ஔவையார்னா யாருன்னு கேக்கிற அளவிற்கு தான் இன்னைக்கு நிலைமை பரவலா இருக்குது.பள்ளிப்பருவத்தை திரும்பிப் பார்த்ததில் ஔவையார் மீண்டும் நினைவிற்கு வந்தார்.
இன்னைக்கு இருக்கிற காலகட்டத்தில் ஔவையார் இருந்திருந்தால் இப்படியெல்லாம் யோசித்திருப்பாரோ என நான் யோசித்தது தான் இந்த லேட்டஸ்ட் ஆத்திச்சூடி.
கொஞ்சம் மொக்கை தான்... பொறுத்தருள்க. ஔவையாரின் ஒரிஜினல் ஆத்திச்சூடியையும் கீழே இணைத்திருக்கிறேன்.
அரட்டை செய விரும்பு
ஆர்குட் இல்லன்னா சினம்
இயல்வது கற-இதத்தான நம்ம கறைவேட்டிகள் நேர்மை தவறாம பண்ணிக்கிட்டு இருக்காக
ஈவது நமக்கேன்
உண்மை விளம்பேல்(உண்மையை சொல்லாதே)
ஊன் உறக்கம் கைவிடேல்
என் எழுத்து இகழேல்(என் பதிவை மொக்கையா இருந்தா கூட படிக்காமல் இருக்காதே)
ஏற்பது... (கையூட்டு) ஏற்பது புகழ்ச்சி
ஐயா வருமுன் உண்(அப்பா வந்தா அடி தான விழும்)
ஒடன் பிறப்போடு ஒழுகு(ஐயா கட்சியும், அம்மா கட்சியும் இதத்தான பண்றாக)
ஓடி ஒளியேல்(இப்ப உதவின்னு கேட்டா பல பேர் என்னமா ஓடுறாங்க)
ஔவையார் பேசேல் (இன்னைக்கு ஔவையார்னா வட சுட்ட பாட்டியான்னு கேக்கிற அளவுக்கு இருக்குது!!)
அஃக்கப்போர் சுருக்கேல்
கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டமோ :))
---
உயிர் வருக்கம்
நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.
2. ஆறுவது சினம்
கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.
3. இயல்வது கரவேல்
உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.
4. ஈவது விலக்கேல்
ஒருவர், மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே
5.உடையது விளம்பேல்
உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.
6. ஊக்கமது கைவிடேல்
எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.
7. எண் எழுத்து இகழேல்
கணித, இலக்கண நூல்களைத் தவிற்காமல் நன்கு கற்க வேண்டும்.
8. ஏற்பது இகழ்ச்சி
இரந்து வாழ்வது இழிவானது.அதனால் யாசிக்கக் கூடாது.
9. ஐயம் இட்டு உண்
யாசிப்பவர்கட்கு பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.
10. ஒப்புரவு ஒழுக
உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடுபொருந்துமாறு நடந்துகொள்.
11. ஓதுவது ஒழியேல்
நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.
12. ஔவியம் பேசேல்
ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.
13. அஃகஞ் சுருக்கேல்
அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே.
நன்றி: தமிழ் விக்கி
7 comments:
ஏற்பது... (கையூட்டு) ஏற்பது புகழ்ச்சி
....the best!
ஒளவையார் என்றால் யார் என்று கேட்கும் நிலைமை..... சரியாக யோசித்து, நன்றாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!
அஃக்கப்போர் சுருக்கேல்//////////
கொஞ்சம் இல்ல...ரொம்பவே ஓவரா போய்கிட்டு இருக்கு!
ஊக்க-மது(Beer) கைவிடேல்
இப்பதான் தெரியுது ஔவையார் ஏன் கைல கொம்பு வெச்சுருக்காங்கன்னு... :-)
ஆர்குட்ட விடுறதா இல்ல ,,ஆத்திச்சூடி ஓகே
Thaleevaa overtime-llam vittuputtu ipdidhaan onnutthukkum odhavaadha akkapporllam yosichikeenu irukkeenga polakeedhu. Patti inna paavam pannucho- ungakittallam maattikittu muzhi pidungi nikkudhu. Naayiru naina. Onga rosanai naalave keedhu. Vaazhttukkalungo.......
பின்னூட்டமிட்டம் அனைவருக்கும் நன்றி...
சங்கம் வச்சிருக்கிறவங்களுக்கு...
உங்களுக்கு வேணும்னா ஒண்ணுக்கும் ஒதவாம இருந்திருக்கலாம். பலருக்கு அப்படியில்லை.
Post a Comment