன் என தொடர்ந்து தோல்வியடைந்திருக்கும் நடிகர்!!? விஜய் கோட்டைக்காரனாக கோட்டையில் அமர்வாரா இல்லை பலரைக் காப்பி(copy)யடித்து வேட்டைக்காரன் மாதிரியான நகல் படங்களில் நடிப்பாரா!!! என பார்ப்போம்7. இந்தியா-உலக அரங்கில்
2009 ன் ஆரம்பத்தில் பொருளாதார நெருக்கடிகளால் உலகம் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கையில் ஆசிய நாடுகளான இந்தியாவும், சீனாவும் ஓரளவு தாக்குப்பிடித்து நின்றன.
2009 ன் இறுதியில் வளைகுடா நாடுகளும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படவே பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை.
2010 ல் இந்தியாவின் பங்கு உலக அரங்கில் என்னவாக இருக்கும் குறிப்பாக கோப்பன்ஹேகனைத் தொடர்ந்து நவம்பர் 29 ல் மெக்சிகோ நகரில் நடைபெறவிருக்கும் ஐ.நா வின் பருவநிலை மாநாட்டில் என்ன மாதிரியான நிலைப்பாட்டை எடுப்பார்கள் என பார்ப்போம்.
8. டைகர் உட்ஸ்-கோல்ப்
2009 ன் இறுதியில் பல சிக்கல்களில் மாட்டித் தவித்த உலகின் முன்னணி கோல்ஃப் ஆட்டக்காரர் டைகர் உட்ஸ் தனது விளம்பரதாரர்களை ஒன்றன் பின் ஒன்றாக இழந்தார்.
அதில் குறிப்பிடும் படியானது திராவிட்டை கழட்டி விட்ட அதே GILLETE நிறுவனத்தினர்.2010 ல் மீண்டும் முதலிடத்தைப் பிடிப்பாரா என கோல்ஃப் உலகம் சர்ச்சை செய்து கொண்டிருக்கிறது.
9. ஃபெடரர் Vs நடால்
2009 ல் ஆண்கள் டென்னிஸ் உலகின் தர வரிசையில் முதல் இரு இடங்களை பிடிப்பதற்கு கடும் போட்டி நிலவியது சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் மற்றும் ஸ்பெயினின் ரஃபேல் நடால் இடையே தான்.
எனினும் 2009 ன் இறுதியில் காயங்கள் காரணமாக தர வரிசையில் நடால் சற்றே சறுக்கியது முதலிடத்தை மீண்டும் பிடிப்பதற்கு ஃபெடரருக்கு வாய்ப்பாகிப் போனது. இந்த வருடம் எவ்வாறு அமையும் என பொறுத்திருந்து பார்ப்போம்.10. இந்தியா-பிரிவினைகள்
2009 ல் ஆந்திராவிலும், உத்திரப்பிரதேசத்திலும் தனி மாநிலம் கோரியவர்கள், மகாராஷ்டிராவில் மராத்தி மட்டுமே பேச்சுமொழியாக இருக்க வேண்டும் என நிர்ப்பந்தித்த சிவசேனாவினர் என பிரிவினைகளுக்கு விதையிட்டவர்கள் என்ன செய்வார்கள் எனவும் அவர்களை மத்திய அரசு எவ்விதம் கையாளும் என்பதும் போகப்போகத் தான் தெரியும்.
இவை ஏற்கெனவே எல்லைகளினாலும், மொழிகளினாலும் பிரிந்து கிடக்கும் இந்திய மாநிலங்களையும், மக்களையும் எவ்விதம் பாதிக்குமோ தெரியவில்லை.
December 31, 2009
'எல்லா புகழும் இறைவனுக்கே' 2009-2010

2009-ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களினாலும், நோபல் நாயகன் ராமகிருஷ்ணன் வெங்கட்ராமன் அவர்களினாலும் தமிழர்களையும், தமிழையும் தலைநிமிரச் செய்த ஆண்டு என்ற மகிழ்ச்சி ஒருபுறமிருந்தாலும் இலங்கை விஷயத்தில் சுமூகமான ஒரு தீர்வு இன்னமும் எட்டப்படாத நிலை வருத்தத்தைத் தான் தருகிறது.

உலகமே உற்று நோக்கிக் கொண்டிருந்த அந்த ஆஸ்கர் மேடையில் ரஹ்மான் @ திலீப்குமார் தமிழில் உதிர்த்த " எல்லா புகழும் இறைவனுக்கே " என்ற வாக்கை நேரலையில் கேட்ட தமிழர்கள் அனைவரும் நிச்சயம் புல்லரித்துப் போயிருக்கக்கூடும்.
2010 அனைவருக்கும் அமைதியான, மகிழ்ச்சியான ஆண்டாக அமைய மீண்டும் வாழ்த்துக்கள்.
" எல்லா புகழும் இறைவனுக்கே "
December 03, 2009
ஏ.ஆர்.ரஹ்மான்-கிராமி விருதிற்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்

ஏற்கெனவே கோல்டன் குளோப், BAFTA, Critics Choice, ஆஸ்கார் உள்ளிட்ட பல விருதுகளை வென்றிருக்கிற ஸ்லம்டாக் மில்லினியர் தற்போது அதன் இசைக்காக இசைக்கான அமெரிக்காவின் உயரிய விருதாகக் கருதப்படும் GRAMMY விருதிற்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானிற்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுத் தந்த 'ஜெய் ஹோ' சிறந்த பாடலுக்கான விருதிற்காகவும், சிறந்த இசைக்கான விருதிற்காக ரஹ்மானும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்கள்.

1958 முதல் வழங்கப்பட்டு வரும் Grammy விருதுகள் இசைக்கான ஆஸ்கர் எனவும் அறியப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
ரஹ்மான் கிராமி விருதிற்காக பரிந்துரைக்கபடுவது இது தான் முதல் முறை என தெரிகிறது.
52 ஆவது கிராமி விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள மற்ற இசைத் தொகுப்புகளையும், இசைக்கலைஞர்களையும் இங்கே சுட்டினால் தெரிந்து கொள்ளலாம்.
(இதில் category 81 லும் category 83 லும் ஸ்லம்டாக் மில்லினியரின் பரிந்துரையைக் காணலாம் அதாவது Best Compilation Soundtrack Album For Motion Picture, Television Or Other Visual Media மற்றும் Best Song Written For Motion Picture, Television Or Other Visual Media)
கிராமி விருதுகள் 2010 ஆம் வருடம் ஜனவரி 31 ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வழங்கப்படவிருக்கின்றன.
நன்றி: கிராமி
July 30, 2009
உங்களையும் பாதித்திருக்கக் கூடிய 10 இல்லை 11 விஷயங்கள்
இவற்றில் பல உங்களையும் கவர்ந்திருக்கக்கூடும் என்றே எண்ணுகிறேன்.
1.ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
புன்னகை மன்னன் திரைப்படத்தின் "ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்" பாடலை இப்போது கேட்டாலும் புதிதாகத் தான் தோன்றுகிறது. கவிப்பேரரசு வைரமுத்துவின் மிக எளிதான பாடல் வரிகள், மனதை லயிக்கும் இசைஞானி இளையராஜாவின் மெட்டு, சின்னக்குயில் சித்ராவின் சிறைவைக்கும் குரல் என அசத்தலான ஒரு பாடல் இது.
2.The Corrs-Breathless
அயர்லாந்தின் Andrea Corr, Carolilne Corr, Sharon Corr & Jim Corr என்ற ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூன்று சகோதரிகளும் ஒரு சகோதரனும் இணைந்த பாப் இசைக்குழு தான் THE CORRS. இவர்களின் Leave Me Breathless என்ற பாடலைக் கேட்டு அசந்து போனேன்.
குறிப்பாக இந்த குழுவில் drum இசைக்கும் Caroline ன் திறமையைப் பார்த்து இன்றும் மலைத்து நிற்கிறேன். ஒரு பெண் அத்தனை வேகமாக drum இசைக்கவியலுமா என ஆச்சரியப்படுகிறேன். இவரின் அதிரடியை நீங்களும் கொஞ்சம் பாருங்கள்.
3.911
ஒரு மனிதனின்/சமூகத்தின் கோபம் இத்தனை பெரிய விளைவுகளை ஏற்படுத்துமா என்ற கேள்வியோடு எனக்குள்ளே மேலும் பல கேள்விகளை எழுப்பிய சம்பவம் 9.11.2001 ல் அல்-கொய்தாவால் நிகழ்த்தப்பட்ட அமெரிக்க தாக்குதல்.
4.உயிரே-1998
இசைப்புயலின் இசையென்றால் கொள்ளைப் பிரியம்.இசைப்புயல் இசையமைத்த திரைப்படங்களின் ஒலிநாடா (cassette) எப்போது வெளிவருமென்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன். 1998 ல் உயிரே வெளியாகியிருந்த சமயம் அது.
ஒலிநாடா வாங்க சென்ற வேகத்தில் இருசக்கர வாகனத்தை No Parking ல் நிறுத்தி விட்டோம் நானும் எனது மைத்துனரும்; மறுநாள் நீதிமன்றம் வரை சென்று அபராதம் கட்ட வேண்டிய நிலைமை வந்ததை நினைத்து இன்றும் சிரிக்கத் தோன்றுகிறது.
5.தர்மபுரி பேருந்து எரிப்பு-2.2.2000தர்மபுரியில் கல்லூரி இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்த நேரம் அது. அரசியல் பிரச்சினை காரணமாக கோவை வேளாண் பல்கலைகழக பேருந்திற்கு சில கயவர்கள் தீ வைப்பும் ,மூன்று மாணவிகளின் மரணமும் அதன் பின்னர் தர்மபுரி அரசு பொது மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த மாணவர்களுக்கு பணிவிடைகள் செய்ததும் இன்றும் மறக்கவியலாது. அனைத்து அரசியல் கட்சிகளின் மீதும் வெறுப்பு தோன்றிய நாள் அது.
6.முதல் காதல்
பெரும்பாலானவர்களின் முதல் காதல் போன்றே எனது காதலும் ......... ஆமா அதே தான்... கவுந்து போச்சு.
7.இணையம்,பதிவுலகம்,கூகுள், ஆர்குட்
பத்து வருஷத்துக்கு முன்னால இது மாதிரி எதும் எழுதினா நான் மட்டும் தான் உக்காந்து ரசிக்கணும் sorry கொடுமயேன்னு உக்காந்து படிக்கணும், ஆனா இப்போ முகமே தெரியாத பல நண்பர்களை இணையம் தந்திருக்கிறது இந்த கொடுமய எல்லாம் சகிக்க.
பத்து நொடிகளுக்குள்ளாக பத்தாயிரம் இணையபக்கங்களை திரட்டித்தருகிறது Google.சில காலம் காணாமல் போன முகங்களை எல்லாம் orkut ம், facebook ம் தேடித்தருகிறது.இப்படியெல்லாம் உலகம் மாறிப்போகும் என பத்து வருடங்களுக்கு முன் நினைத்துக்கூட பார்க்கவில்லை.
8.Guitar
90' களில் Guitar இசைக்கருவியின் மீது அத்தனை ஆர்வம். அதன் பின்னர் நாகர்கோவிலில் 1994ஆம் ஆண்டு எனது நண்பர்களும் இரட்டைப்பிறவிகளுமான வால்டர் மற்றும் மோகனின் மூலம் இசைக்க கற்றுக்கொண்டது கனவை நனவாக்கிய ஒரு எதிர்பாராத நிகழ்வு என்று கூட கூறலாம்.

9.சச்சின்-1998

சச்சினின் ஆட்டத்தை ரசிக்க சொல்லித்தரவா வேண்டும். குறிப்பாக 1998 ஆம் ஆண்டு ஷார்ஜாவில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அவர் அடித்த இரண்டு அதிரடி சதங்கள் இன்றும் நினைவிலிருக்கிறது.
இறுதிப் போட்டியின் மறுநாள் நான் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்பதை கூட பொருட்படுத்தாமல் நண்பன் வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டி முன் முடங்கிக் கிடந்தேன்
10.Manchester United-சர்.அலெக்ஸ் ஃபெர்குசன்,பெக்காம்,
இங்கிலாந்து எனக்கு பிடித்த நாடு என்பதால் அங்கு உள்ள கால்பந்து அணிகளையும், வீரர்களையும் அதிகம் கவனிப்பது உண்டு. Manchester United அணியையும் அதன் மேலாளரான சர்.அலெக்ஸ் ஃபெர்குசனையும் கண்டு வியப்பதுண்டு. இத்தனை வயதிலும் அயராமல் உழைக்கும் இந்த மேலாளரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை பல.
அதே போன்று Manchester United அணியின் முன்னாள் தலைவரான டேவிட் பெக்காமின் திறமையும் ஆச்சரியப்பட வைக்கும்.
11.இந்தியா-தமிழகம்-நம்ம ஊரு
நமக்கு நெருக்கமாக இருக்கும் ஒருவரையோ அல்லது ஒரு இடத்தையோ விட்டு நாம் அகலும் போது தான் பிரிவின் கொடுமையை உணர்வோம்.அந்த வகையில் படிப்பினிமித்தமும், பணியினிமித்தமும் சொந்த ஊரை,தமிழகத்தை,இந்தியாவை விட்டு அகன்று நின்ற போது தான் அந்த வலியை உணர்ந்தேன்.
சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா...
இப்படி கிறுக்குகிறவன் புத்தகங்களையும்,எழுத்தாளர்களையும் பட்டியலிடாமல் போனது ஏனென்றால் முறையான புத்தக வாசிப்புகள் இல்லாமையால் தான். எனினும் எம்.எஸ்.உதயமூர்த்தி, ஜெயகாந்தன் போன்றோரின் படைப்புகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்திருக்கிறேன். பாரதியார் கவிதைகளையும் படித்ததுண்டு. முறையாக இப்போது தான் படிக்கத்தொடங்கி உள்ளேன்.
இந்த நேர்மை உங்களுக்கு பிடிச்சிருக்கும்ணு நினைக்கிறேன் :))
May 09, 2009
இளமையில் சாதித்தவர்கள் தரும் நம்பிக்கை
இத்தனைக்கும் 11 வயதில் வளர்ச்சிக்கு காரணமான ஹார்மோன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவுக்கு கூட வசதியில்லாமலிருந்தவர்.புதிய மரடோனா என்றும்,மெஸ்ஸிடோனா என்ற பட்டப்பெயரும் இவருக்கு உண்டு.மெஸ்ஸி,மரடோனாவுக்கு நிகராக விளையாடுவதை மரடோனாவே ஒப்புக்கொண்டுள்ளார்.இருவரும் அர்ஜென்டினாவை சார்ந்தவர்கள் என்பது அர்ஜென்டினருக்கு பெருமை சேர்க்கும் விஷயம்.
ஆடுகளத்தில் பிற வீரர்களை போல் கால்களில் கவனம் செலுத்தாமல் கால்பந்தில் மட்டுமே கவனம் செலுத்தும் சாதுவானவர்.
ரஃபேல் நடால்(Rafael Nadal)
ராஃபா என டென்னிஸ் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஸ்பெயினைச் சார்ந்த டென்னிஸ் வீரர்.23 வயதே ஆகியிருக்கும் இவர் தற்பொழுது உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரர். நான்கரை வருடமாக(2004 முதல் 2008வரை) தரவரிசையில் முதலிடத்திலிருந்த சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை தோற்கடிக்க எவருமே இல்லை என்றிருந்ததை மாற்றி எழுதியதும் இவர் தான்.இந்த வருடம் மட்டும் இதுவரை 4 ஏ.டி.பி மற்றும் ஒரு கிராண்ஸ்லாம் உட்பட 5 பட்டங்களை வென்றுள்ளார்.
களிமண் தரை மைதானங்களின் மன்னன் (king of clay court) என்று அறியப்படும் நடால் களிமண் தரை மைதானமுடைய ஃப்ரெஞ்ச் ஓபன் பட்டங்களை 2005 முதல் 2008 வரை தொடர்ந்து நான்கு முறை பெற்றுள்ளார்.இதில் மூன்று வருடம் தொடர்ச்சியாக இவரிடம் தோல்வியடைந்தது ஃபெடரர்.
புல் தரை மைதானங்களில் அதிகம் சோபிக்காத நடால் கடந்த ஆண்டின் விம்பிள்டன் போட்டியில் ரோஜர் ஃபெடரரை தோற்கடித்து அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.
ரோஜர் ஃபெடரர்

14 வயதில் சுவிட்சர்லாந்தின் சாம்பியன் ஆனவர் ஃபெடரர்.தற்சமயம் உலக டென்னிஸ் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருப்பவர்.நான்கரை வருடமாக(2004 முதல் 2008வரை) தரவரிசையில் முதலிடத்திலிருந்து சாதனை செய்தார்.
இதுவரை 13 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சரித்திரத்தில் இடம் பிடித்திருக்கிறார்.14 பட்டங்கள் பெற்ற அமெரிக்காவின் பீட் சாம்ப்ராஸின் சாதனையை முறியடிக்க இனி ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டமே எஞ்சியுள்ளது.
சச்சின் டெண்டுல்கர்
சச்சினின் சாதனைகளை பட்டியலிட இந்த பக்கங்கள் போதாது.அவரின் குறிப்பிடும் படியான சில சாதனைகள் இங்கே.
லியாண்டர் பயஸ்
16 ஆவது வயதிலேயே டென்னிஸ் மட்டையை பிடித்தவர்.ஒலிம்பிக்கில் டென்னிசிற்காக வெண்கலப் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீரர்.தனது 17 ஆவது வயதிலேயே லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் ஜூனியர் பட்டம் வென்றவர் அதோடு 1990 ல் உலக ஜூனியர் டென்னிசின் தர வரிசையில் முதலிடமும் பிடித்தார்.
இதுவரை 8 இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கிறார் பயஸ்.மகேஷ் பூபதியுடன் 1999 ல் சர்வதேச இரட்டையர் தரவரிசையில் முதலிடம் பெற்றிருந்தார்.
ஏ.ஆர்.ரஹ்மான்
26 ஆவது வயதிலேயே திரைப்படத்திற்கு இசையமைத்தார் ஆஸ்கர் நாயகனான ரஹ்மான். அறிமுக படத்திலேயே சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழக அரசின் விருதும்,தேசிய விருதும் பெற்ற ஒரே இசையமைப்பாளர் என்ற சிறப்பைப் பெற்றார்.அவரின் பிற சாதனைகள் இங்கே.
இளம் வயதிலேயே இவர்கள் பெற்ற உயர்ந்த விருதுகளுக்கும்,பதக்கங்களுக்கும்,புகழுக்கும் காரணம் அவர்களின் முழுமையான ஈடுபாடும்,தன்னம்பிக்கையும்,விடாமுயற்சியும்,கடின உழைப்புமேயாகும்.இவற்றை இன்றைய இளைய சமுதாயத்தினர் மட்டுமல்லாமல் வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என எண்ணுபவர்கள் எவரும் கடைபிடிப்பார்களெனில்,வெற்றி நிச்சயமே.
May 04, 2009
ஸ்லம்டாக் மில்லினியருக்குப் பின்...
ஸ்வரூப் விகாஸ் அவர்களின் கதையில் டேனி போய்ல் இயக்கி 8ஆஸ்கர் விருதுகளை வென்று பெயரும் புகழும் அடைந்திருக்கும் ஸ்லம் டாக் மில்லினியர் திரைப்படத்திற்கு ஆரம்பத்தில் சரியான அறிமுகம் கூட கிடைக்கவில்லை.விநியோகிப்பாளர்களான ‘வார்னர் பிரதர்ஸ்’ ஸ்லம் டாக் மில்லினியரை திரை அரங்குகளில் வெளியிடுவதால் லாபம் ஈட்டும் என்ற நம்பிக்கையே வைக்கவில்லையாம்.அமெரிக்க திரை அரங்குகளில் வெளியிடாமல் நேரடியாக DVDஆக வெளியிடலாம் எனவும் முதலில் யோசித்திருக்கிறார்கள்.
பின்னர் செப்டம்பர் 2008, கனடாவில் people's choice விருதில் ஆரம்பித்த ஸ்லம்டாக் மில்லியனிரின் புகழ் திரைப்படத்தை மட்டுமல்லாது இதில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞரையும் இன்று மேலும் மேலும் உயரங்களை எட்டச் செய்திருக்கிறது.
திரைப்படத்தில் குரோர்பதி நிகழ்ச்சி நடத்துபவராக நடித்த அனில் கபூர் தற்பொழுது அமெரிக்கா முழுவதும் பிரபலமாகியிருக்கிறார்.அதன் உச்ச கட்டமாக அமெரிக்காவில் எம்மி,கிராமி விருதுகளை வென்ற ஃபாக்ஸ் சானலின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான '24'ல் முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இசைப்புயல் ரஹ்மானுக்கும்,ரசூல் பூக்குட்டிக்கும் ஹாலிவுட்டில் இருந்து பல வாய்ப்புகள் வந்த வண்ணம் இருப்பதாக கேள்விப்பட நேரிடுகிறது.

ஹாலிவுட்டின் பார்வை பாலிவுட்டின் மீதும் கோடம்பாக்கத்தின் மீதும் வெகுவாக திரும்பியிருப்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயம்.அமீர் கானுடன் இணைந்து ஒரு திரைப்படம் செய்ய இருக்கிறார் என்றும் வதந்திகள் கிளம்பியுள்ளன. அமீர்கானின் 'Taare Zameen Par' பார்த்து விட்டு அருமை என புகழ்ந்திருக்கிறார் டேனி.
படப்பிடிப்பு நடத்தப்பட்ட மும்பை சேரிப் பகுதியை சீர்ப்படுத்தும் விதம் 900,000 அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஸ்லம்டாக் மில்லினியரின் தயாரிப்பாளர்கள் அறிவித்திருக்கின்றனர்;
மும்பை சேரிப்பகுதி மூலம் நாங்கள் பெற்ற புகழுக்கு நன்றி தெரிவிக்கும் விதம் அந்த பகுதியின் குழந்தைகளின் உண்மையான வாழ்வில் முன்னேற்றத்தை கொண்டுவருவதே சரியாகும் என இயக்குனர் டேனி போய்லும் தெரிவித்திருக்கிறார்.
இந்த திரைப்படம் மூலம் தான் பெற்ற ஊதியம் முழுவதையும் அனில்கபூர் சேரியின் முன்னேற்றத்திற்காக கொடுத்திருப்பதும் பாராட்டப்படத் தக்கது.
திரைப்படத்தில் நடித்த ருபினாவிற்கும்,அசாருதீனுக்கும் உதவி செய்யும் வகையில் ஜெய்ஹோ டிரஸ்ட் என்ற பெயரில் ஒரு அமைப்பையும் உருவாக்கி பண உதவிகள் செய்து வருகின்றது ஸ்லம்டாக் திரைப்படக்குழு.
நாயகியான ஃப்ரீடா பின்டோ இன்று பல ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் ஒப்பந்தமாகியிருப்பதோடு காதலிலும் விழுந்திருக்கிறார்.உடன் நடித்த தேவ் படேலும் இவரும் நெருங்கி பழகி வருவதாக ஆரம்பத்தில் வந்த செய்திகளை இருவரும் மறுத்தாலும் தற்பொழுது ஒப்புக் கொண்டுள்ளனர். .
இந்தியாவின் ஏழ்மையையும்,சேரிகளையும் விற்று பிழைக்கிறார்கள் என்று ஒரு சாரார் இன்னமும் ஸ்லம்டாக் திரைப்படத்தையும்,திரைப்படக் குழுவையும் குறை சொல்லிக் கொண்டிருக்கத் தான் செய்கிறார்கள்.
இதில் நடித்த சிறுமி ருபீனாவை மடோனா உள்ளிட்ட அமெரிக்கர்கள் பலரும்,தத்து எடுக்க தயாராக இருப்பதாகவும்,பணத்திற்காக அவளது தந்தையும் ருபினாவை விற்பதற்கு!! சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கடந்த மாதம் பரபரப்பு ஏற்பட்டது.
இப்படியாக ஸ்லம்டாக் மில்லினியர்,சிலரின் பார்வைக்கு பணமாக மட்டுமே தெரிகையில் பலரின் பார்வையில் நல்ல குணமாக தெரிகிறது;ஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படக்குழு செய்து வரும் நற்பணிகளுக்கு வாழ்த்துக்கள்.
அவர்கள் செலவிடும் பணம் சரியான வழியில் ஏழைக்குழந்தைகளை சென்றடைந்தால் மகிழ்ச்சியே.இந்தியரின் திறமைகளை உலகறிய செய்யக் காரணமாகிய விகாஸ் ஸ்வரூப் அவர்களுக்கும் டேனி போய்ல் உள்ளிட்ட ஸ்லம்டாக் திரைப்படக்குழுவிற்கும் நன்றி.
March 22, 2009
கேரளத்தவர்கள் ரசிக்கும் இளையராஜாவும்!ரஹ்மானும்!
ரஹ்மானின் "மலர்களே"
இதில் சோனியா உடன் பாடியிருக்கும் நஜிம் 2007-ஸ்டார் சிங்கரின் சாம்பியன் ஆவார்.தற்போது பல திரைப்படங்களில் பாடி வருகிறார்.சோனியா மலையாளி என்ற சாயல் கொஞ்சம் கூட இல்லாமல் அருமையாக பாடியிருக்கிறார்.
இளையராஜாவின்"நின்னுக்கோரி வரணும்"
March 02, 2009
ஓப்ரா நிகழ்ச்சியில் ரஹ்மானின் ஜெய்ஹோ
நிகழ்ச்சியில் ரஹ்மானின் பெயரை கூட சரியாக உச்சரிக்க வரவில்லை ஓப்ராவிற்கு... ஆனால் எப்படியோ ஜெய்ஹோவை மட்டும் சரியாக உச்சரித்து விட்டார்.(அமெரிக்கர்கள் உச்சரிக்கும் அளவிற்கு புகழ் பெற்றுள்ளது குல்சாரின் ஜெய்ஹோ வரிகள்)காணொளியை இங்கே இணைத்துள்ளேன்
ரஹ்மானின் (அமெரிக்க) காட்டில மழை... எல்லா புகழும் ரஹ்மானுக்கே
February 25, 2009
ஆங்கிலத்தில் ஸ்லம்டாக் மில்லினியரின் ஜெய் ஹோ பாடல்

February 24, 2009
81-ஆவது ஆஸ்கர் சில நினைவுகள்
Actors Madhur Mittal (bottom) and Dev Patel of Slumdog Millionaire
Child Artists of Slumdog Millionaire
Dev Patel, Madhur Mittal, Freida Pinto, Irrfan Khan and Anil Kapoor
Dev Patel and Freida Pinto at the Red Carpet
Freida Pinto with the Child Artist from Slumdog Millionaire
Best Picture-Slumdog Millionaire,Producer Christian Colson (L) with Steven Spielberg
Best Director-Danny Boyle for Slumdog Millionaire
Best Music Score and Best Song-AR Rahman for Slumdog Millionaire alongside Gulzar
Best Sound Mixing-Ian Tapp, Richard Pryke and Resul Pookutty For Slumdog Millionaire
Best Film Editing-Chris Dickens for Slumdog Millionaire
Best Director of Photography-Anthony Dod Mantle for Slumdog Millionaire
Best Adapted Screenplay-Simon Beaufoy for Slumdog Millionaire
Best Short Documentary-Megan Mylan for Smile Pinky
Best Actress-Kate Winslet for The Reader
ARR
2 Time Academy Award winner Meryl Streep Nominated for Best Actress for the film Doubt
Mickey Rourke,Nominated for Best Actor for The Wrestler
Maria Halle Berry-The only African-American woman to win an Academy (OSCAR)Award-(2001)
Best supporting Actress-Spain's Penelope Cruz for Vicky Cristina Barcelona
Best Actor-Sean Penn for Milk
Best Supporting Actor-An emotional Heath Ledger's Family Receiving the award for DarkKnight
Academy Award Winner(2002) Nicole Kidman
Best Sound Editing-(War of the worlds fame) Richard King for DarkKnight
Daniel Craig
Best Makeup-Greg Cannom forThe Curious Case of Benjamin Button
Brad Pitt and Academy Award winner(2000) Angelina Jolie at the Red Carpet.Angie Nominated for Best Actress for the film Changeling
Musician,Singer,Pianist and 5 Time Grammy winner Alicia Keys
Sean Penn With Best Leading Actress Kate and Best Supporting Actress Penelope
Singer,Musician Beyonce Knowles at the Red Carpet
Best original Screenplay-Dustin Lance Black For Milk 

















%3B+Victor+J.+Zolfo+(Set+Decoration).jpg)
_CostumeDesign+Michael+O%27Connor.jpg)
