கலைஞர் தனது கோபாலபுரத்து வீட்டை அவரது காலத்திற்கு பின்னர் அவரது பெற்றோர்களின் பெயரில் மருத்துவமனையாக மாற்ற சொல்லியிருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான். ஏழைத் தமிழர்கள் நலனில் அக்கறை எடுத்துக் கொண்டிருப்பதும் எப்போதும் போல் வரவேற்கப்பட வேண்டிய விஷயமே.
எனினும்... தனது மறைவிற்கு பின்னர் கூட தன் பெயரில் நல்லது நடக்கும் என நிரூபித்திருப்பவர்... தான் இருக்கும் போதே தமிழீழம் ஏற்பட வகை செய்திருந்தால் தமிழனமே காலம் காலமாக அவரை போற்றி புகழ்ந்திருக்கும். எல்லாம் கைவிட்டுப் போய்விட்டதே :(
எனினும்... தனது மறைவிற்கு பின்னர் கூட தன் பெயரில் நல்லது நடக்கும் என நிரூபித்திருப்பவர்... தான் இருக்கும் போதே தமிழீழம் ஏற்பட வகை செய்திருந்தால் தமிழனமே காலம் காலமாக அவரை போற்றி புகழ்ந்திருக்கும். எல்லாம் கைவிட்டுப் போய்விட்டதே :(
--------------------
ஆஸ்திரேலியாவின் ஜஸ்டின் லாங்கர் நேற்று ஆஸ்திரேலியாவிற்காக முதல் தர கிரிக்கெட்டில் இது வரை முதலிடத்தில் இருந்த சர்.பிராட்மேனை விட(28067) அதிக ஓட்டங்களைப் பெற்றிக்கிறாராம். தற்போது இவர் இங்கிலாந்தின் சோமர்செட் கவுண்டி அணிக்காக ஆடி வருகிறார். இதற்கு இவர் 615 இன்னிங்க்ஸ் எடுத்து கொண்டுள்ளார். பிராட்மேன் எடுத்துக்கொண்டதோ 338 இன்னிங்க்ஸ் மட்டுமே.
-------------------------------
சில குண்டக்க மண்டக்க கேள்விகள்
வங்கிகளிலும், ஏ.டி.எம் மையங்கள் சிலவற்றிலும்... ஏன் சில அரசாங்க அலுவலகங்களில் கூட... 'தயவு செய்து 'கியூ' வரிசை/ 'Q' வரிசையில் வரவும்' என எழுதியிருப்பது ஏனோ? ஆங்கில Queue என்பதே வரிசை என்பதைத் தானே குறிக்கிறது... அப்புறம் ஏன் இப்பிடி எல்லாம் :)
--------------------------------
தமிழகத்தில் பால் கொள்முதல் விஷயத்தில் பால் உற்பத்தியாளர்கள் ஓரிரு மாதமாக பல கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர்... இவர்களை பால் உற்பத்தியாளர்கள் என சொல்வது ஏன் என புரியவில்லை; பாலை இவர்களா உற்பத்தி செய்கிறார்கள்? இல்லையே! இவர்கள் பாலை பதப்படுத்தல், விநியோகித்தல் போன்றவற்றை தானே செய்கிறார்கள்; பின்னர் எப்படி இவர்கள் பால் உற்பத்தியாளர்கள் ஆனார்கள்.
---------------------
தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து தொகுக்கப்படும் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளையும், தமிங்லீசில் பேசாமல் தமிழிலேயே பேசும் தொகுப்பாளர்களையும் நிச்சயம் பாராட்டலாம்.
ஆனால் கிரிக்கெட்டிற்கு 'மட்டையடி ஆட்டம்' என மொழிபெயர்த்திருப்பது சிரிப்பை வரவழைக்கிறது. Golf விளையாட்டிற்கு 'குழிப்பந்து ஆட்டம்' என பெயர் ஏதும் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை :) Obama, Bush ஐயும் கூட மொழிபெயர்ப்பார்களோ!! ஆங்கில பெயர்களை அப்படியே விட்டு விடலாமே.
------------------
நகைச்சுவை மாதிரி...
மருத்துவர்: என்னப்பா பல்ஸ் பாத்தியா?
மாணவன்: எல்லா பல்லும் நல்லா தான் இருக்கு டாக்டர். நோயாளிக்கு பல்லில எதும் பிரச்சினை இல்லை.
மருத்துவர்: உன் ஹியூமர் சென்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஆனா நான் கேட்டது ஆங்கில Pulse அதாவது தமிழ் 'நாடி'ப்பா.
மாணவன்: நாடி கூட நல்லா தான் இருக்கு டாக்டர்... நீங்களே வேணா நல்லா முகத்த பாருங்க.
மருத்துவர்: @#*p%^/0#*%
4 comments:
//
'தயவு செய்து 'கியூ' வரிசை/ 'Q' வரிசையில் வரவும்' என எழுதியிருப்பது ஏனோ? ஆங்கில Queue என்பதே வரிசை என்பதைத் தானே குறிக்கிறது... அப்புறம் ஏன் இப்பிடி எல்லாம் :)
//
சரியான கேள்வி எட்வின்... நமக்கே சரியான தமிழ்ச்சொல் தெரியாத காரணத்தால் இது போல கொடுமை நடப்பது.
இதெல்லாம் நடுச்செண்டர்ல எழுத வேண்டிய விஷயம்தல..,
ச.செந்தில்வேலன் said... //
நமக்கே சரியான தமிழ்ச்சொல் தெரியாத காரணத்தால் இது போல கொடுமை நடப்பது.//
ஆமாங்க... ஆங்கில மோகம் ரொம்பவே பாடா படுத்துது. இதுல என் பெயர கூட ஆங்கிலத்தில வச்சிபுட்டாங்க :(
SUREஷ் (பழனியிலிருந்து) said...
// இதெல்லாம் நடுச்செண்டர்ல எழுத வேண்டிய விஷயம்தல..,//
அப்போ அது நடு மத்தி செண்டர்ல இல்லையா :)என்னத்த சொல்றதுக்கு... ம்ம்ம்
Post a Comment