இளம் டென்னிஸ் நட்சத்திரம், உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரர் நடாலின் காட்டில் இப்போது மழை தான்.ஒருபுறம் டென்னிஸ் ஆட மறுபுறம் வீடியோக்களிலும் ஆடத் தொடங்கி விட்டார் போலும்.
கொலம்பியா பாப் பாடகியும் நடிகையுமான ஷகிராவுடன் (பிப்ரவரி 2010) GYPSY என்ற ஆங்கில பாப் பாடல் ஒன்றில் ராஃபா நடித்திருக்கிறார். 33 ம் 23 ம் சில இடங்களில் மிக நெருக்கமாக நடித்திருக்கிறார்கள்!! Gypsy என்றால் பிழைப்பிற்காக ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு (நடால் மாதிரி, நம்மள மாதிரி கூட) அடிக்கடி இடம்பெயர்பவர் எனலாம்.
அதனாலேயே இந்த இசைத் தொகுப்பிற்கு நடாலை தெரிவு செய்ததாக ஷகிரா தெரிவித்திருக்கிறார். பல விஷயங்களில் ஷகிராவின் வாழ்க்கையைப் போன்றே நடாலின் வாழ்க்கையும் அமைந்திருப்பதாகவும் சொல்லிப் போகிறார்.
பாடல் இங்கே
shakira - gypsy (live).mp3 | ||
Found at bee mp3 search engine |
வாழ்க்கையை அது போகின்ற வழியிலேயே எடுத்துக்கொள்வேன். இடையில் நீ பிரிந்தாலும் அதனால் வேதனைப்படாமல் வாழ்க்கை போகிற பாதையில் செல்வேன் ஏனென்றால் நான் பயணிக்கிறவள் என சொல்லிப்போகிறார் ஷகிரா. ஆனா இது எதுவும் பாடல் பார்க்கும் போது புரியாது... (ஏனென்று முன்னாடியே சொல்லிவிட்டேன்) பாடல் வரிகளை தேடிப்பிடித்த பின் புரிந்தவை இவை
ஷகிராவின் Laundry Service (2001)ஆல்பத்தின் Whenever, Wherever பாடல் தான் என்னை ஆரம்பத்தில் அவரது பாடல்களை கேட்கத்தூண்டியது. அதன் பின்னர் Hips don't Lie (2006) மிகப்பெரிய ஹிட். மொழி புரியவில்லையென்றாலும் அவரது Latin POP, Salsa, பாடல்களின் இசைக்கு ரசிகனாகிப்போனேன்.
இந்த Gypsy பாடலில் கூட Mouth Organ இசைக்கருவி அருமையாக இசைக்கப்பட்டிருக்கும். ஷகிராவுக்கு பாடகி, நடிகை, நடனக்கலைஞர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஐ.நாவின் நல்லெண்ண தூதுவர், எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் உண்டு.
GYPSY காணொளி
நடால் ஸ்பெயினைச் சார்ந்தவர்.கால்பந்திலும் ஸ்பெயினைச் சார்ந்த ரியல் மேட்ரிட், பார்சிலோனா club அணிகள் அருமையாக ஆடக்கூடியவை.
2008 ன் ஐரோப்பிய(யூரோ) கால்பந்து சாம்பியன் பட்டத்தையும் ஸ்பெயின் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில தினங்களில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் துவங்கவிருக்கும் நிலையில் கருத்துக் கணிப்புகள் பெரும்பாலானவை ஸ்பெயின் அல்லது அர்ஜென்டினா அணிகள் தான் பட்டம் வெல்லும் என தெரிவிக்கின்றன.
இனியெஸ்டா, பிக்கே, புயோல், ரேமோஸ் என தடுப்பாட்ட வீரர்களும், டோரஸ், பெட்ரோ, வில்லா என முன்கள வீரர்களும் தொடர்ந்து அருமையாக ஆடி வருவது அவர்களுக்கு சாதகம் தான். பந்து காப்பாளர்களான ரெய்னா, கேசியாஸ், வால்டெஸும் ஸ்பெயினுக்கு மேலும் வலு சேர்ப்பார்கள்.
ஸ்பெயின் கடைசி பிரிவான 'H' ல் சுவிட்சர்லாந்து,ஹோன்டுராஸ், சிலி ஆகிய அணிகளுடன் உள்ளது. இதை விட எளிதான பிரிவு வேறு எதுவும் இல்லை என்கிறார்கள்.
2007 முதல் 2009 வரை ஸ்பெயின் ஆடிய 35 ஆட்டங்களிலும் தோல்வியே அடையாமல் இருந்தது இன்றும் உலக சாதனையாகக் கருதப்படுகிறது. ஸ்பெயினின் வெற்றி வாய்ப்பு எப்படி அமைகிறது என பார்க்கலாம்.
2 comments:
தகவலுக்கு நன்றி.
@manjoorraja
நன்றிங்க... அருமையா இருக்கு அந்த excel அட்டவணை. கோல் எத்தனை என்று பதிவு செய்தால் குறிப்பிட்ட அந்த அணிக்கான புள்ளிகளும் அட்டவணையில் தானாகவே சேர்ந்து விடுகிறது.
Post a Comment