January 05, 2010

பஞ்சரா(க்)கும் பஞ்ச் டயலாக்குகள்

பஞ்ச் டயலாக்... பஞ்ச் டயலாக் என தமிழ் திரைப்பட உலகம் தான் நம்மைப் பஞ்சராக்கிக் கொண்டிருக்கிறது என்றால் நமது எண்ணங்களையும் கருத்துக்களையும் கூட பஞ்ச் டயலாக்காகவே பாவிக்கும் பலரை என்னவென்று சொல்வது!

ஏற்கெனவே தமிழ் திரைப்பட உலகம் தங்லீஷ் பாடல்களையும், உரையாடல்களையும், உட்கொண்டிருக்க பஞ்ச் டயலாக் என்ற வாக்கும் தமிழ்நெஞ்சங்களை பாதித்திருப்பதில் வியப்பில்லை.

"பணம் பெருகப்பெருக பலருக்கு குணம் சிறுத்துப் போவது ஏனோ" என ஒரு வலைப்பதிவில் எழுதியதை படித்துவிட்டு பஞ்ச் டயலாக் நன்றாக இருக்கிறது என பதிலளித்திருக்கிறார்கள் சிலர்... இந்த கொடுமய எங்க போய் சொல்லுறது.

"சாமிக்கு முன்னாடி மட்டும் தான்டா சாந்தமா இருப்பேன்; சாக்கட முன்னாடியெல்லாம் இல்ல" போன்றவற்றையெல்லாம் வைத்தால் படம் வெற்றியடைந்து விடும் என கனவு காண்கிறவர்கள் இருக்கும் வரை பஞ்ச் டயலாக்குகளுக்கு குறைவிருக்காது.

ஏற்கெனவே காளை-சிம்பு, மலைக்கோட்டை-விஷால், சுள்ளான்-தனுஷ் என பஞ்ச் டயலாக்குகளை நம்பி படம் செய்தவர்கள் ஏமாந்த கதை இன்னுமா தமிழ்திரையுலகிற்கு புரியவில்லை.

தமிழ்திரையுலகம் தனது பஞ்ச் டயலாக்குக்களால் ரசிகர்களை பஞ்சராக்காமல் விடாது போல் தான் தெரிகிறது.

1 comment:

கிறிச்சான் said...

"சாமிக்கு முன்னாடி மட்டும் தான்டா சாந்தமா இருப்பேன்; சாக்கட முன்னாடியெல்லாம் இல்ல" ///விஜய், சிம்பு வரிசை'ல ரித்தீஷ் மாதிரி புதுப் புது நாதாரிங்களும்...கொல்லுரானுக ய்யா...

Post a Comment

Related Posts with Thumbnails