March 27, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா-JESSIE-நான்

இசை வெளியீட்டின் போதே அதிகம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் என்னையும் தீண்டி இருப்பதில் ஆச்சரியமில்லை, அதற்கு காரணங்கள் இல்லாமலுமில்லை. வெளிநாடு ஒன்றில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் திரைப்பட பாடல்கள் 'விண்ணைத்தாண்டி வருவாயா' விற்காகத் தானிருக்கும்.

ஆஸ்கருக்கு பின்னர் வெளியாகிய ரஹ்மானின் முதல் பாடல்கள் என்பதால் பாடல்களும் அதிகம் வரவேற்பை ஏற்படுத்தியிருந்தன. குறிப்பாக ஹோசன்னா பலரை முணுமுணுக்கச் செய்திருந்தது. ஏனைய பாடல்களும் ரசிக்கும் படியாகவே இருந்தது.பாடல்களைக் குறித்த எனது எண்ணங்களை முந்தைய பதிவான இங்கே படிக்கலாம்.

விண்ணைத்தாண்டி வருவாயா என்பதன் ஆங்கில எழுத்து வடிவம், நான் எதிர்பாராத போல/ஆனால் எப்போதும் எதிர்பார்க்கும் விதம் சரியான ஆங்கில எழுத்துக்களுடன் "VINNAITHAANDI VARUVAAYAA" என இருந்தது ஆச்சரியத்தை எற்படுத்தியிருந்தது. 


இதனை VINNAITHANDI VARUVAYA-"விண்ணை தண்டி வருவய" என கூட எழுதியிருக்கக் கூடும்(அப்படித்தான் அனைத்து திரைப்படத் தலைப்புகளும், பாடல்களும், பலரின் பெயர்களும் கூட எழுதப்பட்டு வருகின்றன. உதாரணம் சூப்பர் ஸ்டாரின் SIVAJI-சிவாஜி, இதனை 'சிவஜி' என்று வாசிப்பதா? இல்லை 'சிவாஜி' என்று வாசிப்பதா?)  

திரைப்படத்தில் நான் கவனித்த மற்றுமொரு விஷயம்... TITLE ஓடும் போது திரைப்பட கலைஞர்களின் பெயர்கள் தமிழில் வந்தால் அவற்றின் பிம்பம் ஆங்கிலத்திலும், ஆங்கில பெயர்களின் பிம்பம் தமிழிலும் வரும்படி வடிவமைக்கப்பட்டது.  இது இயக்குனரின் சிந்தனையா இல்லை வேறு எவரின் சிந்தனையா என்பது தெரியவில்லை. எனினும்... ரசிக்க வைத்தது.
த்ரிஷாவும், சிம்புவும், இயல்பாக நடித்திருப்பதாகத் தான் உணர்ந்தேன். குறிப்பாக த்ரிஷா Jessie கதாபாத்திரத்தில் சிறப்பாகச் செய்திருக்கிறார்.  காதலினால் வரும் வலிகளையும்; காதலை அடைய ஒரு பெண் எத்தனை விதமான தடைகளை தாண்ட வேண்டியிருக்கிறது என்பதை இயக்குனர் சொல்லியிருக்கும் விதம் அருமை. உண்மையும் அதுவே. 

Jessie கதாபாத்திரம் என்னை அதிகம் பாதித்திருப்பதற்கு முக்கியமான வேறொரு காரணம் உண்டு. Jessie என்ற அதே பெயரில் இருக்கும் எனது நண்பி தான் அது.

அவரும் கேரளத்தைச் சார்ந்தவர் தான்; அவருக்கும் திரைப்படம் பிடிக்காது. அவள் பாராட்டின, (பாராட்டிவரும்) நட்புக்கு இணை இன்றுவரை ஏதுமில்லை. அவளது வீட்டிற்கு இருமுறை சென்றிருக்கிறேன். இன்று கூட அவளது பெற்றோர்கள் கனிவாக இருக்கிறார்கள்

ஏனோ...காதலிக்க வேண்டும் என அப்போது(கல்லூரி நாட்களில்) தோன்றவில்லை. Just Friends ஆ இருப்போம் என்ற விண்ணைத்தாண்டி வருவாயாவின் வசனத்திற்கு ஏற்ப இன்றும் நண்பர்களாக இருந்து வருகிறோம்.

விண்ணைத்தாண்டி வருவாயா சிலருக்கு பிடிக்காமல் போயிருக்கிறது. காரணம்... கதாநாயகனும், நாயகியும் ஒன்று சேரவில்லையென்பதே!

எனினும் காதலின் வலியும், அதனை இயக்குனர் சொல்லியிருந்த விதமும், நான் அதிகம் ரசிக்கும் ஆலப்புழையின் அழகும், பின்னணி இசையும், த்ரிஷாவிற்காக ஒலித்த 'சின்மயி'யின் குரலும் எனக்கு பிடித்திருந்தது. ஜீன்ஸ் திரைப்படத்தில் மெல்லிய பின்னணியில் வரும் 'நி ச ரி ச' Humming ற்கு பிறகு ரஹ்மானின் இசையில் நான் அதிகம் மயங்கியது ஹோசன்னா-ஏன் இதயம் உடைத்தாய் Humming ற்குத் தான்.

 ஜீன்ஸ்-'நி ச ரி ச'
ஆலப்புழையின் அழகு
இது JESSY எனக்களித்த அவளது கைவண்ணங்கள்

10 comments:

Chitra said...

நட்பில், விண்ணை தாண்டி விட்டீர்கள்!

GERSHOM said...

உங்க ஜெஸி 'க்கு கல்யாணம் ஆயிடிச்சா?

சாஷீ said...

அருமை அருமை,,இப்புடி ஒரு flash back ஆ ,பரவா இல்ல கெளதம் மேனனுக்கு நன்றி பல உண்மைகதைகள் வெளிவருகிறது .நல்ல நட்பு {ச்சே வட போயி {போச்சே } }

Anonymous said...

லூஸுப் பயலே...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

வித்தியாசமான விமர்சனம்!!
அழகான நட்பு,,,தொடர வாழ்த்துக்கள்!!

பகிர்வுக்கு நன்றி!!

எட்வின் said...

@ Chitra
@ GERSHOM
@ சாஷீ

நன்றி.

கெர்ஷோம், அவருக்கு திருமணம் ஆகி விட்டது, அவரது குடும்பத்தினர் அனைவரும் இன்னமும் அன்பாக பழகுகிறார்கள் .

எட்வின் said...

@ அனானி...

லூசுப்பயலேன்னு சொல்றதுக்கு கொஞ்சம் தில் வேணும். அது உங்க கிட்ட இல்ல, உங்கள எல்லாம் நெனச்சா சிரிக்கிறதா தவிர வேற ஒண்ணும் தோணல. உங்களின் கோழைத்தனம் பாராட்டப்பட வேண்டியது !!

எட்வின் said...

@ ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫

நன்றி .

விமர்சனம் செய்யும் அளவுக்கு இன்னமும் அனுபவம் போதாது அன்பரே, என் மனதில் பட்டதை பகிர்ந்திருக்கிறேன், அவ்வளவே.

GERSHOM said...

எல்லாருக்கும் சூடான பதில்கள்...மிகவும் ரசித்தேன் , குறிப்பாக அனாமத்து பயலுக்கான பதிலை...ஹா ஹா ஹா !

பொற்கோ said...

ஜெசி, கேரள நண்பி ஜெசி இணைப்பு மிக அருமை!

Post a Comment

Related Posts with Thumbnails