கல்வியைப் போன்று கிரிக்கெட்டும் , இன்று வியாபாரமாகி நிற்கிறது. ரஞ்சி ஆட்டங்கள் என்றால் என்னவென்று தெரியாத பலர் ஐ.பி.எல் என்றதும்... அப்படி இப்படி... ஷில்பா டீம் சூப்பர்... ஷாரூக் டீம் சரி இல்லை என வந்து விடுவார்கள் வாக்குவாதத்திற்கு.
சிலர்... நடனமாடும் மங்கைகளை பார்ப்பதற்காகவே கிரிக்கெட் பார்க்கிறார்கள்.கிரிக்கெட் மைதானத்தில் அரைகுறை ஆடையணிந்த அம்மணிகளுக்கு என்ன வேலை என்பது தான் இன்னும் புரியவில்லை. முன்பு குறிப்பிட்டது போன்று... வியாபார நோக்கத்திற்காக இருக்கலாம்.
இந்த வருட ஐ.பி.எல் ஒரு வழியாக அரை இறுதி நிலையை எட்டியுள்ளது. சினிமாக்காரர்கள் கிரிகெட்டை குத்தகைக்கு எடுத்தால் கூத்திற்கு குறைவிருக்குமா?
அப்படி கூத்து காட்டிய சினிமாக்காரர்கள் ஷில்பா,பிரீத்தி,ஷாரூக் ஆகிய மூவரின் அணியும் அரை இறுதிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேற வேண்டிய நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.பிரீத்தியின் அணிக்கு மட்டும் 10% வாய்ப்பு எஞ்சி உள்ளது. பெங்களூர் மற்றும் ஹைதராபாத் டெக்கன் சார்ஜர்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெறும் போட்டியில் தோல்வி அடையும் அணியின் ஓட்ட விகிதம் குறைந்தால் பஞ்சாப்பிற்கு ஒருவேளை அரைஇறுதி வாய்ப்பு கிடைக்கலாம்.ஆனால் அது சாத்தியமல்லவேன்றே தோன்றுகிறது.
பிரீத்தி ஸிந்தா அனைத்து ஆட்டங்களிலும் போட்ட ஆட்டம் கொஞ்ச நஞ்ச ஆட்டமா? குறிப்பாக சென்னைக்கு எதிரான கடைசி ஆட்டத்தில்... சென்னையை 116 ஓட்டங்களுக்குள்ளாக கட்டுப்படுத்தி விட்டோம் என அப்படி குதிக்கிறார்.
மறுபுறம் ஸ்ரீசாந்த்... தோனி விக்கெட்டை கைப்பற்றியதும் மைதானம் முழுதும் ஓடுகிறார்... காயத்திலிருந்து திரும்பிய பின்னரும் இன்னமும் அடக்கி வாசிக்க தெரியவில்லை. மற்றொரு ஆட்டத்திலும் ஆவேசப்பட்டதை காண நேர்ந்தது. சென்ற வருடம் ஹர்பஜனிடம் கன்னத்தில் வாங்கிய அறை மறந்து விட்டதோ என்னமோ?
ஷில்பாவிற்கும் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.இந்திய ஆடுகளத்தில் அதிரடி ஆடிய அஸ்நோத்கர் போன்ற வீரர்கள் தென்னாப்பிரிக்க களத்தில் தடுமாறியது நன்றாகவே தெரிந்தது.
ஐ.பி.எல் துவங்கும் முன்னரே நான்கு அணித்தலைவர், கங்குலி நீக்கம் என அதிரடி செய்த கொல்கத்தா அணியினையும், பயிற்சியாளர் புக்கனனையும் அடையாளமே தெரியவில்லை.
கவாஸ்கரை ஆரம்பத்தில் திட்டி விட்டு... பின்னர், நான் அவரைச் சொல்லவில்லை என சீன் போட்ட ஷாரூக் இப்போது சப்தமே இல்லாமல் இருக்கிறார்.
வீட்டில் அல்லது பயிற்சி மைதானத்தில் நிம்மதியாக இருந்திருக்க வேண்டிய சச்சின் வீணாக தன்னை அலைக்கழித்திருக்கிறார். அணித்தலைவராக சச்சின் எடுத்த சில தவறான முடிவுகள் மும்பை இண்டியன்ஸ் அணிக்கு பாதகமானது.
ஒரு சில ஆட்டங்களில் நான்கு ஓவர்கள் முழுமையாக பந்து வீச வாய்ப்பளிக்கப்படவில்லை என்ற சின்ன விஷயத்திற்கு … அணியில் எனது இடம் என்னவென்று விளங்கவில்லை என கூக்குரலிட்ட ஹர்பஜனுக்கு ஹெய்டனும்,தோனியும் ஐ.பி.எல்லின் 47 ஆவது ஆட்டத்தில் 18 ஆவது (அவருக்கு அது 3 ஆவது)ஓவரை வீசுகையில் தக்க அடி கொடுத்தனர். அந்த ஓவரில் மட்டும் 17 ஓட்டங்கள் எடுத்து மும்பையை ஐ.பி.எல் தொடரிலிருந்தே வெளியேற்றினார்கள்.
இப்படியாக ஆட்டம் போட்டவர்கள் எல்லாம் அடங்கி விட, வெற்றியிலும் வீம்பு பேசாத டெல்லி,சென்னை,ஹைதராபாத்,பெங்களூர் அணிகள் முதல் நான்கு இடங்களை பிடித்திருப்பது நல்ல விஷயம்.
இந்த நான்கு அணிகளின் உரிமையாளர்களும் மற்ற அணிகளின் உரிமையாளர்களைப் போல அலட்டுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
7 comments:
அதே........அதே............
நேற்று (பிரீத்தியின்)ஆட்டத்தை பார்து கடுப்பாகி tv off பண்ணிவிட்டு தூங்கச் சென்றேன்..என்னா ஆட்டம் போட்டா அவ. ஓவாரா சீன் போட்டா இப்படித்தான் ஆகும்.
நல்லா எழுதியிருக்கிறீர்கள்.
திட்டம் போட்டு பண்றாங்களோ..,
நன்றி கவின் அவர்களே... இன்றைய ஆட்டத்தில் பெங்களூரோ,டெக்கன் சார்ஜர்சோ... சொதப்பாமல் இருந்தால் பிரீத்திக்கு மேலும் ஆப்பு தான்.
----------------------
மருத்துவர் அய்யா... நீங்கள் திட்டம் போட்டு பண்றாங்க அப்படின்னு சினிமாக்காரங்கள சொல்றீங்களா இல்ல ஐ.பி.எல்லையா? ஐ.பி.எல் ஆட்டங்கள் பெரும்பாலும்முன்னரே முடிவு செய்யப்படுவதாகவும் புரளிகள் கிளம்பாமலில்லை :(
Boycott Dinamalar and Hindu until they become Bankrupt
Boycott Srilankan Products
Peacefully protest in spencer Plaza to close the Srilankan shop run by Srilankan Government
Shameful Tamilians will watch and celebrate another Tamilians death
Tamilians do not have Unity
Tamilians are divided by Caste
Every Tamilian should become economically strong inorder to establish identity
super appu.... ithuillam ipl sakajam appa.
மிக நல்ல பதிவு. கிரிகெட் என்றே என்ன வென்று தெரியாத ஆளு எல்லாம் இப்போ ஐ.பி.எல் சொல்ல அராம்பிசிட்டாங்கே. இப்போ ஐ.பி.எல் மட்டும் இல்லை. எங்கேயும் ஆட்டம் போட்டவங்களை இப்போ மக்கள் "ஆப்பு" வச்சிடிறது தான் வழக்கம்.
நன்றி kanavugalkalam
-----------------------------
நன்றி Thameez உங்கள் வருகைக்கும் கருத்திற்கும். நீங்கள் சொல்வதும் உண்மை தான்
Post a Comment