11/02/2011 - 11022011
இன்றைய தேதி... நிச்சயம் பலரது கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும். வலமிருந்து இடமாக பார்த்தாலும்; இடமிருந்து வலமாக பார்த்தாலும் ஒன்றாக அமைந்திருக்கிறது.
அதோடு எகிப்தில் ஒரு சகாப்தம் முடிவடைந்தது மகிழ்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. இனி அமைக்கப்படும் அரசாங்கம் மக்களுக்கு நன்மையானதாக அமைந்தால் அதுவே இந்த புரட்சியின் வெற்றியாகும். எகிப்தின் இந்த பயணம் இனிமையானதாக தொடரட்டும்.
தமிழகத்திலும் இது போன்ற மாற்றம் வரவேண்டும்; வருமா?!!
வலைப்பக்கம் வந்தே இரு வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது. எழுதுவதற்கு பல எண்ணங்கள் மனதில் இருந்தாலும் அதற்கான நேரம் வாய்க்காமையால் எழுதவியலவில்லை.
புதிய வீட்டில் குடியேறுவதற்கான முன்னேற்பாடுகளில் இருப்பதால் நேரம் அதிகமாக வாய்க்கவில்லை. ஓரிரு தினங்களில் மீண்டும் எழுதலாம் என்றிருக்கிறேன்.
அனைவருக்கும் எனது நன்றிகளும், வாழ்த்துக்களும்.
6 comments:
BEST WISHES!!!
புதிய வீட்டில் குடியேறுவதற்கான முன்னேற்பாடுகளில் இருப்பதால் நேரம் அதிகமாக வாய்க்கவில்லை.//
எகிப்து தனது புதிய வீடு காற்றை சுவாசிக்க தயாராகி விட்டது...உங்களை போலவே...ஆனால் தயார் ஆகுமா தமிழ்நாடு ?
புது வீடு எப்பிடி சார்!!
நன்றி சித்ரா அக்கா, அன்பர்கள் டக்கால்டி மற்றும் கார்த்தி.
@ டக்கால்டி
தமிழ்நாடு ஊழல் செய்பவர்களின் கைகளில் தான் முடங்கி கிடக்க வேண்டும் என்பது தலைவிதி போலும்
@ கார்த்தி
புது வீடு குவைத்தில் என்பதால்... அதுவும் வாடகை வீடு என்பதால் சிரமமாக தோன்றவில்லை :)தமிழகத்தில் வீடு வைக்க வேண்டுமென்று நினைத்தாலே கண்ணை கட்டுகிறது :(
Post a Comment