இசைப்புயல் ரஹ்மான் அவர்களுக்கு 2009ல் 'ஸ்லம்டாக் மில்லினியர்' திரைப்படத்தின் இசைக்காகவும் அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஜெய்ஹோ' பாடலுக்காகவும் இரண்டு ஆஸ்கர் கிடைத்தது உலகத் தமிழர்கள் அனைவரும் அறிந்ததே.
அதன் பின்னர் ரஹ்மானிற்கு நேரடியாக வாய்ப்பு கிடைத்த முதல் ஹாலிவுட் திரைப்படம் Couples Retreat என்ற குடும்ப நகைச்சுவைத் திரைப்படம்.
இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள Na...Na என்ற பாடல் இந்த வருட 82ஆவது ஆஸ்கருக்காக சிறந்த பாடலுக்கான பிரிவில் பரிந்துரைக்காக போட்டியிடுகிறது. (பரிந்துரைக்காக மட்டுமே போட்டியிடுகிறது; இன்னமும் பரிந்துரைக்கப்படவில்லை)
பரிந்துரைகள் பிப்ரவரி 2 ஆம் தேதி முடிவு செய்யப்பட உள்ளன. அதற்காக 63 பாடல்கள் போட்டியிடுகின்றன.
இந்த பாடலை (Blaaze மற்றும் Vivian Chaix உடன் இணைந்து) இசைப்புயலே எழுதியிருப்பதும் ரஹ்மானின் ஆறு வயது மகன் 'ஏ.ஆர்.அமீன்'(பல தளங்களில் அலீம் என குறிப்பிட்டு குழப்புகிறார்கள்;அலீம் அல்ல அமீன் என தான் கருதுகிறேன்)பாடியிருப்பதும் மேலும் சிறப்பு. இதே திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 'குறு குறு கண்களிலே' என்ற தமிழ் பாடலையும் ரஹ்மானே எழுதியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Na...Na பாடலை Blaaze, Vivian Chaix, A. R. Ameen, Clinton Cerejo & Dominic Cerejo ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.
82 ஆவது ஆஸ்கருக்கான பரிந்துரைகள் அறிவிக்கப்படும் (பிப்ரவரி 2)முன்னரே கிராமி விருதுகள் (ஜனவரி 31) அறிவிக்கப்பட்டு விடும். ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லினியருக்காக இரண்டு பிரிவுகளில் கிராமி விருதிற்கும் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறார்.
ரஹ்மான் காட்டில மழை தான் போங்க.
Na Naகுறு குறு கண்களிலே
எனை அவள் வென்றாளே
இதோ இதோ
அவள் எனை பதம் பார்க்கிறாள்
சிறு சிறு வெண்ணிலவே
என் துணை ஆவாளோ
சிறு சிறு வெண்ணிலவே
என் பசி தீர்ப்பாளோ
இதோ இதோ
அவள் எனை பதம் பார்க்கிறாள்
குறு குறு கண்களிலே
நன்றி: விக்கி ஆஸ்கர்ஸ் கலாட்டா
3 comments:
Rahman rocks!
ஆமாண்ணே ஜோ, சிட்னில வேற கலக்கிட்டு வந்திருக்காரு இசைப்புயல். வாழ்த்துவோம் கிராமி விருது கிடைக்க வேண்டும் என்று. வந்ததுக்கு நன்றிங்க ;)
தலைவர் அதையும் வாங்கினா தான் இங்க சில பேரு அடங்குவானுங்க.
சும்மா "இசை"-ன்னு எழுதத் தெரியாதவனெல்லாம் ரஹ்மான் ஒரு சவுண்ட் எஞ்சினியர் தான், அவருக்கு நோட்ஸ் கூட எழுதத் தெரியாதுன்னு மடத் தனமா பேசுறானுங்க! பதில் சொன்னாலும் ஏத்துக்க மாடடானுங்க, போங்கடான்னு உங்களுக்கு தெரிஞ்சுது அவ்வளவு தான்னு போயிடுவேன்.
Post a Comment