December 17, 2009

கிரிக்கெட்டிலுமா மொள்ளமாரித்தனம் !

SCG-Sydney

கிரிக்கெட் கிரிக்கெட் என்று கிறுக்கு பிடித்து திரிந்தது ஒரு காலம். இப்போது அதனை குறைத்துக் கொண்டிருக்கிறேன்.

அதற்கு காரணங்களும் இல்லாமல் இல்லை. அதிகமாக ஆடப்படும் ஆட்டங்கள் ஒரு காரணமென்றால் மறுபுறம் வியாபாரமாகி வரும் கிரிக்கெட்டும் அதன் மீதுள்ள விருப்பத்தைக் குறைக்கவே செய்திருக்கிறது

வீரர்கள் தேர்வும், அதில் அரங்கேறி வரும் அரசியல் ஆட்டங்களும் மேலும் வெறுப்பைத் தான் விதைக்கின்றன.

இது போதாதென்று ஒரு ஆட்டத்தில் அதிக ஓட்டங்கள் இருந்தால் தான் கிரிக்கெட்டை ரசிப்பார்கள் என்பதற்காக சமீபகாலமாக கிரிக்கெட் மைதானங்கள் அதன் வழக்கமான சுற்றளவில் இருந்து குறைக்கப்பட்டு ஆட்டங்கள் நடத்தப்படுவது இன்னும் வேடிக்கையைத் தருகிறது.

உதாரணமாக இரு தினங்களுக்கு முன்னர் இந்தியா-இலங்கை ஆட்டம் நடைபெற்ற ராஜ்கோட் மைதானத்தைக் கூறலாம். ஐ.பி.எல் T20 ஆட்டங்கள் நடைபெறும் மைதானங்களைக் குறித்து சொல்லவே வேண்டாம்.

கிரிக்கெட் மைதானங்களுக்கென்று ஒரு வரையறை இல்லாததே இதற்கு காரணம். இத்தகைய மொள்ளமாரித்தனம் வேறு எந்த விளையாட்டிலும் இருப்பதாகத் தெரியவில்லை.

பதிவரும், தோழருமான லோஷன் அவர்கள் கூட தனது பதிவில் கடந்த இந்திய-இலங்கை ஆட்டத்தின் அதிக ஓட்டக்குவிப்பிற்கு காரணம், தட்டையான மைதானம் (flat pitch) என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பின்னே என்னத்திற்கு அனைத்து ஆட்டங்களுக்கும் ஒரே மாதிரியான புள்ளி விவரங்களை வெளியிடுகிறார்களோ! சிறிய மைதானத்தில் எடுக்கப்பட்ட அதிக ஓட்டம் இது எனவும் பெரிய மைதானத்தில் எடுக்கப்பட்ட அதிக ஓட்டம் இது எனவும் வெளியிடலாம் தானே!!?

நடத்துங்கய்யா நடத்துங்க

7 comments:

ரமேஷ் said...

சரியாகச் சொன்னீர்கள்

THANGA MANI said...

நன்று.நன்றி.
வாழ்க வளமுடன்.

ARV Loshan said...

நல்லா சொன்னீங்க எட்வின்.. ஆனால் ராஜ்கோட் மைதான சுற்றளவைப் பற்றி எங்கும் பெரிதாகத் தகவல்கள் காணப்படவில்லை.
உறுதிப்படுத்த முடியாததால் தான் நான் அதுபற்றி எதவும் குறிப்பிடவில்லை.

கிரிக்கெட் இப்போது பணம் கொழிக்கும் ஆட்டம்.

ஆனால் ஒன்று, நியூ சீலாந்திலும் சிறிய மைதானங்கள் இருக்கின்றன. அங்கு உள்ள சம பலன் தரும் ஆடுகளங்கள் அதிக ஓட்டங்கள் குவிக்கவிடாது.இதுபோலவே இலங்கையின் கண்டி அஸ்கிரிய மைதானமும்.
இந்தியா தான் எட்வின் குறிப்பிட்ட 'மொள்ளமாரித்தனத்தில்' முன்னணியில் இருக்கிறது.

எட்வின் said...

@ ரமேஷ், எப்பூடி, தங்கமணி... நன்றி அன்பர்களே

எட்வின் said...

@லோஷன் .... ராஜ்கோட் மைதானம் குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றில் படிக்க நேரிட்டது லோஷன் அண்ணா, ஐ.பி.எல் மைதானங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. சொல்லப்போனால் நீங்கள் கூறியது போல்... இந்தியா தான் இந்த மொள்ளமாரித்தனத்தில் முன்னணியில் இருக்கிறது :)

கிறிச்சான் said...
This comment has been removed by the author.
கிறிச்சான் said...

எனக்கு கிரிக்கெட்'ல ஈடுபாடு இல்லாம போனதுக்கு காரணம் ,எங்க இங்கிலீஷ் சார் கில்பர்ட் டானியல் சொன்னாரு "கிரிக்கெட் முட்டாள்'களின் விளையாட்டு,பதினொன்னு முட்டாள்கள்,ரெண்டு முட்டாள்களோடு மோதுவானுக,அத ஆயிரகணக்கான முட்டாள்கள் வேடிக்கை பாப்பாங்கன்னு",அதான் இப்போ ஞாபகம் வருது.

Post a Comment

Related Posts with Thumbnails