மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தின் நான்காம் நாள் ஆட்டம் நிறைவு பெற்ற போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளை அதோடு இந்த தொடரையும் பரிதாபமாக இழந்த நிலையில்; மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் ஆட்டத்தையும் இழந்தால். டெஸ்ட் உலக தர வரிசையின் முதலிடத்தை தென்னாப்பிரிக்காவிடம் இழக்க நேரிடும் என்ற உறுத்தலோ, அச்சமோ ஆஸ்திரேலிய அணிக்கோ அணித்தலைவரான ரிக்கி பான்டிங்கிற்கோ இருந்ததாகத் தெரியவில்லை.
ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 257 ஓட்டங்களே எடுத்திருந்த நிலையில் (375 ஓட்டங்கள் முன்னிலை) அணித்தலைவர் பான்டிங்க் இன்னிங்க்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது பலரை ஆச்சரியத்துக்குள்ளாக்கியிருக்கிறது. தோல்வியுற்றால் முதலிடத்தை இழப்போமென்ற கலக்கமே இல்லாமல் ஆஸ்திரேலிய அணி செயல்பட்டிருப்பது தான் டெஸ்ட் கிரிக்கெட் உலகில் அவர்களின் ஆதிக்கத்திற்கு காரணம். (பிற அணிகளென்றால் கைவசம் 6 விக்கெட்டுகளும் மீதமுள்ள நிலையில் ஆட்டத்தை சமன் செய்யும் விதம் தொடர்ந்து மட்டை வீச்சை தொடர்ந்திருக்கும்)
2008-09 , நாக்பூரில் இந்திய அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் அதற்கு முந்தைய ஆட்டங்களின் வீழ்ச்சியினால் கவலை கொள்ளாமல் இறுதி இன்னிங்க்சில் 4.15 ரன் விகிதத்தில் (அந்த டெஸ்ட் ஆட்டத்தின் அதிக ரன் விகிதம் அது தான்) வெற்றிக்கு போராடி அதனால் தோல்வியும் அடைந்தது பலருக்கு நினைவிருக்கலாம்
தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற ஒன்பது விக்கெட்டுகளுடன் இன்னும் 314 ஓட்டங்கள் வேண்டிய நிலையில் இறுதி நாள் ஆட்டம் சுவாரஸ்யமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
6 comments:
இப்பொழுது தென்னாபிரிக்கா தடுமாறுகிறது. உண்மையில் பொண்டிங்கின் முடிவு அசத்தல்தான். இப்படி ஒரு தருணத்தில் டோனி தம் அணி வீரர்களின் சதத்தை(?) பார்க்க எண்ணி டிக்ளேர் செய்யாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள்.
நன்றி கதியால் அவர்களே, பிடல் கேஸ்ட்ரோவிற்கு பின் கியூபாவின் ஜனாதிபதியாகியிருக்கும் ரவுல் கேஸ்ட்ரோ (பிடல் கேஸ்ட்ரோவின் சகோதரர்) கூறியது தான் நினைவிற்கு வருகிறது.
"From now on it's not going to be easy; it's going to be very tough in the days ahead of us"
ஆஸ்திரேலியர்கள் இதைத்தான் தங்களுக்கு சொல்லிக்கொள்வார்களோ என்னமோ; இந்த வாக்கு முதலிடத்தைப் பிடிக்க முயலும் இந்தியாவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் சாலப் பொருந்தும்
நல்ல பதிவு நண்பரே.. இன்று நான் எதிர்பார்த்த படியே ஆஸ்திரேலியா வென்று விட்டது.. ஆனால் செம விறுவிறுப்பு.. அது பற்றித் தான் என் அடுத்த பதிவு..
நன்றி லோஷன் அவர்களே... ஆமாம் த்ரில்லான வெற்றி ஆஸ்திரேலியாவிற்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும். உங்கள் எழுத்துக்களையும் ஆர்வமுடன் படிப்பதுண்டு. வாழ்த்துக்கள்.
இந்தியா 1 இடம் பிடிக்கும் நாளை எதிர்பார்ப்போம்!!!
தேவா...
எதிர்பார்ப்போம்.... நன்றி தேவா அவர்களே
Post a Comment