மயிலாடுதுறையில் பிறந்த இந்தியத் தமிழரான விஸ்வநாதன் ஆனந்த், இந்தியர் தானா என்ற சந்தேகம் இந்திய அரசுக்கு வந்திருக்கிறதாம். இந்த கொடுமய எங்க போய் சொல்றதுக்கு.
அதற்கு காரணம்,விஷி சில காலம் ஸ்பெயினில் குடும்பமாக தங்கி இருந்தது என்கிறார்களாம் இந்திய வெளியுறவுத் துறையும்,மனித வள மேம்பாட்டு அமைச்சகமும்.
சதுரங்கத்தில் இந்தியாவிற்காக பல விருதுகளையும்,பெருமைகளையும் பெற்றுத்தந்த இந்தியர் ஒருவருக்கு இந்திய அரசாங்கம் காட்டுகிற மரியாதை இது தான் போலும்.
தமிழனை இதை விட எவரும் அவமதித்து விட முடியாது. இந்த சர்ச்சை வரக் காரணம் விஷிக்கு வழங்கப்படுவதாக இருந்த கவுரவ டாக்டர் பட்டம் தான்.தான் அவமதிக்கப்பட்டிருப்பதால் விஷி அதனை மறுத்தது சரியெனவே படுகிறது.
எவருக்கெல்லாமோ கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்கையில் எல்லாம் எழாத சர்ச்சை விஸ்வநாதன் ஆனந்திற்கு வழங்கப்படுகையில் எழுந்திருப்பது தான் இன்னும் ஆச்சர்யம்.
இத்தனையும் செய்து விட்டு இப்போது விஷியிடம் மத்திய அரசு மன்னிப்பு கேட்டிருக்கிறதாம்.மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரான "கபில் சிபல்"இந்திய அரசு சார்பில் மன்னிப்பு கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இதைத் தான் "பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுறது" என்பதோ!
ஒருவேளை விஸ்வநாதன் ஆனந்த் "இத்தாலி"யிலோ அல்லது வட இந்திய மாநிலம் ஒன்றிலோ பிறந்திருந்தால் இந்த கேள்வியை இந்திய அரசாங்கம் கேட்டிருக்காதோ என்னமோ!?
7 comments:
yenna aachu,,,,,,
//ஒருவேளை விஸ்வநாதன் ஆனந்த் "இத்தாலி"யிலோ அல்லது வட இந்திய மாநிலம் ஒன்றிலோ பிறந்திருந்தால் இந்த கேள்வியை இந்திய அரசாங்கம் கேட்டிருக்காதோ என்னமோ!?//
நிச்சயமாக கேட்டிருக்காது.
சாதனை தமிழரான விஸ்வ நாதன் ஆனந்த் இந்தியரா என்ற கேள்வி ஏன்? இந்திய அரசாங்கத்தின் விஷமத்தனமான நாடகம். தமிழ்நாடு வாழ் தமிழர்களே இதன் விரல்கள் நாளை உங்களை நோக்கியும் நீளலாம்.
என்ன கொடுமை சார், இது?
உரியவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்காததும் தவறானவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதும் ஒன்றுதான் .. இவை இரண்டுமே மன்னிக்க முடியாத செயல் ... இந்தியாவிற்க்க இந்தியக் கோடி ஏந்தி பங்கேற்கும் ஆனந்த்திற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை ... இவ்வளவு நாட்களும் இல்லாத திருநாளாக இப்பொழுது என்ன திடீர் சந்தேகம், ஆனந்த் இந்தியரா இல்லையா என்று .. மேலும் அறிய http://haripandi.blogspot.com/2010/08/blog-post_26.html
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. எல்லா விஷயத்திலயும் அரசியல புகுத்துறானுக இந்த அரசியல் வியாதிங்க.
எல்லாம் கொடுமைன்னு நொந்துக்க வேண்டியது தான் :(
இந்த விடயத்தில் விஸ்வனாதன் ஆனந்த்திற்கு ஆதரவாக பதிவினை அளித்திட்ட எட்வினுக்கு நன்றி! விஸ்வனாதன் ஆனந்த் தமிழ் அடையாளத்தை கொண்டிருப்பது வடக்கத்தியர்களுக்கு ஏனோ அவ்வளவாக விருப்பம் இல்லை. நண்பர்களே! இது குறித்து என்னுடைய வலைபூவினில் பதிவினை தந்திருக்கிறேன்.
http://sakthi.tamilpress.org/viswanathan-ananth-indian-citizenship/
இது குறித்தும் உங்கள் கருத்துக்களை தருக
Post a Comment