எனினும் முன்னிருந்ததை விட தற்போதைய கணினி யுகத்தில் பிரிவினைகள் குறைந்திருக்க வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. இதில் இளைஞர்களின் பங்கு நிச்சயம் உண்டு என்பதில் சந்தேகமில்லை.
இது ஒருபுறமிருந்தாலும் சட்டக்கல்லூரி சம்பவம் போன்ற காட்டுமிராண்டித்தனத்தையும் மறந்து விட முடியாது.
தாங்கள் எந்த சாதி, மதத்தையும் சாராதவர்கள் எனவும் தங்கள் பிள்ளைகளின் சான்றிதழ்களில் சாதி,மதமற்றவர்கள் என்பதைக் குறிப்பிடவும் போராடி வருபவர்களையும் பாராட்டியே ஆக வேண்டும்.
இவற்றிற்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்திருந்த சச்சின் மற்றும் ராகுல் காந்தியின் அறிக்கைகள் மேலும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளன.
நான் மகாராஷ்டிரத்தைச் சார்ந்தவன் என்பதில் எனக்கு பெருமையென்றாலும் முதலில் நான் ஒரு இந்தியன் என சச்சின் கடந்த வார பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
அதே போன்று கடந்த மாதம் கேரளாவில் பேட்டி ஒன்றின் போது ராகுல் காந்தி... நான் ஒரு மனிதனின் வீட்டிற்கு தானே போகிறேனே அல்லாமல் ஒரு தலித்தின் வீட்டிற்கு அல்ல; பத்திரிக்கைகள் தான் இத்தகைய பாகுபாட்டைக் குறிப்பிட்டு எழுதி வருகின்றன என பத்திரிக்கைகளை சாடியிருந்தார்.
இவை சாதி, மத, இன பேதமற்ற இந்தியாவை காண ஆவலாயிருக்கும் ஒவ்வொருவருக்கும் மேலும் ஊக்கமளித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
2 comments:
சாதிகளில்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி யுயர்ச்சி சொல்லல் பாவம் .
சூரியன் ஒளி தர சாதி பார்க்கவில்லை
மரம் கனி தர சாதி பார்க்கவில்லை
காற்று இதம் தர சாதி பார்க்கவில்லை
மனித மனைகளில் மட்டும் ஏன்
ஏன் இந்த கொடிய சாதி வெறி
Thanks இரா .இரவி
Post a Comment