கிறிஸ்தவர்கள் என ஒரு அடையாளத்தை தங்களுக்கென்று கொண்டு நடப்பவர்கள் செயல்படும் விதமும், அவர்கள் வாழ்க்கை முறையும் இன்று பெரும்பாலும் சுயநலம் நிறைந்ததாகவும், பொதுநலமற்றதாகவும், சிந்தனை அற்றவதாகவும் இருப்பதாகவே உணர்கிறேன்.
நாங்கள் கிறிஸ்தவர்கள்; நாங்கள் தான் உத்தமர்கள்; நாங்கள் மட்டுமே மேலோகிற்கு செல்லும் பாக்கியம் பெற்றவர்கள்; மற்றவர்கள் எல்லாம் பாக்கியமற்றவர்கள் என்ற நினைப்பும் ஏளனமும் இன்று கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்கின்ற பலரிடமும் அதிகமாகவே நிலவி வருகிறது.
இவர்களின் இத்தகைய எண்ணத்திற்கு அவர்கள் மட்டுமே காரணமும் அல்லர். அவர்களுக்கு போதிக்கப்படுகின்ற கிறிஸ்தவ கோட்பாடுகளும், போதிக்கின்றவர்களும், அவர்கள் வாழும் சூழ்நிலையும் கூட காரணம் என சொல்லலாம்.
பிறருக்கு உதவி என்று வருகின்ற போது இன்று பல கிறிஸ்தவர்கள் பின்வாங்கிப் போவதும்; ஆலயங்களுக்கு லட்சங்களாய் காணிக்கை அளிக்கும் பலர் பிறருக்கு உதவி என வரும் போது இல்லையென கைவிரிப்பதும் சகஜமாகி வருகிறது.
முன்னொரு பதிவில் "பணம் பெருகப் பெருக பலருக்கு குணம் சிறுத்துப் போவது ஏனோ" என எழுதியிருந்தேன்; அதுவும் இவர்களின் வாழ்க்கை முறையிலிருந்து கண்கூடாக நான் கண்டவையே.
விவிலியத்தில் மத்தேயு 25:40 ல் கூறியிருக்கிறபடி என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு எதை செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்பதையும் அதே மத்தேயு 25:46 ல் கூறியிருக்கிறபடி இப்படி செய்யாதவர்கள் நித்திய ஆக்கினை அடைவார்கள் என்பதையும் இந்த கிறிஸ்தவர்கள் அறியாதவர்களா என்ன?
இன்னும் சிலர் தங்களைக் கிறிஸ்தவர்களாக மாற்றிக் கொண்டாலும் அவர்களின் சான்றிதழ்களில் முன்னர் பின்பற்றி வந்த அதே பழைய சமயத்தை வைத்திருப்பதன் மர்மம்... கிறிஸ்தவர்கள் (BC) என சான்றிதழில் இருந்தால் தங்களின் பணிக்கும், பணி நிமித்தம் கிடைக்கும் வசதிகளுக்கும் பங்கம் வந்து விடும் என்பது தான் அது. ஏனென்றால் அது SC இது BC. இவர்களை பெயர் கிறிஸ்தவர்கள் என கூட கூறலாம்.
வேறு சிலர் இயேசு 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூறும் வண்ணம் 40 நாள் அசைவம் சாப்பிட மாட்டார்களாம்; அது என்னத்திற்கு என்று தான் புரியவில்லை. 40 நாளும் சாப்பிடாமல் இருப்பதை ஏன் கடைபிடிக்கவில்லையோ தெரியவில்லை!
அதை மற்றவர்களிடமும் சொல்லிப் பெருமைப்பட்டு கொள்கிறார்கள். விவிலியத்தில் மத்தேயு 6:17ல் "நீயோ உபவாசிக்கும் போது, மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக..."என எழுதியிருப்பதற்கு என்ன சொல்வார்களோ?
கிறிஸ்தவன் பெரியவன்; கிறிஸ்தவம் பெரியது; மற்றவர்கள் எல்லாம் யாரோ! என்ற மனப்பாங்கு உடையவர்கள் அனைவரையும் குறித்து பரிதாபப்படுகிறேன். கிறிஸ்தவம் என்பது குறித்து இயேசு பிரசிங்கித்ததாக விவிலியத்தில் காணப்படவில்லை. அவர் நீதி நியாயத்திற்காக போராடினாரேயன்றி ஒரு சமயத்தையோ, மதத்தையோ உருவாக்க வரவில்லை.
இயேசுவின் மரணத்திற்கு பின்னர் அவரது சீஷர்களுக்கு தான் முதலாவது கிறிஸ்தவர்கள் (அப்போஸ்தலர் 11:26) என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கிறது. எனவே கிறிஸ்தவர்கள் என்ற பெயர் உடையவர்கள் தான் மேலோகிற்கு செல்வார்கள் என்பதை மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகத் தான் பார்க்கிறேன்.
கிறிஸ்தவன் என்ற பெயர் உடையவனோ இல்லையோ உண்மையாயிருக்கிற எவரும், உத்தமமான வாழ்க்கை நடத்தும் எவரும் இறைவனடி சேர்வர் என்ற கோட்பாட்டையே விவிலியம் உரைக்கிறதேயன்றி சக மனிதனிடம் பகைமை பாராட்டவோ, எந்த சமயத்தாரையும் வெறுக்கவோ விவிலியம் வியாக்கியானம் செய்யவில்லை.
இதற்கு மாறாக பிற சமயத்தினரை எதிரியாக பார்ப்பதும், தாங்கள் தான் பரிசுத்தர்கள், மேலோகிற்கு போகும் பாக்கியம் பெற்றவர்கள் என சில பெயர் கிறிஸ்தவர்கள் சொல்லித் திரிவது அவர்களுக்கும், அவர்கள் வாழும் வாழ்க்கை முறைக்கும் அழகல்ல.
அப்படிப்பார்த்தால் இன்று கிறிஸ்தவர்கள் பாடவும், கேட்கவும் செய்கின்ற பல பாடல்கள் பிற சமய நம்பிக்கையுடைய பாடகர்கள் பாடினவை தான். இதற்கு என்ன சொல்லுவார்களோ!!
மதங்கள் வாழ்ந்தது போதும்; மனிதர்களை வாழ விடுங்கள்; மனிதம் வாழட்டும்.
சிலுவையில் இயேசு மொழிந்ததாக 7 வசனங்களை நினைவு கூறுபவர்கள் மலைப்பிரசங்கத்தின் போது அவர் மொழிந்த எட்டாவது வசனத்தை மறந்து போவது ஏனோ! நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. (மத்தேயு 5:11)
36 comments:
ஏன் இந்த கொலைவெறி தாக்குதல்?
///"“கிறிஸ்தவர்கள்” நாங்கதான் ரைட் மத்தவங்க ராங்"///அப்டி கிறிஸ்தவர்களில் பலர் நினைக்குறாங்க...அதே மாதிரி ஒவ்வொரு மதத்தவங்களும் நினைக்குறாங்களே சார்...
என்ன பொறுத்தவரைக்கும், மதம்'ன்றது...நம்ம எல்லாரையும் நல்வழி படுத்துறதா இருக்கணுமே தவிர பிரிவினைகள உண்டாக்குறதா இருக்கப் பிடாது.அவ்வளவுதான்.
///மதங்கள் வாழ்ந்தது போதும்; மனிதர்களை வாழ விடுங்கள்; மனிதம் வாழட்டும்///நல்ல வரிகள்...
மதங்கள் வாழ்ந்தது போதும்; மனிதர்களை வாழ விடுங்கள்; மனிதம் வாழட்டும்.
நீங்கள் ஒரு மதத்தை பின் பற்றி கொண்டு இதை சொன்னால், அது நிச்சயம் பொய்யான வார்த்தைகள் தான். ஒருவனின் அழிவில் தான் இன்னொருவனின் வளர்ச்சி என்று மனிதர்கள் நம்புகிறார்கள். ஒரு மதத்தில் அழிவில் தான் இன்னொரு மதம் என்று மதங்கள் நம்புகிறது. கிறிஸ்துவமும் பல மதங்களை அழித்து தான் வளர்ந்தது. வளர்ந்து கொண்டிருக்கிறது. மதங்களே அப்படி இருக்கும் போது, மனிதர்கள் இப்படி தான் இருப்பார்கள்.
@ GERSHOM
ஓஹோ, மத்தவங்களும் அப்பிடித்தானா, எனக்கு தெரிஞ்சதத் தான நண்பரே எழுத முடியும்.
கொலவெறின்னு சொல்லியிருக்கீங்க... அப்பிடின்னா என்னங்க? உண்மைய எழுதினாலே இப்பிடிதான சொல்வீங்க.
@ Karrupu
நன்றி. நிச்சயமாக நான் மதங்களில் நம்பிக்கை உடையவன் அல்ல. நல்மனங்களில், நற்பணிகளில், நீதி உரைக்கும் கோட்பாடுகளில் மட்டுமே நம்பிக்கை உடையவன்.
எட்வின் அவர்களே,
எவ்வளவு சத்தியமான,அருமையான வார்த்தைகள்.பாராட்டுக்கள்.
சூப்பர் எட்வின், நல்ல பயனுள்ள கேள்விகள் சுவையான நடை.
ஈஸ்டர் பற்றிய இப்பதிவை நேரம் இருந்தால் வாசியுங்களேன்.
http://padukali.blogspot.com/2010/04/blog-post_04.html
காலம் சமீபமாயிருக்கிறது
நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான்(Jesus) அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.
மதங்கள் ஏதாயினும் சரி, மனிதன் நன்னாயால் மதி.
உலகின் இன்றைய மிக முக்கியத் தேவை சமய சமரசமும், மத நல்லிணக்கமுமே. நல்லிணக்க அடிப்படையில் நாம் சர்ச்சுக்கு சென்று இயேசுவை வணங்கி, மசூதிக்கு சென்று அல்லாவைத் தொழுது, கோவிலுக்கு சென்று முருகனையும் வணங்குவோம்.
திரு. எட்வின் அவர்களை மனமாரப் பாராட்டுகிறேன். மிக அருமையான சிந்தனை. சிறப்பான கட்டுரை. இது போன்ற சிந்தனைகளால் தான் மனிதம் வாழும்.
பிற மார்க்கங்களை எல்லாம் வெறுக்க வேண்டும், பிற மார்க்கத்தினரின் கடவுள்களை எல்லாம் இகழ வேண்டும் என்பதையே இயேசு கிறிஸ்துவின் முக்கிய கொள்கை போல பரப்பி வருகின்றனர்.
விட்டுக் கொடுக்கும் சமரசக் கொள்கையுடைய இயேசு கிறிஸ்துவின் கற்பிதங்களுக்கு மாறாக, முரட்டுப் பிடிவாதக் கருத்துக்களை, வெறுப்புக் கருத்துக்களை மக்களிடையே பரப்பியதும் இன்றைக்கு உலகிலே இத்தனை பிரச்சினைக்கு ஒரு முக்கியக் காரணம்.
பட்டயத்தை உரையிலே போடு வாளை எடுத்தவன் வாளால் அழிவான் என்ற கொள்கைக்கு எதிராக குருசெடு போர்கள் தொடர்ச்சியாக நடத்தப் பட்டு, இரத்த ஆறு ஓட விடப் பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்றும் மத்தியக் கிழக்கு ஆசியாவில் தொடர்ந்து போர்கள் நடை பெறுகின்றன.
வெறுப்புக் கருத்துக்களைக் கை விட்டு, அன்புக் கருத்துக்களை முன்னெடுப்போம்.
திரு. எட்வினை எவ்வளவு பாராட்டினாலும் தகும். சமாதானம் பண்ணுகிறவர் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனின் புத்திரர் என்னப் படுவார்கள்.
The last 3 popes and the Jews என்னும் புத்தகத்தை எழுதிய Pinchas E. Lapide அதில் கூறுகிறார், “ ஏசுவும் அவரது அன்னை மேரியும் நாஜி ஜெர்மனி செயலில் இருந்திருக்கும்போது அங்கு சென்றிருந்தால் ஆஷ்விட்ச் (Auschwitz) மரணமுகாமுக்கு ஒரு வழி டிக்கெட்டில் கொண்டு செல்லப்பட்டு விஷவாயு அறையில் வைத்து கொல்லப்பட்டிருப்பார்கள்”.
அன்புடன்,
டோண்டு ராகவன்
///கிறிஸ்தவம் என்பது குறித்து இயேசு பிரசிங்கித்ததாக விவிலியத்தில் காணப்படவில்லை. அவர் நீதி நியாயத்திற்காக போராடினாரேயன்றி ஒரு சமயத்தையோ, மதத்தையோ உருவாக்க வரவில்லை///
யோசிக்க வைக்கும் வரிகள். பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே. முதல் முதலாகம் மதத்தைத் தாண்டி உண்மையைப் பேசிய கிறிஸ்தவரைப் பார்க்கிறேன்.
anbudan
ram
www.hayyram.blogspot.com
திரு. ஜெரோஷம் அவர்களே,
///"“கிறிஸ்தவர்கள்” நாங்கதான் ரைட் மத்தவங்க ராங்"///அப்டி கிறிஸ்தவர்களில் பலர் நினைக்குறாங்க...அதே மாதிரி ஒவ்வொரு மதத்தவங்களும் நினைக்குறாங்களே சார்...///
உங்களின் இந்தக் கருத்து சரியல்ல. நீங்கள் பிற மதங்களைப் பற்றிய சரியான புரிதல் செய்ய வேண்டும் எனக் கோருகிறேன்.
நல்ல கருத்துக்கள் எங்கே இருந்தாலும் அதை வரவேற்க வேண்டும் என்று தான் இந்து மதம் சொல்லியுள்ளது.
சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, பாரதியார் உள்ளிட்ட பல இந்து மதத்தை சேர்ந்த அறிங்கர்கள் , இயேசு கிறிஸ்துவை மிகவும் பாராட்டியதோடு, அவரை மிகவும் மரியாதைக்கு உரியவராக, வழிபாட்டுக்கு உரியவராக, சித்தரித்து உள்ளனர்.
பெரும்பாலான இந்துக்கள் பிற மதத்தினர் தெய்வங்களாக வழிபடுபவரை இகழ்வதோ, வெறுப்பதோ கிடையாது. பல இந்துக்கள் சர்ச்சுக்கு, மசூதிக்கு செல்லுகின்றனர். இவ்வாறாக மத நல்லிணக்கத்துக்கு முன்னேறி செல்கின்றனர். அதே இந்து ஒரு கிறிஸ்தவனாக மாற்றப் பட்டு விட்டால், அவன் கிறிஸ்தவ மதத்தை தவிர பிற மதங்களை இகழ ஆரம்பித்து விடுகிறான்.
இதில் குறிப்பிட வேண்டியது என்ன வென்றால், புரட்டஸ்டண்டு பிரிவினர் மேரி மாதாவை சிறுமைப் படுத்துவதில் முனைப்பாக உள்ளனர். பல இந்துக்கள் மேரி மாதாவை மரியாதை செலுத்தி வரும் நிலையில், புரட்டஸ்டண்டு பிரிவினர் கத்தோலிக்க ஆலயங்களை மிகவும் இழிவாக பேசுவதை பெருமையாக கருதுகின்றனர்.
இந்திய பணபாட்டில் வாழும் நம்மால் மத சமரசத்தை, மத நல்லிணக்கத்தை பின்பற்ற முடியாவிட்டால் அது வருத்தப் பட வேண்டிய விடயமே.
மத நல்லிணக்கத்தில் நாம் தான் உலகுக்கே வழி காட்ட வேண்டும்.
ஆனாலும் உங்களின் எழுத்துக்கள் திரு.கருப்புவின் எழுத்துக்களை விட மேலானவை. விரைவில் நீங்களும் திரு.எட்வினைப் போல சமரசப் பாதைக்கு வருவீர்கள் என நம்புகிறேன். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
திரு. கருப்பு அவர்களே,
//ஒருவனின் அழிவில் தான் இன்னொருவனின் வளர்ச்சி என்று மனிதர்கள் நம்புகிறார்கள்// - இது காட்டு மிராண்டிக் கால மனிதனின் கருத்தே.
நாகரீக மனிதன் தன்னால் முடிந்த அளவுக்கு அடுத்தவருக்கு இடையூறு செய்யாமல், சக மனிதனுடன் இணைந்து வாழவே விரும்புவான்.
இந்த "ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அழித்து வாழும்" கொள்கை தான் உலகில் இத்தனை பிரச்சினைக்கும் காரணம்.
"ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரச் சொன்னாள், அவனுடன் இரண்டு மைல் தூரம் போ" என்றார் இயேசு கிறிஸ்து. "ஒருவன் உன் வலது கன்னத்தில் அடித்தால், அவனுக்கு இடது கன்னத்தைக் காட்டு" என்றார் கிறிஸ்து. அவருடைய பெயரால ஒரு மதத்தை உருவாக்கி, ஒரு மனிதனை அழித்து, இன்னொரு மனிதன் வாழ வேண்டும் என்ற விசக் கருத்தை பிரச்சாரம் செய்கிறீர்கள்.
//ஒரு மதத்தில் அழிவில் தான் இன்னொரு மதம் என்று மதங்கள் நம்புகிறது. கிறிஸ்துவமும் பல மதங்களை அழித்து தான் வளர்ந்தது. வளர்ந்து கொண்டிருக்கிறது. மதங்களே அப்படி இருக்கும் போது, மனிதர்கள் இப்படி தான் இருப்பார்கள்.///
//கிறிஸ்துவமும் பல மதங்களை அழித்து தான் வளர்ந்தது// - நீங்கள் பெருமையாகக் கூறிக் கொள்ளும்படி எந்த எந்த மதங்களை அழித்து விட்டீர்கள் என்று கூற முடியுமா?
அப்படி நீங்கள் உருவாக்கிய மதத்தின் நிலைமை இன்று என்ன?
என்னுடைய நண்பர் (கிறிஸ்தவர்) சென்ற ஆண்டு சுற்றுலாவுக்கு ஸ்பெயின் நாடு சென்றார். ஞாயிற்றுக்கிழமை பிரேயருக்கு செல்ல வேண்டும் என்று முக்கிய சர்ச்சை தேடிக் கண்டு பிடித்து சென்றாராம். பிரேயருக்கு வந்தவர், என் நண்பர், அவர் மாணவி, மகன், மகள் ஆகிய நான்கே பேர்தான். இவர்களைத் தவிர வேறு யாருமே பிரேயருக்கு வரவில்லை. பிரெயரை நடத்தி வைக்க 7 பேர் இருந்தனர், என்று கூறி நண்பரே சிரித்து விட்டார்.
மேலை நாடுகளில் திருமணம் நடந்த மூன்றே மாதத்தில் விவாக ரத்து நடக்கிறது. மனம் போன வகையில் விபச்சார வாழ்க்கை நடக்கிறது. இதுதான் இரண்டாயிரம் வருடத்தில் இயேசு கிறிஸ்துவின் பெயரில் நீங்கள் வுருவாக்கிய மதத்தின் நிலைமை.
இயேசு கிறிஸ்துவே, “இவர்கள் பிறரை தங்கள் மார்க்கத்தவர் ஆக்கும் பொருட்டு பூமியையும் , சமுத்திரத்தையும் சுற்றித் திரிவார்கள். அவர்களை இவர்கள் மார்க்கத்தவர் ஆக்கிய பின், இவர்களை விட பாவிகள் ஆகுவார்கள்” என்று கூறியதை நிரூபித்து இருக்கிறீர்கள்.
இப்போது இந்தியாவுக்கும் வந்து ஒரு மதத்தை அழித்து , கிறிஸ்துவத்தை பரப்புவோம் என்று கூறி மத மோதலை , மதப் பூசலை உருவாக்கும் வகையில் செயல் படுவதால்தான் அடிப்படை வாதிகளின் கைகள் பலப் படுத்தப் படுகின்றன.
உங்களின் வெறுப்புக் கருத்துக்கள், காட்டுமிராண்டிக் கருத்துக்கள், விசக்கருத்துக்கள் இந்தியாவில் செல்லுபடியாகாது.
திருந்துங்கள்! நாகரீகப்பாதைக்கு வாருங்கள்.
not all western people (white people) are christians. many are non believers.
பார்ப்பனர்களெல்லாம் வந்து கும்மியடிக்கிறத பார்த்த அவனுங்களுக்கு ஒரு அடிமை சிக்கிட்டான் போல இருக்கே ! பாவம் யாரு பெத்த புள்ளையோ !
///மதங்கள் வாழ்ந்தது போதும்; மனிதர்களை வாழ விடுங்கள்; மனிதம் வாழட்டும்///
நல்ல வரிகள்...
அருமை!
திரு thiruchchi அவர்களே,
நான் எங்கேயும் எந்த மதத்தையும் தூக்கி பிடிக்கவில்லை.
முக்கியமாக கிறித்துவத்தை.
நான் மதங்களுக்கு எதிரி.
மனிதனுக்கு நண்பன்.
எனது பின்னூட்டத்தை நன்றாக வாசியுங்கள். நன்றி.
<<<
பிறருக்கு உதவி என்று வருகின்ற போது இன்று பல கிறிஸ்தவர்கள் பின்வாங்கிப் போவதும்; ஆலயங்களுக்கு லட்சங்களாய் காணிக்கை அளிக்கும் பலர் பிறருக்கு உதவி என வரும் போது இல்லையென கைவிரிப்பதும் சகஜமாகி வருகிறது.
>>>
its true, we cant see as religious view... this is happening in everywhere, because now the life style is teaching us like keep away from everyone and be selfish.
<<<
முன்னொரு பதிவில் "பணம் பெருகப் பெருக பலருக்கு குணம் சிறுத்துப் போவது ஏனோ" என எழுதியிருந்தேன்
>>>
superb words.
<<<
அவர் நீதி நியாயத்திற்காக போராடினாரேயன்றி ஒரு சமயத்தையோ, மதத்தையோ உருவாக்க வரவில்லை.
>>>
hmmmm.... Do you believe that Is Jesus (pbuh) so of god?
anyhow very nice article, fantastic words... this is happening in every religion, the path is different and follower are going in wrong path...
all the best Edwin.
நீங்கள் சொல்வது உண்மைதான். இன்றைய கிறிஸ்த்தவத்தின் நிலைமை அப்படித்தான் உள்ளது. ஆனால் வேதத்தின்படி உண்மையாய் வாழும் கிறிஸ்த்தவர்களும் உலகில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்
நேரம் இருந்தால் இந்த தளத்திற்கு சென்று பாருங்கள்.
http://www.cfcindia.com/tamil/articles/Counterfeit_Revival_Tamil.pdf
http://www.cfcindia.com/tamil/article.php?type=artikel&name=the_real_truth
//hmmmm.... Do you believe that Is Jesus (pbuh) so of god?//அடுத்தாபுல ஒரு இஸ்லாமியர் கொக்கி போடுறார் பாருங்க!
நல்ல புள்ள வேஷம் போட போய் பயபுள்ள இப்படி மாட்டிக்கிட்டானே!
<<<
Anonymous said...
//hmmmm.... Do you believe that Is Jesus (pbuh) so of god?//அடுத்தாபுல ஒரு இஸ்லாமியர் கொக்கி போடுறார் பாருங்க!
நல்ல புள்ள வேஷம் போட போய் பயபுள்ள இப்படி மாட்டிக்கிட்டானே!
>>>
hahaha... kokkiyum podale, onnum podale... oru kelvi ketka vida mattingappa. :)
sorry I mean to ask "Do you believe that Is Jesus (pbuh) son of god?" n was missed there. :(
//hahaha... kokkiyum podale, onnum podale... oru kelvi ketka vida mattingappa. :)//
அப்படியெல்லாம் சொல்லாதீங்க தல. சும்மா முயற்சி பண்ணி பாருங்க. மீனு தான் குளத்த விட்டு வெளியே வத்துட்டுதே. அங்கிட்டு பார்ப்பனர்கள் வலை விரிச்சிக்கிட்டு இருக்காங்க, தந்திரக்கார மனுஷங்க. நீங்க முந்திக்கலேன்னா மீனு உங்களுக்கு இல்ல. மாடிக்கிச்சுன்னா எட்வின அப்துல் காதர்னு பெயர மாத்தி விளம்பரபடுத்திபுடலாம். ஆனா என்ன கொஞ்சம் செலவாகும். அரேபியாவுக்கு போக விமான டிக்கட், முப்பது நாள் அறை வாடகை எப்படியும் இரண்டு மூணு இலட்சம் ரூபாயாவது ஆகும்.
இணைய இணைப்பு சரி இல்லாதமையால், பதில் எழுதவியலவில்லை. மாலைக்குள் எழுதுகிறேன்.
Dear Mr. KARUPPU,
Your clarifications are welcome.
The points in your first comment are ambiguous.
Anyway its nice to have you in the side of Civilsed Soceity.
சிந்திக்கிறீங்க!
பேஷ் பேஷ் நல்ல கருத்து
@ சிந்திப்பவன்
ppage
Triple R
துளசி கோபால்
thiruchchi
நன்றி
@ dondu
உங்களின் வருகைக்கும் Pinchas E. Lapide எழுதிய புத்தகத்தின் தகவலுக்கும் நன்றி.
@ hayram
நன்றி
@ thiruchchi
உங்களின் மத நல்லிணக்கம் குறித்த கருத்துக்கள் முற்றிலும் உண்மை. தெளிவான விளக்கங்களுக்கு நன்றி
அய்யா அனானி உங்க பேர போட்டே எழுதலாமே!!
@ என்.ஆர்.சிபி
Mastan
நன்றி
கடவுளை அடையும் ஒரு வழியாக தான் Jesus ஐ பார்க்கிறேன். அவரே நானே வழி என்று யோவான் 14:6 ல் கூறியிருப்பதாக விவிலியம் தெரிவிக்கிறது.
கடவுள் ஒருவர் இருப்பதாகவே நம்பி வந்தாலும் பல நேரங்களில் மனதிற்குள் கேள்விகள் எழாமலும் இல்லை. அண்மையில் கூட ஹெய்ட்டி பூகம்பத்தில் சின்னஞ்சிறு உயிர்கள் மடிந்ததை மனம் இன்னமும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது http://thamizhanedwin.blogspot.com/2010/01/blog-post_21.html என்ற பதிவில் இறைவன், இயற்கை இரண்டும் இன்னமும் எனக்கு புரிந்த பாடில்லை. :( ஆனா உறவுகளானாலும், உறைவிடமானாலும் நிரந்தரமில்லையென்பது மட்டும் நல்லா புரியுது. என கிறுக்கியிருந்தேன்.
தனது வாழ்க்கையையே கிறிஸ்துவிற்கும், ஆதரவற்றவர்களுக்கும் அர்ப்பணித்த தெரசாவிற்கே கடவுள் இருக்கிறாரா என குழப்பம் ஏற்பட்ட போது சாதாரண மனுஷன் எனக்கோ!!
@ cheenu
நன்றி.
நிச்சயமாக நீதி, நேர்மையை நிலைநாட்டப் போராடும் கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள். அதில் சந்தேகமில்லை. எனினும் பலர் பெயருக்காக கிறிஸ்தவர்களாக இருந்து கொண்டு செய்யும் விஷமச் செயல்களுக்கு எதிரானது தான் எனது இந்த எழுத்துக்கள்.
@ ராஜ நடராஜன்
smart
நன்றி
Post a Comment