March 12, 2009

தினகரன் பெயரில் சாலை ஏன்?

சென்னை கிரீன்வேஸ் சாலை,இயேசு அழைக்கிறார் நிறுவனர் திரு.தினகரன் அவர்களின் பெயரில் மாற்றப்படும் என கடந்த மாதத்தில் முதல்வரால் அறிவிக்கப்பட்டது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் மீதான நல்லெண்ணம் காரணமாக என கருதவியலவில்லை.


இரு மாதங்களுக்குள்ளாக தேர்தல் நடைபெறவிருக்கின்ற நிலையில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரின் வாக்குகளைப் பெறும் உள்நோக்கத்தோடு அறிவிக்கப்பட்ட வாக்குறுதியாகவே தெரிகிறது.


கிரீன்வேஸ் சாலையின் பெயர் மாற்றப்படுதலுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகையில், சாலைக்கு பெயர்மாற்றுதல் மேலும் பிரச்சினைகளையும்,பிற சமயத்தவரிடையே வெறுப்பையுமே ஏற்படுத்த வாய்ப்புள்ளது.


சில வருடங்களுக்கு முன்னதாக அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் பெயர்களினால் அரசுப் பேருந்துகள் பிரிவினைப்படுத்தப் பட்ட போது ஏற்பட்ட மனக்கசப்பு தற்போதும் ஏற்பட வாய்ப்புள்ளது.


அதன் பின்னர் "தமிழ்நாடு அரசுப் பேருந்து" என மட்டுமே பேருந்துகள் அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


தேர்தல் வரும் நேரத்தில் இந்த அறிவிப்பு தேர்தலை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட தீர்மானமாகவே தெரிகிறது.


சமயங்களினால் பிற மாநிலங்கள் கண்டு வரும் கலவரங்களை தமிழகமும் காண வேண்டும் என யாரும் எழுதி வைத்திருக்கிறார்களோ என்னமோ!


ஏற்கெனவே ஈழப்பிரச்சினைகளினாலும்,வழக்கறிஞர்கள்-போலீசார் மோதல்களினாலும் கலவரமாகி இருக்கும் தமிழகத்தில் மேலும் பிரச்சினைகள் அவசியம் தானா? அதுவும் தேர்தல் நெருங்கி வரும் காலகட்டத்தில்!

8 comments:

ஆனந்தன் said...

உங்களுக்கு தோன்றிய அதெ எண்ணமே எனக்கும் தோன்றியது,இது சம்பந்தமான ஒரு பதிவையும் படிக்க நேர்ந்தது.அந்த பதிவுக்கான இணைப்பை இங்கு கிளிக் செய்து படிக்கலாம்
http://v-focus.blogspot.com/2009_02_01_archive.html

Anonymous said...

கருனாநிதி ஓட்டுக்காக எதையும் செய்யும் மனிதன். தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்லமாட்டார். ஆனால்
முஸ்லீம் விழாவில் கஞ்சி குடிக்கச் செல்வார். மத நம்பிக்கையற்ற மனிதனுக்கு அனைத்து மதமும் ஒன்றுதானே?

அவரது வயது அவருக்கு இன்னும் மனப்பக்குவததைக் கொடுக்கவில்லை.
இந்த உலகத்தில் அவருக்காக படைக்கப்பட்ட மற்றவர் ஜெயலலிதா.

இப்போது புரிகிறதா கருனாநிதியின் தரம் ?


புள்ளிராஜா

ttpian said...

Dinakaran road? so, dinakaran's son can sell it?
Oh Jesus!
just forgive them!

குப்பன்_யாஹூ said...

yes one saide they say no god, periyarism etc, other side naming dinakaran road for votes.

So they accept Dinakaran's work and jesus christ.

I am sure DK leader veeramani wont object this because Dinakaran pertains to his caste (Naadar).

Rajaraman said...

ஒட்டு கிடைக்கும் என்றால் எதயும் செய்யக்கூடிய மனிதர் தான் கருணாநிதி.

mcharlespravin said...

இந்த முறை ,தினகரனா கிடைச்சார் ,,,கலக்குங்க கருணாநிதி,,நடத்துங்க,,

Anonymous said...

தினகரன் என்ற பெயர் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் கூட ஏற்புடைய பெயர் அல்ல!

Anonymous said...

தனது தந்தையின் பெயரை கிரீன்வேஸ் சாலைக்கு வைக்க பால் தினகரன் கருணாநிதிக்கு எவ்வளவு பணம் கொடுத்தாரோ?

Post a Comment

Related Posts with Thumbnails