(விடுமுறையில் இருப்பதால் வலைப்பக்கம் வந்தே இரு வாரங்களுக்கு மேல் ஆகி விட்டது. முன்னர் எழுதி வைத்த இந்த பதிவை கூட இணைக்க சமயம் வாய்க்கவில்லை)
நீங்கள் எத்தனை சிறப்பு உடையவராயிருந்தாலும்; பல ஆயிரம் திறமைகள் உங்களுக்குள் ஒளிந்திருந்தாலும்;எத்தனை சாதனைகள் நிகழ்த்தியிருந்தாலும், உங்கள் தோலின் நிறம் கவர்ச்சியாக இல்லாமல் கருமையாக இருக்குமெனில் உங்களுக்கு அளிக்கப்படும் மதிப்பும் மரியாதையும் சிவப்போ வெள்ளையோ உடைய நிறத்தவருக்கு அளிக்கப்படும் மரியாதையில் பகுதி கூட அளிக்கப்படுமா என்பது சந்தேகம் தான்.
------
கோலிவுட்டிலும் பாலிவுட்டிலும் கருப்பு நிறம் உடையவர்கள் வெகு சிலரே. ஹாலிவுட்டில் கருப்பராக இருந்த மைக்கேல் ஜாக்சன் அறுவை சிகிச்சை செய்து கொண்டு தனது தோலின் நிறத்தை மாற்றிக்கொண்டதும் உலகம் அறிந்ததே.
அமெரிக்காவிலும் தென்னாப்பிரிக்காவிலும் காலங்காலமாக நிலவி வந்த நிறவெறியையும் அதற்காக மார்ட்டின் லூதர் கிங்கும், நெல்சன் மண்டேலாவும் போராடியதும் மறக்கவியலுமா! அங்கு வெளிப்படையாக கருப்பர்கள் தாக்கப்படுதலும், ஒதுக்கப்படுதலும் நிலவியது என்றால் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் மறைமுகமாக கருப்பர்கள் இன்னமும் தரந்தாழ்ந்தே நடத்தப்படுகிறார்கள்.
அண்மையில் நண்பர் ஒருவர் கூட இதனைக்குறித்து வேதனைப்பட்டிருந்தார். அவரும் சற்று கருப்பு தான். பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் அலுவலகத்தில் பணிபுரிகிறார் அவர். அவருக்கு அளிக்கப்படும் அனைத்து பணிகளையும் எவ்வித சிரமும் இல்லாமல் மிக நேர்த்தியாக செய்து முடிக்கிறவர் அவர். பத்து வருடங்களாக அதே பணியில் இருக்கின்றவருக்கு பணி உயர்வு இது வரை கிடைக்கவில்லை. அவருக்கு கீழே இருந்த வேற்று நாட்டை சேர்ந்த வெள்ளைத் தோலை உடைய பலரும் பணி உயர்வு பெற்று விட்டார்கள். அவரோ இன்னமும் காத்திருக்கிறார்.
இத்தனைக்கும் அவர்கள் அனைவரும் இவரிடம் இருந்து தொழிலை கற்றவர்கள் தான். பதவி உயர்வு அடைந்த பின்னர் நண்பரை கண்டு கொள்வதே இல்லை என்று கூட கூறி வேதனைப் பட்டார்.
பல இடங்களில் இந்த நிலைமை தான் இன்னும் தொடர்கிறது. எனினும் கருப்பர்கள் எந்த விதத்திலும் பிறர்க்கு குறைந்தவர்கள் அல்லர். அந்த விதத்தில் சாதனை படைத்த சிலரை கருப்புச் சாதனையாளர்கள் என்ற இந்த பதிவில் தொகுத்திருந்தேன்.
கருப்பர்களை கேவலமாக பார்ப்பது இன்னும் தொடரத்தான் செய்யும் போல.
10 comments:
மனம் கனக்கும் பதிவு! வேதனை!
விளம்பரங்களில் கூட, வெள்ளையாய் இருந்தால் தான் முன்னேற முடியும் என்று காட்டி .... ச்சே......
"வெள்ளையனே வெளியேறு!" என்று சொன்ன இந்தியாவில் - இன்று: "வெள்ளையாகி முன்னேறு!" என்று அலறுகிறார்களே!
உண்மை தான் . மனம் கணக்கும்பதிவு........
//இத்தனைக்கும் அவர்கள் அனைவரும் இவரிடம் இருந்து தொழிலை கற்றவர்கள் தான். பதவி உயர்வு அடைந்த பின்னர் நண்பரை கண்டு கொள்வதே இல்லை என்று கூட கூறி வேதனைப் பட்டார்.// i felt so sad . thanks for sharing.
//பத்து வருடங்களாக அதே பணியில் இருக்கின்றவருக்கு பணி உயர்வு இது வரை கிடைக்கவில்லை//
திறமையாக வேலை செய்தும் கிடைக்கவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. கருப்பாக இருந்தாலும் பன்னாட்டு நிறுவனங்களில் திறமை இருந்தால் கண்டிப்பாக வாய்ப்பு கொடுப்பார்கள் பன்னாட்டு நிறுவனம் என்று மட்டுமல்ல எந்த நிறுவனத்திலும்.
ஓரிரு வருடங்கள் என்றால் பராவாயில்லை அதற்க்கு வாய்ப்புள்ளது பத்து வருடங்கள் என்பது நம்ப சிரமமாக உள்ளது. திறமையான நபராக இருப்பின் அவர் இவ்வளவு வருடங்கள் அங்கு வீண் செய்ததே மிகத்தவறு வேறு நிறுவனத்திற்கு மாறி இருக்கலாம் மாறி இருக்க வேண்டும்.
இனியும் தாமதிக்காமல் வேறு ஒரு நல்ல நிறுவனத்தில் சேர்ந்து தன் திறமையை நிரூபிப்பதே உங்கள் நண்பருக்கு நல்லது.
தற்போதைய உலகத்தில் நல்லவராக இருந்தால் மட்டும் போதாது!
நன்றி எஸ்.கே, நிலாமதி, மதுரை சரவணன்.
Chitra Said
//"வெள்ளையனே வெளியேறு!" என்று சொன்ன இந்தியாவில் - இன்று: "வெள்ளையாகி முன்னேறு!" என்று அலறுகிறார்களே!//
ஆமா அக்கா அப்படித்தான் இருக்குது இன்னைக்கு நிலைமை
----------------------
கிரி Said...
//இனியும் தாமதிக்காமல் வேறு ஒரு நல்ல நிறுவனத்தில் சேர்ந்து தன் திறமையை நிரூபிப்பதே உங்கள் நண்பருக்கு நல்லது//
ஆமாங்க அதைத்தான் நானும் அவரிடம் கூறினேன்.
நானே நான்கு கல்லூரி பெண்கள் சாலையில் வரும் பொழுது, முதலில் பார்ப்பது வெள்ளை தோல் பெண்ணை தான்.
பெரும் உண்மை. நிறவெறி குறிப்பிட்ட மாநிலங்களில் அதிகம் தான். அதுவும், தன்னை அடையாளப் / விலைப்படுத்திக் கொள்ளத் தெரியாதவர்களுக்கு முன்னேற்றம் எளிது அல்ல.
ராம்ஜி_யாஹூ said...
//நானே நான்கு கல்லூரி பெண்கள் சாலையில் வரும் பொழுது, முதலில் பார்ப்பது வெள்ளை தோல் பெண்ணை தான்//
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு... :)
கருப்பிலும் அழகு தேவதைகள் இருக்கத்தானே செய்கிறார்கள். அட கருப்பு தேவதையா!?! ச்சே... ச்சே... தேவதைகளை கூட வெள்ளையில் தானே காட்டுகிறார்கள் :(
கெக்கே பிக்குணி said...
//தன்னை அடையாளப் / விலைப்படுத்திக் கொள்ளத் தெரியாதவர்களுக்கு முன்னேற்றம் எளிது அல்ல//
சரியாக சொன்னீர்கள்
Post a Comment