எனதருமை வலையுலக நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் வணக்கம். இந்த பதிவோடு 251 பதிவுகளைக் கிறுக்கியிறேன் (251 + 2 மீள்பதிவுகள்) என்ற சந்தோஷம் ஒருபுறமிருந்தாலும் இன்னமும் மனநிறைவு அடையவில்லை என தான் என்னால் சொல்ல முடியும்.
பெரிய அளவில் எதுவும் சாதித்துவிடவில்லை என்றாலும்; பெரிய எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்ளும்படி நான் இல்லை என்றாலும்; பதிவுலகமும், வலையுலகமும் முகமறியாத பல நண்பர்களையும், நாடு கடந்த நட்புகளையும் தந்திருக்கிறது என்பதில் மட்டற்ற மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.
எனினும் நான் வளர்ந்த சூழ்நிலையில் இருந்து வந்தவர்களும்; எனது வட்டாரத்தைச் சார்ந்த சில அன்பர்களும் ஆரோக்கியமான ஒரு விவாதம் என்று வரும் போது விலகிச் செல்வது, மனதை ஏதோ செய்வதை மறுக்க முடியாது.
ஆர்குட்டிலும், முகப்புத்தகத்திலும்(facebook) அரைகுறை ஆடையணிந்த அம்மணிகளின் புகைப்படங்களுக்கு ஓடோடிச் சென்று கருத்துரைக்கிற என் சமூகத்தைச் சார்ந்த பலர் கிறிஸ்தவர்களைக் குறித்த எனது சமீபத்திய பதிவிற்கு கருத்துரைக்க இன்னமும் யோசித்துக் கொண்டிருப்பது நிச்சயம் மனவருத்தம் தான்.
அதிலும் கடமைக்கென்று தான் எனது பதிவுகளில் கருத்துரைப்பதாக ஒரு அன்பர் கூறியிருந்ததும்; பின்னர் விவாதத்தில் இருந்து ஒளிந்து மாறியதும் வியப்பிற்குரியது.
எனது எழுத்துக்களை வாசிக்கிறவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம்... என்னை நான் எப்போதும் நல்லவன் என்று முன்னிறுத்தியதில்லை. தவறு செய்யாத மனிதர்கள் என்று எவருமில்லை. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.
நான் சந்திக்கும் நபர்களைக் குறித்தும், கடந்துவரும் அனுபவங்களைக் குறித்தும் வலையுலகில் பகிர்ந்து கொள்வதற்குத் தான் இந்த வலைப்பூவேயன்றி விரோதங்களை விதைப்பதற்கு அல்ல.
அனைத்து அன்பர்களுக்கும் எனது பணிவான நன்றிகள். இந்த நேரத்தில் என்னை பதிவுலகில் தமிழில் எழுதும்படி ஊக்குவித்த அண்ணன் அன்பு ஜெயின் அவர்களுக்கு சிறப்பு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
15 comments:
வாழ்த்துகள். 250 ஐநூறாக மாற வாழ்த்துகள்
நியாயமான விஷயம்தான்.. குறை தீர வாழ்த்துகிறேன்
நிறைய நல்ல விஷயங்கள் வாழ்த்துக்கள்! நன்றி நண்பா mullaimukaam.blogspot.com
@ வினையூக்கி
அண்ணாமலையான்
JKR
நன்றி
அலங்காரங்களுக்கும், நித்யானந்தா போன்ற கவர்ச்சிகரமான விஷயங்களுக்கும் இன்று மக்கள் மயங்கிப்போனது தான் ஆரோக்கியமான விவாதங்களிலிருந்து விலகிச்செல்ல காரணமாக இருக்கக்கூடும்.
250 + பதிவுகளுக்கு - பாராட்டுக்கள்!
எதையும் மிகவும் எதிர் பார்க்காமல், உங்களுக்கு இருக்கும் கருத்து சுதந்தரத்துடன் தொடர்ந்து எழுதுங்கள். மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
தொடர்ந்து எழுதுங்கள்.
நியாயமான ஆதங்கம். ஒன்று நினைவு வைத்துக்கொள்ளுங்கள். மக்கள் என்றும் கவர்ச்சியின் பின்னால்தான் ஓடுவார்கள். இதுதான் பதிவுலகம் உங்களுக்கு சொல்லும் நீதி.
@ Chitra
V.Radhakrishnan
Dr.P.Kandaswamy
மிக்க நன்றி.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான் மருத்துவரே.
250ஆ வாவ்,
மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ Cheenu
புதுகைத் தென்றல்
நன்றி அன்பர்களே
உங்கள் மனதில் உள்ள சோகத்தை பதிவின் வாயிலாக சொல்லிவிட்டீர்கள். இறங்கிய சோகம் இறங்கியதாகவேயிருக்கட்டும். புத்துணர்ச்சியோடு இனி எழுதத் துவங்குங்கள். அடுத்தவருடன் உங்களை ஒப்பிட்டு பார்க்காமல் புதிய சிந்தனைகளை எடுத்தெழுதுங்கள்
வாழ்த்துகள் !!!
அலங்காரங்களுக்கும், நித்யானந்தா போன்ற கவர்ச்சிகரமான விஷயங்களுக்கும் இன்று மக்கள் மயங்கிப்போனது தான் ஆரோக்கியமான விவாதங்களிலிருந்து விலகிச்செல்ல காரணமாக இருக்கக்கூடும்/////
உண்மை தான் !!!!
@ Chitra
எதையும் மிகவும் எதிர் பார்க்காமல், உங்களுக்கு இருக்கும் கருத்து சுதந்தரத்துடன் தொடர்ந்து எழுதுங்கள். மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!/////
வழி மொழிகிறேன் !
நாம் எத்தனை பதிவுகள் எழுதி இருக்கிறோம் என்பது முக்கியமல்ல மக்கள் மனதில் பதிந்த பதிவுகள் எத்தனை என்பதுதான் முக்கியம். அதில் தாங்கள் இரண்டாவது நிலையில் திக்ழ்ந்து மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்க எனது வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் ஆசிரியரே ,,பணி தொடரட்டும்
hi edwin boss,
thanks for visiting my page and your comments.
mano
Post a Comment