தமிழ் பாடல்களில் திரைப்பட பாடல்களுக்கு தான் அதிக மவுசு என்றால் அது மிகையல்ல. பாப் பாடல்களுக்கு அதிகம் பெயர் கிடைப்பதில்லை. பாப் பாடல்களுக்கே அந்த நிலைமை என்றால் ராப் பாடல்களைக் குறித்து சொல்லவே வேண்டாம்.
காதலன், குளிர் 100', பொல்லாதவன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் ராப் வகை பாடல்கள் இடம் பெற்றிருந்தன. குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் காதலன் திரைப்படத்தில் இடம் பெற்ற "பேட்டை ராப்" பாடல் அதிகம் பிரபலமான ஒன்று.
ராப் பாடகர்கள்/இசைக்குழுக்கள் யோகி.பி, நட்சத்ரா, ப்ளாசே, கவிதை குண்டர் என பலரும் தமிழ் ராப் இசை உலகை அதிர வைக்கிறார்கள். அவர்களோடு யுவன் ஷங்கர் ராஜாவும், ஸ்ருதி ஹாசனும் கூட ராப் பாட ஆரம்பித்தி விட்டார்கள். பாடுகையில் அவர்கள் வார்த்தைகளை புரிந்து கொள்வது தான் கொஞ்சம் கடினம்.
யோகி.பி "பொல்லாதவன்" திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் " எங்கேயும் எப்போதும்" என்ற பாடலில் பாடும் நிலா பாலு மற்றும் சுனிதா சாரதியுடன் இணைந்து தனது ராப் வரிசையை காண்பித்திருந்தார்.
'நிழல்கள்' திரைப்ப்டத்தில் இடம்பெற்ற இசைஞானியின் "மடை திறந்து தாவும் நதி" என்ற பாடலை யோகி.பி மற்றும் நட்சத்திரா, வல்லவன் என்ற ராப் ஆல்பத்தில் அவர்களது ராப் மற்றும் ஹிப்-ஹாப் (Hip-Hop)பாணியில் பின்னியிருப்பார்கள். அதன் காணொளி கீழே.
ராப் பாடல்களின் வரிகளை புரிந்து கொள்ள சற்று சிரமம் என்றாலும் அவர்கள் பாடல்களில் ஒரு நோக்கம் நிச்சயம் இருக்கும். வல்லவன் இசைத்தொகுப்பில் நட்சத்ரா "இசைக்கு எல்லை ஏதுமில்லை" என்றனர். கவிதை குண்டர் ஆல்பத்தில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்காகவும் பாடலை எழுதியிருக்கிறார்கள்.
எனினும் பெரும்பாலான ராப் பாடல்கள் அடல்ட்ஸ் ஒன்லி வார்த்தைகளைக் கொண்டிருப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு உண்டு.
கவிதை குண்டர் ஆல்பத்தில் நேஹா பஸின் பாடிய "தனியே" பாடல் தான் பலரையும் கவர்ந்திருந்தது. அது ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் தமிழ் கலவையோடு பாடப்பட்டிருந்தது. அந்த பாடல் இங்கே.
நேஹா பஸின் மும்பையைச் சார்ந்தவர்; சானல் 'வி ' உருவாக்கிய "Viva" என்ற இந்திய பாப் இசைக்குழுவைச் சார்ந்தவர்.
|
நேஹா பஸின் மும்பையைச் சார்ந்தவர்; சானல் 'வி ' உருவாக்கிய "Viva" என்ற இந்திய பாப் இசைக்குழுவைச் சார்ந்தவர்.
கவிதை குண்டர் ஆல்பத்தின் மற்ற பாடல்களை எனது பாப் பாடல்களுக்கான வலைப்பூவான http://thamizhpopsongs.blogspot.com/ என்ற வலைப்பூவில் தொகுத்திருக்கிறேன்.
ராப் இசைப்பிரியர்கள் கேட்டு மகிழுங்கள் / காதை கிழித்துக் கொள்ளுங்கள்.
1 comment:
I have seen few of his videos in Youtube! Cool!
Post a Comment