கார் முகிலால்
நீல வான் மறைகையில்
எழும் கவலையினால்
விழும் வானின்
கண்ணீர் திவலையா-நீ
அடை மழை
மெதுவாய் துவங்கும்
உன் விசும்பல்களை
பீரிட செய்தவர்-யாரோ
வான்வெளியிலும் பாகுபாடோ
வெண் முகிலாய் இருக்கையில்
கவலை கொள்ளா வானம்-நீ
கரிய நிறம் கொள்கையில்
வெறுத்து கீழே தள்ளுதல்
வர்ண பேதமோ
எவருமில்லா தனிமையில்
என்னுடன் ஆடும்
என்னுயிர் தோழியா நீ
தோழி என்றதால்-நின்
அடை மழையால்
அடம் பிடித்து-என்
அலுவல்களை பாதிக்கிறாயோ
சங்கீதச் சாரலில்
சங்கேதங்களால்-தன்
அகம் மகிழும்
சிறு குழந்தையை
சினம் கொண்டு அழைக்கும்
அன்னைக்கு தெரியுமா
சாரலின் சங்கேதங்கள்
கருப்புக் குடை
காண்பித்தால்-நீ
மீண்டும் வரமாட்டாய்
என்பதாலா-இவள்
வர்ணக் குடை
விரிக்கிறாள்
-------
நவம்பர் மழையில்
குவைத் நகரத்தில்
முடங்கிய போது
கிறுக்கியவை
5 comments:
அனைத்தும் அருமை /////////////வெண் முகிலாய் இருக்கையில்
கவலை கொள்ளா வானம்-நீ
கரிய நிறம் கொள்கையில்
வெறுத்து கீழே தள்ளுதல்
வர்ண பேதமோ////////////...ரசிக்க வைத்தது
/வெண் முகிலாய் இருக்கையில்
கவலை கொள்ளா வானம்-நீ
கரிய நிறம் கொள்கையில்
வெறுத்து கீழே தள்ளுதல்
வர்ண பேதமோ/
அருமை
நல்ல கவிதைகள்...
நீங்கள் மழையில் முடங்கியதால் கவிதை எல்லாம் மழை போல....
பொருத்தமான நல்ல புகைப்படங்கள்...
ஆஹா மழை!
//வான்வெளியிலும் பாகுபாடோ//
வர்ண பேதமோ//
கருப்புக் குடை
காண்பித்தால்-நீமீண்டும் வரமாட்டாய்
என்பதாலா-இவள்
வர்ணக் குடை
விரிக்கிறாள்//
நல்லா இருக்கு!
Post a Comment