தொடர் பதிவிடும்படி அழைத்த இலங்கை அன்பர் லோஷன் அவர்களுக்கு முதலில் நன்றி.
சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் என்றால் கொள்ளைப் பிரியம். MRF Academy ல் சேர்வதற்கும் ஆர்வமாக இருந்தவனை குடும்பத் தேவைகள் தடம் புரட்டிப் போட்டன.
பல விஷயங்களை கிறுக்கி வந்தாலும், இதுவரை நான் எழுதியுள்ள கிரிக்கெட் தொடர்பான பதிவுகள் தான் என்னை பதிவர் லோஷன் உள்ளிட்ட பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.சரி தொடர் பதிவிற்கு வருவோம்.
இத்தொடர்பதிவின் விதிமுறைகள்
1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும் !
2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை.
3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.
1. பிடித்த கிரிக்கெட் வீரர்?
ராகுல் டிராவிட் - டெஸ்ட், ஒருதின ஆட்டங்கள் இரண்டிலும் 10,000 ற்கும் மேல் ஓட்டங்கள் குவித்த சத்தமே இல்லாத சாந்தமானவர். இந்திய அணிக்கு கிடைத்த வரப்பிரசாதம்
2. பிடிக்காத கிரிக்கெட் வீரர்?
பாகிஸ்தானின் சலீம் மாலிக் - என்னமோ அவர் சொல்வது தான் உண்மை என்ற விதத்தில் பேசுவதும், ஆடுகளத்தில் நடந்து கொள்ளும் விதமும் ஏனோ பிடிக்கவில்லை.
3. பிடித்த வேகப்பந்து வீச்சாளர்?
வாசிம் அக்ரம் - பந்து வீசும் அவரது பாணியே தனி தான். மிதமாக ஓடி வந்து மிக வேகமாக பந்து வீசுவதில் கெட்டிக்காரர். Reverse Swing, Yorker மன்னர். ஒரு ஓவரின் ஆறு பந்து வீச்சுகளையும் ஆறு விதமாக வீசும் திறமை கொண்டவர். பாகிஸ்தான் வீரர்களுக்காக வக்காலத்து வாங்காதாவர். டெஸ்ட் மற்றும் ஒருதின போட்டிகள் இரண்டிலும் 400 விக்கெட்டுகளைக் கடந்த முதல் வீரர்.
4. பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர்?
இந்தியாவின் ஸ்ரீசாந்த் - விஷயமே இல்லாமல் வெட்டி பந்தா காட்டுவதால்
5. பிடித்த சுழல் பந்துவீச்சாளர்?
சந்தேகமே இன்றி Leg Spinல் ஷேன் வார்ன், Off Spin ல் முத்தையா முரளிதரன். China Man ல் பந்து வீசும் விதத்திற்காக தென்னாப்பிரிக்காவின் பால் ஆடம்ஸ்.
6. பிடிக்காத சுழல் பந்துவீச்சாளர் ?
தென்னாப்பிரிக்காவின் நிக்கி போயே (Nicky Boje)
7. பிடித்த வலக்கை துடுப்பாட்டக்காரர்?
எப்போதும் சாதனைகளுக்கு சொந்தக்காரர் லிட்டில் மாஸ்டர் சச்சின் தான். மார்க் வாவின் துடுப்பாட்ட பாணியையும் அதிகம் ரசித்ததுண்டு.
இலங்கையின் ரொமேஷ் கலுவிதரனா,தேவையின்றி அடித்து ஆடும் அவரது பாணி ஏனோ பிடிக்கவில்லை.
9. பிடித்த இடக்கை துடுப்பாட்டக்காரர்?
10. பிடிக்காத இடக்கை துடுப்பாட்டக்காரர்?
11. பிடித்த களத்தடுப்பாளர்?
இந்தியாவின் அசாருதீன்-மனுஷன் என்னமா விக்கெட்டை குறிபார்த்து அடிப்பார். திரும்பி நின்றவாரே பந்தை லாவகமாக wicket keepper க்கு அனுப்பும் அவரது பாணியே தனி.
இந்தியாவின் ஜடேஜா; தெ.ஆ வின் ஜான்டி ரோட்ஸ், கிப்ஸ், டி'வில்லியர்ஸ்; இங்கிலாந்தின் இயன் பெல்; மே.இ. தீவின் ஆர்தர்டன் .
சவுரவ் கங்குலி, ஆசிஷ் நெஹ்ரா, இலங்கையின் முன்னாள் அணித்தலைவர் ரணதுங்கா
13. பிடித்த ஆல்ரவுண்டர்?
இந்தியாவின் கபில் தேவ், தெ.ஆ வின் காலிஸ், நியூசிலாந்தின் க்ரிஸ் ஹாரிஸ்
14. பிடித்த நடுவர்?
தொடர்ந்து நான்கு முறை சிறந்த நடுவர் விருது வாங்கிய சைமன் டஃபில். பழையவர்களில் சந்தேகமேயில்லாமல் நெல்சன் (111)புகழ் ஷெப்பர்ட், டிக்கி பேர்ட்
15. பிடிக்காத நடுவர்?
அசோகா டீ சில்வா
16. பிடித்த நேர்முக வர்ணனையாளர்?
டோனி கிரெய்க், ஹார்ஷா போக்ளே
17. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர்?
ஜெஃப்ரி பாய்காட்-அதிக தெனாவட்டுடன் பேசுவதால்
18. பிடித்த அணி ?
நியூசிலாந்து-எல்லாருமே பக்கா Gentleman ஆக இருப்பதால், ஆட்டத்தில் ஆஸ்திரேலியா.
19. பிடிக்காத அணி ?
பாகிஸ்தான் - கிரிக்கெட்டின் விதிகளை மதிக்காததாலும், அலட்டுவதாலும்
20. விரும்பி பார்க்கும் அணிகளுக்கிடையேயான போட்டி?
தென்னாப்பிரிக்கா-ஆஸ்திரேலியா; நியூசிலாந்து-ஆஸ்திரேலியா
21. பிடிக்காத அணிகளுக்கிடையேயான போட்டி?
அப்படி ஏதுமில்லை, ஆனால் ஏனோ தானோ என விளையாடும் எந்த அணியும், இரண்டாம் தர ஆட்டக்காரர்களை வைத்து ஆடும் அணிகளையும் பிடிப்பதில்லை
22. பிடித்த அணி தலைவர்?
இந்தியாவின் அசாருதீன், ஆஸ்திரேலியாவின்-ஸ்டீவ் வாவ், ஆலன் பார்டர்
23. பிடிக்காத அணித்தலைவர்?
சச்சின் டெண்டுல்கர்-தன்னம்பிக்கையுடன் அணியை நடத்திச் செல்லாமையால். (பதவியே வேண்டாமென்று மறுத்திருக்க வேண்டும் அவர்)
24. பிடித்த போட்டி வகை?
டெஸ்ட், ஒருநாள், T20 என அனைத்து ஆட்டங்களும் பிடிக்கும். ஆனால் சமீபகாலமாக பணமும், கவர்ச்சியும் அதிகம் ஆடும் T20 போட்டிகளைப் பிடிக்கவில்லை.(ஆடைகுறைப்பு செய்பவர்களுக்கு ஆடுகளத்தில் என்ன வேலை?!)
25. பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி?
மே.இ.தீவின் டெஸ்மாண்ட் ஹெயின்ஸ்-கோர்டன் கிரீனிட்ஜ் சிறு வயதில் இவர்களைத் தான் அதிகம் ரசித்திருக்கிறேன். முதல் விக்கெட்டிற்கு மிக அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் என்ற பெருமையை அதிக வருடம் தக்க வைத்திருந்தவர்கள்
பின்னர் தென்னாப்பிரிக்காவின் ஹட்சன்-கிர்ஸ்டன் ;சச்சின்-சவுரவ், கில்கிரிஸ்ட்-ஹெய்டன்
சேவாக்-டிராவிட்
27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர்?
28. உங்கள் பார்வையில் சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர்?
மீண்டும் லாரா தான். இந்தியா சார்பில் தனி ஆளாக உலகக் கோப்பை வென்று தந்த கபில் தேவ்
29. சிறந்த கனவான் வீரர்?
சச்சின், கும்ப்ளே, வால்ஷ்(லோஷன் அவர்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன்)
30. நான் பார்த்து வியந்த வீரர்கள்?
லாரா, சச்சின், ஸ்டீவ் வாவ், டிராவிட், ஹெய்டன், கில்கிறிஸ்ட், பான்டிங், வாசிம் அக்ரம், வேகப் பந்துவீச்சு இணை வால்ஷ்-அம்ப்ரோஸ், ஜான்டி ரோட்ஸ்
இந்த தொடர் பதிவிற்கு நான் அழைக்க விரும்புவது
ஜீவதர்ஷன் http://www.eppoodi.blogspot.com/
மருத்துவர் SUREஷ் http://kanavukale.blogspot.com/
13 comments:
பிடித்த அணி தலைவர்?
இந்தியாவின் அசாருதீன்///... எனக்கும் மிகவும் பிடிக்கும் இவரை ....
அசார் நிச்சயம் அருமையான அணித்தலைவரும் ஆட்டக்காரருமாவார். சவுரவ் கங்குலிக்கு முன்னர் இந்தியாவிற்காக அதிக வெற்றிகளை பெற்றுத்தந்த அணித்தலைவர்.
டெஸ்ட் ஆட்டங்களில் அவர் ஆடிய முதல் மூன்று ஆட்டங்களிலும் சதமடித்தவர்.
ஒரு தின போட்டிகளில் உலகிலேயே அதிக ஓட்டங்கள் பெற்றிருந்தவர் என்ற பெருமையை சச்சின் முறியடிக்கும் வரை கொண்டிருந்தவர்.
ஒரு தின போட்டிகளில் மிகக்குறைந்த (62) பந்துகளில் சதமடித்தவர் என்ற பெருமையையும் ஒரு காலத்தில் கொண்டிருந்தவர் அசார்.
இப்படி அசாருதீனைக் குறித்து சொல்லிக் கொண்டே போகலாம்.
// மீண்டும் லாரா தான்.
nichayam neenga tharamaana cricket rasigar dhaan...
good sir!!
சில விஷயங்களில் உங்கள் கருத்து என்னுடன் ஒத்துபோகிறது.
அசாருதின் சிறந்த அணித்தலைவர்தான். ஆனால் கிரிக்கெட்டில் சூதை கொண்டுவந்து சிறந்த அணிதலைவர் என்பதை மறக்கவைத்துவிட்டார்.
@ உயிரெழுத்து
நன்றி
@ வரதராஜலு
நன்றி, உங்கள் கருத்தையும் மறுப்பதிற்கில்லை
இன்றுதான் உங்கள் பதிவை பார்த்தேன், என்னை அழைத்ததற்கு நன்றி,உங்களுக்கு பிடித்தவர்களில் ஹார்ஷா போக்ளே எனக்கு சுத்தமாக ஆகாது .அதேபோல உங்களுக்கு பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்டவீரர் களுவிதாரண எனக்கு பிடிக்கும், ஏனையவை எனக்கும் உடன்பாடானவை, குறிப்பாக லாரா, வசீம் , மார்க் வோ
நன்றி, எனது பதிவு இதோ
http://eppoodi.blogspot.com/2010/02/blog-post_7992.html
//பிடித்த அணி தலைவர்?
இந்தியாவின் அசாருதீன், //
சி.பி.ஐ. பிடித்த அணித் தலைவர்..,
உங்கள் அழைப்பை இப்போது தான் பார்க்கிறேன். பின் தொடர்பவர் பட்டியலில் இணைந்து இருந்ததாக நினைவு. ஆனால் கானவில்லை, இப்போது மீண்டும் இணைந்து உள்ளேன்.
நேற்று எழுத வந்து 20,000ஹிட்ஸ் கூட போடாதவர்களுக்கே 100 ஃபாலோவர்ஸ் இருக்கும்போது உங்கள் பட்டியல் வெறும்26ஐக் காட்டுகிறது. பிரச்சனையை சரி செய்யுங்கள் தல..,
//இந்தியன் என்பதில்
இனிமை காணும் நீ
இன்று போல் என்றும்
(இந்தியனாய்) வாழ்க
//
வாழ்க..,
வணக்கத்திற்குரிய அண்ணா,
1.களத்தடுப்பாளர்களில் யுவராஜைக் குறிப்பிடாதது சிறிது.... ஏமாற்றம் தான். ஆயினும் தெ. ஆ ஜாண்டி மற்றும் அசாருதீன் இவ்விருவரையும் மறக்காமல் சொன்னது பாராட்டுக்குரியது.
2.அனல் பறக்கும் இந்தியா- பாகிஸ்தான் விறு விறு போட்டி தங்கள் கவனத்தைக் கவராதது வியப்புதான்??!!.இது தான் இக்கரைக்கு அக்கரை பச்சையோ!!!!
@ violetisravel
1. யுவராஜ் சிங் நல்லாத்தான் தடுப்பாரு... ஆனா அவர் கிட்ட இருக்கிற அகங்காரத்தினால் அவரை குறிப்பிடவில்லை.
2. இந்தியா பாக் ஆட்டங்கள் பல நேரங்களில் முன்னமே நிர்ணயிக்கப்படுகின்றனவோ என்ற சந்தேகம் இன்னமும் எனக்கு உண்டு.
nice post thank for sharing this.
ICC T20 World Cup 2020 Schedule
ICC T20 World Cup 2020 Schedule PDF
Post a Comment