March 16, 2009

விடை தெரியாத சில 'எடக்கு மடக்கான' கேள்விகள்

'எடக்கு மடக்கு' அப்படின்னா என்னன்னு பதிவர் ஜீவா கிட்ட கேட்டுக்கோங்க, அவரு ஏற்கெனவே "குண்டக்க மண்டக்க" "ங்கொய்யாலா" போன்ற இலக்கியத் தமிழ்!!! (*#%@*# அப்படின்னு நீங்க மனசில திட்டுறது நல்லாவே கேக்குது)வார்த்தைகளுக்கு விளக்கமளித்திருக்கிறார்.

1.சாவகாசமாக (இது போன்ற)மொக்கை பதிவு போடும் போதோ அல்லது (பெண்) நண்பர்களிடம் சாவகாசமாக அரட்டை அடிக்கும் போதோ காட்டாத வேகம் பென் ட்ரைவை கழட்டும் போது மட்டும் ஏன்? (safe to remove என தெரிவதற்கு முன்னரே!)

(அப்பப்பா Rhymic ஆ எழுதனுமே நு பெண்-பென் அப்படின்னு எதோ எழுதி விட்டாச்சு)

2.ஓடும் அலார மணியையும் அணைத்து விட்டு தூங்கும் நாம், தாமதமாகி விட்டது என ஓடும் பேருந்தை பிடிக்க ஓடுவது ஏன்?

3.சாப்பிடும் முன்னர் கை அலம்ப சோம்பல் கொண்டு... இன்று ஒரு நாள் தானே; ஒரு நாள் கை அலம்பாவிட்டால் என்ன ஆகப் போகுது என நினைப்பது ஏன்?

4.கடிதம் அல்லது மின்னஞ்சல் ஒருவருக்கு எழுத வேண்டும், அத்தனை அவசரம் ஒன்றுமில்லையே மெதுவாக எழுதலாம் என சோம்பலுற்று படுக்கைக்கு போவது ஏன்?

5.நண்பனை தொலைபேசியில் அழைக்க வேண்டும்,வேலை முடிந்த களைப்பில் அவன்/அவள் தானே நாளை பேசிக் கொள்ளலாம் என கருதுவது ஏன்?

6.Repair என்பது (Re+Pair) பழுதானதை ஒன்று சேர்த்தல் என்று பொருள்படும், ஆனால் டிவி ரிப்பேர் ஆகி விட்டது, மிக்ஸி repair ஆகி விட்டது என நாம் சொல்வது ஏன்?

7.சினிமா தியேட்டரில் டிக்கெட் இல்லையென்றால், ப்ளாக்கில் எவ்வளவு ஆனாலும் பணம் கொடுத்து டிக்கெட் எடுக்க யோசிக்காத நாம், இல்லாதவருக்கு கொடுக்கும் விஷயத்தில் ஒருமுறைக்கு பலமுறை யோசிப்பது ஏன்?

8.வாக்களிக்கும் உரிமை இருந்தும், 'நம்ம ஒரு ஆள் ஓட்டு போடா விட்டால் என்ன ஆகிவிடப் போகிறது' என நினைப்பது ஏன்?

எனவே இம்முறையாவது வாக்கு அளியுங்கள் அன்பர்களே வாக்கு அளியுங்கள்.

(வெளியில் இருக்கும் எங்களைப் போன்றோருக்கு தான் வாக்களிக்கும் உரிமை இல்லையென்கிறார்கள்... ஊரில் இருக்கும் நீங்களாவது வாக்களியுங்கள்)

12 comments:

நசரேயன் said...

//வெளியில் இருக்கும் எங்களைப் போன்றோருக்கு தான் வாக்களிக்கும் உரிமை இல்லையென்கிறார்கள்... ஊரில் இருக்கும் நீங்களாவது வாக்களியுங்கள் //
அரசாங்கம்
பயணச்செலவு கொடுத்தால் நானும் ஓட்டு போட வருவேன்

முரளிகண்ணன் said...

நல்ல கேள்விகள். கடைசி கேள்வியில் சிந்திக்க வைத்துவிட்டீர்கள்.\\Repair என்பது (Re+Pair) பழுதானதை ஒன்று சேர்த்தல் என்று பொருள்படும், ஆனால் டிவி ரிப்பேர் ஆகி விட்டது, மிக்ஸி repair ஆகி விட்டது என நாம் சொல்வது ஏன்?\\

ரிப்பேருக்கு போகும்படி ஆகி விட்டது என்பதுதான் மருவி ரிப்பேராகிவிட்டது என்று சொல்லும்படி ஆகிவிட்டதோ?

:-)

தமிழ்நெஞ்சம் said...

vow. nice

nTamil said...

Hi,

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

நாமக்கல் சிபி said...

:)

ஜீவா said...

அன்பு எட்வின் நண்பர் அவர்களே தங்களின் கேள்விகள் மிகவும் அருமையாக இருக்கிறது, எடக்கு மடக்கு என்பது இடையில் புகுந்து மடிக்கி கேட்பதால் அது , எடக்கு மடக்கு கேள்வியானது என்று நான் நினைக்கிறன், இப்பொழுது நான் ஒரு கேள்வி கேட்கிறேன், அதற்கு பதில், ஆம், இல்லை என்று மட்டும் சொல்லவேண்டும்.
நீங்கள் லஞ்சம் வாங்குவதை நிறுத்திவிடீர்களா? இது தமாசுக்காக கேட்ட கேள்வி தவறாக நினைக்கவேண்டாம்.
அன்புடன்
ஜீவா

Anonymous said...

யாரவது இந்த விஜய்க்கு பதில சொல்லுங்கப்பா
http://vinothkumarm.blogspot.com/2009/03/vijay-got-angry-in-interview.html

புருனோ Bruno said...

//Repair என்பது (Re+Pair) பழுதானதை ஒன்று சேர்த்தல் என்று பொருள்படும், ஆனால் டிவி ரிப்பேர் ஆகி விட்டது, மிக்ஸி repair ஆகி விட்டது என நாம் சொல்வது //

தவறு தான்

//ரிப்பேருக்கு போகும்படி ஆகி விட்டது என்பதுதான் மருவி ரிப்பேராகிவிட்டது என்று சொல்லும்படி ஆகிவிட்டதோ?//
இருக்கலாம்

எட்வின் said...

முதல்வர் கிட்ட பேசி பாக்கலாம் நசரேயன் :) முரளிகண்ணன்,தமிழ்நெஞ்சம்,சிபி, Ntamil& புருனோ ஆகியோருக்கு நன்றி.

அய்யா ஜீவா ஏன் இந்த கொல வெறி?

"ஆமானு சொன்னா...அப்போ இது வர லஞ்சம் வாங்கியிருக்கீருனு சொல்வீங்க" இல்லனு சொன்னாலும் ஆபத்து.

நல்லா மாட்டி விடுறீங்களே.

குதர்க்கமான கேள்விய கேட்டுபுட்டீங்க.சரி குதர்க்கம்னா என்னாங்க? :))

GERSHOM said...

ஜீவவோட கேள்விக்கு பதிலளிக்கவிட்டளும் பரவா இல்ல...கடைசியா அவருகிட்ட குதர்க்கம் பற்றி கேட்டு வச்சீங்க பாருங்க ...அது தான் பஞ்ச்!

எல்லா கேள்விகளும் ரசிக்கும்படியாவும் சிந்திக்கும் படியாவும் இருந்துச்சு!
வாக்கு அளிக்க முடியாத ஏக்கம் தெரியுது...ஆமா நீங்க எந்த கட்சி?

ஜீவா said...

அன்பு நண்பர் எட்வின் ஐயா அவர்களே நீங்கள் கேட்ட குதர்க்கம் எப்படி வந்தது தெரியுமா,
குதறும் -(கடித்து) வர்கம் =குதர்க்கம் - மாறி இருக்கும் என நினைக்கிறேன், தயவு செய்து அடுத்த கேள்விகளை கேட்டு விடாதீர்கள், மூளையை அதிகம் கசக்கி பிழிய வேண்டிவுள்ளது
என்றும் அன்புடன்
ஜீவா
அன்புடன்
ஜீவா

செம்மலர் செல்வன் said...

தவறாக நினைக்க வேண்டாம் நண்பரே.. எடக்கு மடக்கா எழுத தொடங்கிய பதிவு தானே அதனால் நானும் இங்கே ஒன்று...

பணம் வாங்கி கொண்டு ஓட்டு போடுவதா, இல்லை நம் ஓட்டை யாராவது போடுவதை வேடிக்கை பார்ப்பதா,அவ்வாறு நாமே சென்று உண்மையாக போட்டாலும் எவருக்கு செலுத்துவது?

தமிழின தலைவருக்கா? தமிழின அன்னைக்கா? சுதந்திரம் வாங்கி கொடுத்தவர்களுக்காகவா ? 49 O மாதிரி ஓட்டு போட்டா என்ன நிகழும்? இதன் விளைவுகள் எப்படி இருக்கும்?

Post a Comment

Related Posts with Thumbnails