September 30, 2008

இறைவனை ஏன் வெளி இடங்களில் தேடுகிறீர்கள்

செப்டம்பர் 30 2008

ஜோத்பூரில் இன்று நடந்த அசம்பாவிதம் வேதனைக்குரியது; இமாச்சல் மாநிலத்தில் அசம்பாவிதம் நிகழ்ந்த ஒரு மாதத்திற்குள் மற்றுமொரு வேதனையளிக்கும் சம்பவம் இது;நம்மவர்கள் சுதாரித்துக் கொள்வது எப்போதோ புரியவில்லை;
இறைவன் நமக்குள்ளேயே இருக்கையில் ஏன் வெளியிலே தேடுகிறார்கள் என்பதும் தெரியவில்லை;அதுவும் பண்டிகை காலங்களில் மட்டும் எம்மதத்தவராயினும் மிக பக்தி உணர்வோடு தேடுவது ஏனோ இறைவனுக்கே வெளிச்சம்;
நமது அன்பால் ஆதரவால் கருணையால் பிறருக்கு இறைவனை வெளிக் காட்டலாமே;இறைவன் இது போன்ற வடிவங்களில் நம்முள்ளேயே தானிருக்கிறான்;இன்னும் ஏன் இறைவனை வெளியிலே தேட வேண்டும்;

(பின் குறிப்பு: வழிபாட்டு தலங்களுக்கு செல்வதை நான் ஒட்டு மொத்தமாக குறை கூறவில்லை;பண்டிகை காலங்களில் மட்டும் ஏன் என்று தான் புரியவில்லை)

சில நேரங்களில் சில மனிதர்கள்

சில நேரங்களில் சில மனிதர்கள்

இன்றைய உலகம்
இமாலய உயர முன்னேன்றங்களை கண்டிருப்பினும்
இமைப்பொழுது கூட மற்றவர்களுக்கு கரிசனை காட்டா அளவிற்கு
முடுக்கி விடப்பட்ட வாழ்க்கை முறையை
முயன்று கொண்டிருக்கிறது;தனக்குள்
முனங்கி கொண்டிருக்கின்றது
அணுகி வினவுவோமானால்
அவ்விதமிருக்க யாரும் விரும்புவதில்லை அடுத்திருப்போர்; அவர்களுடுத்துள்ள சூழ்நிலை;
இவை தான் அவர்களை அவ்விதம் மாற்றியிருக்கிறது
பணத்திற்காக இன்று பாசம்;வெளி வேஷமாகி
பலரது உயிரை காவு வாங்குகின்றது பரிதாபத்திற்குரியது
பணம்;பகல் போன்ற வாழ்விலே
பாசத்தை மறைக்கும் இருளாகி விட்டது.
பந்தங்கள்;பணத்திற்காக
பகல் வேஷமாய்
பகட்டு நாடகமாகின்றன
இங்கு சிலர் வாழ்வோ பகலும் கூட;வெளிச்சமின்றி
இரவாய் கடந்து கொண்டிருக்கின்றது
இவ்விதம் வாழ்க்கை முறையினை இயற்றியவர் யார்;
இருபது ஆண்டுகளுக்கு முன்
இந்நிலை இல்லையே
எங்கு நோக்கினும் குண்டு வெடிப்புகள்
முன் எப்போதுமிலாத அளவுக்கு முரண்பாடுகள்;சமூகத்தினரிடையே
ஆனால் ஏன் இவைகள்;
காரணம் வேறு யாருமிலர்
நாமே தான்;
நமது சமூக அமைப்பு தான்;
நமது எதிர்பார்ப்புகள் தான்;
எதிபார்ப்புகள் ஏமாற்றமாகும் பொழுது
விரக்தியடைகிறோம்;
பிறரால் ஏவப்பட்டு;
ஏவி விடப்பட்டு சமூகத்தை சீர்குலைக்கிறோம்
...மட்டுமின்றி,
இந்திய சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் வரை
அரசியல் வாதிகளின்;சந்தர்ப்பவாத;சாக்கடை-
அரசியல் இருக்கும் வரை
பிரித்தாளும் கொள்கை இருக்கும் வரை
சமய/மார்க்க நல்லிணக்கம் இல்லாத வரை
பிரிவினைகள் இருக்கும் வரை
சமாதானத்திற்குக் வாய்ப்பே இல்லை
என் இந்திய திருநாட்டில்;
எத்தனை மதங்கள்; எத்தனை மார்க்கங்கள்;
எத்தனை கட்சிகள்; எத்தனை கொள்கைகள்;
எத்தனை சங்கங்கள்&; எத்தனை சம்பிரதாயங்கள்;
இவையனைத்தும் ஒன்று சேரும் வரை
இந்திய தேசத்தில் குண்டுவெடிப்புகளும் அவலங்களும்
கொலைகளும் கொடூரங்களும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்; அதுவரை இந்திய மண்ணில் சமாதானம் என்பது இல்லை.
அனைவரையும் ஒரேயடியாகக் குறை கூறுவதற்குமில்லை;
அதைத்தான் ஆரம்பத்தில் கூறினேன்...
Related Posts with Thumbnails