
ஆஸ்திரேலியா அணி கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த அணியாக தொடர்ந்து தன்னைத் தக்க வைத்துக்கொண்டுள்ளதன் பின்னணி அவர்களின் தன்னம்பிக்கையும், வெற்றிபெற வேண்டுமென்ற தீராத மோகமும், வீழ்ச்சியிலும் அவர்கள் காட்டும் வீரமும், போராட்ட குணமுமே.
மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தின் நான்காம் நாள் ஆட்டம் நிறைவு பெற்ற போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளை அதோடு இந்த தொடரையும் பரிதாபமாக இழந்த நிலையில்; மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் ஆட்டத்தையும் இழந்தால். டெஸ்ட் உலக தர வரிசையின் முதலிடத்தை தென்னாப்பிரிக்காவிடம் இழக்க நேரிடும் என்ற உறுத்தலோ, அச்சமோ ஆஸ்திரேலிய அணிக்கோ அணித்தலைவரான ரிக்கி பான்டிங்கிற்கோ இருந்ததாகத் தெரியவில்லை.
ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 257 ஓட்டங்களே எடுத்திருந்த நிலையில் (375 ஓட்டங்கள் முன்னிலை) அணித்தலைவர் பான்டிங்க் இன்னிங்க்சை
டிக்ளேர் செய்வதாக அறிவித்தது பலரை ஆச்சரியத்துக்குள்ளாக்கியிருக்கிறது. தோல்வியுற்றால் முதலிடத்தை இழப்போமென்ற கலக்கமே இல்லாமல் ஆஸ்திரேலிய அணி செயல்பட்டிருப்பது தான் டெஸ்ட் கிரிக்கெட் உலகில் அவர்களின் ஆதிக்கத்திற்கு காரணம். (பிற அணிகளென்றால் கைவசம் 6 விக்கெட்டுகளும் மீதமுள்ள நிலையில் ஆட்டத்தை சமன் செய்யும் விதம் தொடர்ந்து மட்டை வீச்சை தொடர்ந்திருக்கும்)
2008-09 ,
நாக்பூரில் இந்திய அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் அதற்கு முந்தைய ஆட்டங்களின் வீழ்ச்சியினால் கவலை கொள்ளாமல் இறுதி இன்னிங்க்சில் 4.15 ரன் விகிதத்தில் (அந்த டெஸ்ட் ஆட்டத்தின் அதிக ரன் விகிதம் அது தான்) வெற்றிக்கு போராடி அதனால் தோல்வியும் அடைந்தது பலருக்கு நினைவிருக்கலாம்
தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற ஒன்பது விக்கெட்டுகளுடன் இன்னும் 314 ஓட்டங்கள் வேண்டிய நிலையில் இறுதி நாள் ஆட்டம் சுவாரஸ்யமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.