நான்கு தினங்களுக்கு முன்னதாக ஓமன் நாட்டில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். ஒரு இடத்தில் பேருந்து நிறுத்தப்பட்டது;நான் தூக்கம் கலைந்து ஏன் பேருந்து நிறுத்தப்பட்டது என்ற கேள்வியோடு கண் விழித்துப்பார்க்கையில் உடன் பயணித்த 90 % (ஆண்) பயணிகள் வெளியிலே தங்கள் பின்புறத்தைக் காட்டிக்கொண்டு ஏதோ செய்து கொண்டிருப்பதைக் காண நேர்ந்தது. சில மணித்துளிகளுக்குப் பின்னர் கண்ணை கசக்கிக் கொண்டு தூக்கத்திலிருந்து முழுமையாக மீண்ட பின்னர் தான் புரிந்தது அவர்கள் அனைவரும் நம்பர் 1 போய்க்கொண்டிருந்தார்கள் என்று.
பேருந்தில் பெண்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணமும் கூச்சமும் கொஞ்சம் கூட இல்லாமல் பட்டப்பகலிலேயே அதுவும் வெளிநாட்டில் இத்தகைய காரியத்தை செய்வதற்கு நம்ம நாட்டு மக்களுக்கு எப்படி தான் தோன்றுகிறதோ தெரியவில்லை. இத்தனைக்கும் படிக்காதவர்கள் என்றால் கூட பரவாயில்லை. மெத்த படித்த பொறியாளர்களும், அலுவலக அதிகாரிகளுமே இத்தகைய காரியத்தைச் செய்வது தான் கவலைக்குரிய விஷயம். என்னுடன் பயணம் செய்த இரு அமெரிக்கர்கள் நம்மவர்களைக் கிண்டலடிக்க எனக்கு மிகுந்த மன சங்கடமாகிவிட்டது.பேருந்து ஓட்டுனரையும்(பாகிஸ்தானைச் சார்ந்தவர்) குறை சொல்ல வேண்டியதுள்ளது. பயணிகள் தவறு செய்வதற்கு இவரும் காரணமாகி விட்டார்.சாதாரணமாக ஓமன் நாட்டு ஓட்டுனரென்றால் இப்படி வழிகளில் நிறுத்த மாட்டார்; கழிப்பிடம் இணைக்கப்பட்டுள்ள சாலையோர உணவகங்கள் அருகில் நிறுத்தவது தான் வழக்கம்.
தமிழகத்திலும் பேருந்து பயணங்களின் போது பல முறை இதனைக் கவனித்திருக்கிறேன்.
இந்த பழக்கம் நம்மவர்கள் நம் ஊரிலிருந்து கற்றுக்கொண்டு சென்றது தான். பிறநாடுகளுக்கும் சென்று நாங்கள் இப்படிப்பட்டவர்கள் தான் என்று தங்கள் பெருமையைப் பறைசாற்றுகிறார்கள்.
நமது இந்தியாவை, தமிழகத்தை, சுற்றுப்புறத்தை அறிந்தும் அறியாமலும் நாமே குப்பை மேடாக்கி வருவதும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. பிளாஸ்டிக் குவளைகளில் தேனீர் மற்றும் குளிர்பானங்கள் அருந்தும் நம்மில் சிலர் அதனை அலேக்காக ஓடும் ரயிலில் இருந்து அப்படியே வீசியெறிவதும், பேருந்து பயணச் சீட்டுகளை பயணம் முடிந்ததும் காற்றில் பறக்க விடுவதும், போதை வஸ்துக்களை மென்றுவிட்டு ப்ளிச் ப்ளிச் என நடை மேடைகள் மற்றும் திரையரங்குகளில் உமிழ்வதும்.வேர்க்கடலைகளை வயிற்றினுள்ளே தள்ளிவிட்டு அதன் தோடுகளை ஹாயாக பேருந்திலும், ரயிலிலும், திரையரங்குகளிலும் இருக்கைகளின் அடியிலே தள்ளுவதும் தொடர்ந்து கொண்டு தானே இருக்கிறது.
இது போன்ற சிறிய விஷயங்களில் நாம் தவறு செய்வதை நிறுத்தினாலே நமது இந்தியாவை நாம் சுத்தமும் சுகாதாரமுமாக வைக்க இயலும். மேலும் பெற்றோர்கள் இது போல தருணங்களில் தத்தம் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருத்தலும் மிக அவசியம். இல்லையென்றால் வெளிநாடுகளில் நமது மானம் தொடர்ந்து காற்றில் பறப்பது தொடரத்தான் செய்யும்.

8 comments:
சுதந்திரத்த நல்ல அனுபவிப்பவர்கள் நம்மாளுங்கதான்.... :-)
இப்ப நீங்க என்ன சொல்ல வரிங்க? எங்கயோ ஒரு காட்டுல போன என்ன தப்பு? ஊருக்குள்ள போன ஏதாவது சொல்லலாம்.
இந்த சின்ன விஷயம் ஏன் பெரிசு பண்றீங்க? இதுல தான் இந்தியா மானம் இருக்குனா எங்களுக்கு அது வேணாம்.
//பெற்றோர்கள் இது போல தருணங்களில் தத்தம் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருத்தலும் மிக அவசியம்//
ஆமா...
சரவணன் மற்றும் கபீஷின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி
//எங்கயோ ஒரு காட்டுல போன என்ன தப்பு? ஊருக்குள்ள போன ஏதாவது சொல்லலாம்
// இது மட்டுமல்ல அனானி நண்பரே. மஸ்கட்டில் நம்மவர்கள் செய்கின்ற பல அநாகரீக செயல்களையும் பார்த்திருக்கிறேன். குளிர்பானங்களை அருந்திவிட்டு குப்பைத்தொட்டிக்கு அருகிலேயே வீசிச் செல்கிறார்கள். தொலைபேசி ரீசார்ஜ் அட்டைகளை அப்படியே கடைகளின் முன்னர் காற்றில் பறக்க விடுகிறார்கள். இதற்கெல்லாம் என்ன சொல்கிறீர்கள்? இன்னும் பல...
//கண்ணை கசக்கிக் கொண்டு தூக்கத்திலிருந்து முழுமையாக மீண்ட பின்னர் தான் புரிந்தது அவர்கள்
அனைவரும் நம்பர் 1 போய்க்கொண்டிருந்தார்கள் என்று.
//
கொஞ்சம் நேரம் கழிச்சி கண் விழித்துயிருக்கலாம், சரி பரவாயில்லை, வண்டி எந்த(ஊருக்குள்/ஊருக்கு வெளியே) இடத்தில் நின்றது என்பதை நிங்கள் குறிப்பிடவில்லை, அதுபோல் உங்கள் மொத்த பயண நேரத்தையும் குறிப்பிடவில்லை, நான் பொது இடங்களில் சீறுநீர் கழிப்பதை சரி என்று சொல்லவரவில்லை, ஆனால் சில விதிவிலக்கு இருக்கு, எ-டு வெகுதொலைவு பணத்தின்போது சீறுநீர் அவசரமாக வரும்போது ஊருக்கு வெளியே மறைவான இடங்களில் சீறுநீர் போகலாம் அது ஒன்றும் பெரிய குற்றம் கிடையாது
//
வெளிநாட்டில் இத்தகைய காரியத்தை செய்வதற்கு நம்ம நாட்டு மக்களுக்கு எப்படி தான் தோன்றுகிறதோ தெரியவில்லை. இத்தனைக்கும் படிக்காதவர்கள் என்றால் கூட பரவாயில்லை. மெத்த படித்த பொறியாளர்களும், அலுவலக அதிகாரிகளுமே இத்தகைய காரியத்தைச் செய்வது தான் கவலைக்குரிய விஷயம். என்னுடன் பயணம் செய்த இரு அமெரிக்கர்கள் நம்மவர்களைக் கிண்டலடிக்க எனக்கு மிகுந்த மன சங்கடமாகிவிட்டது சாதாரணமாக ஓமன் நாட்டு ஓட்டுனரென்றால் இப்படி வழிகளில் நிறுத்த மாட்டார்; கழிப்பிடம் இணைக்கப்பட்டுள்ள சாலையோர உணவகங்கள் அருகில் நிறுத்தவது தான் வழக்கம்.
நமது இந்தியாவை, தமிழகத்தை, சுற்றுப்புறத்தை அறிந்தும் அறியாமலும் நாமே குப்பை மேடாக்கி வருவதும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. பிளாஸ்டிக் குவளைகளில் தேனீர் மற்றும் குளிர்பானங்கள் அருந்தும் நம்மில் சிலர் அதனை அலேக்காக ஓடும் ரயிலில் இருந்து அப்படியே வீசியெறிவதும், பேருந்து பயணச் சீட்டுகளை பயணம் முடிந்ததும் காற்றில் பறக்க விடுவதும், போதை வஸ்துக்களை மென்றுவிட்டு ப்ளிச் ப்ளிச் என நடை மேடைகள் மற்றும் திரையரங்குகளில் உமிழ்வதும்.வேர்க்கடலைகளை வயிற்றுனுள்ளே தள்ளிவிட்டு அதன் தோடுகளை ஹாயாக பேருந்திலும், ரயிலிலும், திரையரங்குளிலும் இருக்கைகளின் அடியிலே தள்ளுவதும் தொடர்ந்து கொண்டு தானே இருக்கிறது//
பெண்கள்,பட்டப்பகல், மெத்த படித்தவர் இப்படிபட்ட பேதம் பார்த்து வருவதில்லை சீறுநீர், அது தனிச்சையாக வருபவை கூடிபோனால் 1/2, 1மணி நேரம் தாங்கலாம்(பெண்களால் அதிக நேரம் கட்டுப்படுத்த முடியும், இயற்கையின் அமைப்பு), நிங்கள் மேலே குறிப்பிட்ட //***பிளாஸ்டிக் குவளைகளில் தேனீர் மற்றும் குளிர்பானங்கள் அருந்தும் நம்மில் சிலர் அதனை அலேக்காக ஓடும் ரயிலில் இருந்து அப்படியே வீசியெறிவதும், பேருந்து பயணச் சீட்டுகளை பயணம் முடிந்ததும் காற்றில் பறக்க விடுவதும், போதை வஸ்துக்களை மென்றுவிட்டு ப்ளிச் ப்ளிச் என நடை மேடைகள் மற்றும் திரையரங்குகளில் உமிழ்வதும்.வேர்க்கடலைகளை வயிற்றுனுள்ளே தள்ளிவிட்டு அதன் தோடுகளை ஹாயாக பேருந்திலும், ரயிலிலும், திரையரங்குளிலும் இருக்கைகளின் அடியிலே தள்ளுவதும் **//
இது போன்றவற்றை தவிர்க்கலாம், தவிர்க்கனும்
//**இரு அமெரிக்கர்கள் நம்மவர்களைக் கிண்டலடிக்க எனக்கு மிகுந்த மன சங்கடமாகிவிட்டது **//
இதுக்கு எல்லாம் ஏங்க சங்கடபடுறிங்க, அடுத்தவர்களின் ஊணச்சிகளை தூண்டும்/எரிச்சல் படும் விதமாக பொது இடங்களில் அரைகுரை ஆடைகளில் வலம் வருவது, கட்டி பிடிப்பது, முத்தம் கொடுப்பது போன்றவற்றை செய்த்ததிற்கு என்றாவது சங்கடபட்டிருப்பார்களா?
நான் மிண்டும் சொல்லுகிறேன் பொது இடங்களில் சீறுநீர் கழிப்பதை சரி அல்ல, சில நேரங்களில் அதை முழுமையாக தவறு என்று சொல்ல முடியாது, நான் உங்களிடமே ஒன்று கேட்கிறேன் அதே நேரத்தில் அவசரமாக உங்களுக்கு ஒன்னுக்கு வருது இதவிட்டா அடுத்த நாலுமணிநேரம் வண்டி எங்கையும் நிக்காது என்று வைத்து கொளவோம், இப்ப நிங்க இன்னா பண்ணிருப்பிங்க
இது தவறான பழக்கம்தான், அந்த நேரத்தில் ஹோட்டலில் நிறுத்த சொல்லி ட்ரைவரிடம் சண்டையிட முடியாது, அதுவும் பாகிஸ்தானி வேறு.
//நான் மிண்டும் சொல்லுகிறேன் பொது இடங்களில் சீறுநீர் கழிப்பதை சரி அல்ல, சில நேரங்களில் அதை முழுமையாக தவறு என்று சொல்ல முடியாது, நான் உங்களிடமே ஒன்று கேட்கிறேன் அதே நேரத்தில் அவசரமாக உங்களுக்கு ஒன்னுக்கு வருது இதவிட்டா அடுத்த நாலுமணிநேரம் வண்டி எங்கையும் நிக்காது என்று வைத்து கொளவோம், இப்ப நிங்க இன்னா பண்ணிருப்பிங்க//
தாமிரபரணி அவர்களே உங்கள் கருத்துக்களை ஒத்துக்கொள்கிறேன்.
அவசரத்திற்கோ ஆபத்திற்கோ பாவமில்லை. என்றாலும் அன்று பயணம் செய்த பயணிகளில் ஓரிருவருக்கு தான் அவசரமென்றாலும் 90% சதவீதத்தினரும் அப்படி செய்ததில் நியாயமிருப்பதாகத் தெரியவில்லை நண்பரே. (அது 5 மணி நேர பயணமாயிருந்தது)
நம்ம ஆளுங்க ஒரு மணி நேர பயண நேரம் என்றால் கூட நடுவுல வண்டிய நிறுத்தினால் போச்சு ஸ்டார்ட் மூஜிக் தான் :-))
Post a Comment