January 06, 2010

2010 ல் எதிர்பார்க்கும் 10 விடயங்கள்

1. ரஹ்மான்-கிராமி விருது
இன்று (06.01.2010) பிறந்த நாள் காணும் ஆஸ்கர் நாயகன், இசைப்புயல் ரஹ்மான் இரண்டு கிராமி விருதிற்காக பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார். இந்த மாதம் 31 ஆம் தியதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் விழாவில் முடிவு தெரிந்து விடும்.

2. உலககோப்பை-ஹாக்கி

கிரிக்கெட்டில் மூழ்கிக் கிடக்கும் இன்றைய இளைஞர்கள் பலருக்கு இந்தியாவின் தேசிய விளையாட்டு கிரிக்கெட்டா ஹாக்கியா என சந்தேகம் வலுப்பதில் ஆச்சரியமில்லை.
பிப்ரவரி 28 முதல் ஆரம்பிக்கும் உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டிகளை இந்த முறை இந்தியாவே நடத்துகிறது. நவம்பர் 2008 மும்பை தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தியாவில் போட்டிகளை நடத்த வேண்டாம் என சர்ச்சைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

3. உலகக்கோப்பை-கால்பந்து
நான்கு வருடமாக எதிர்பார்த்திருந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் ஜூன் 11 ல் ஆரம்பிக்கின்றன. கிரிக்கெட் மேனியா இந்தியாவில் கால்பந்திற்கு என்ன மாதிரியான வரவேற்பு இருக்கும் என பார்ப்போம்.

4. இலங்கை-ஜனாதிபதி தேர்தல்

எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது ஜனவரி 26 ஆம் தியதி நடைபெறவிருக்கும் இலங்கை ஜனாதிபதி தேர்தல்.
முன்னாள் ராணுவ தளபதி சரத்தின் திடீர் ராஜினாமாவும், அரசியல் பிரவேசமும், தற்போதைய ஜனாதிபதி மீதான அவரின் குற்றச்சாட்டுகளும் மேலும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன. தினம் மடிந்து வரும் இலங்கைத் தமிழர் நலனுக்கு என்ன செய்யப்போகிறார்க்ள என பார்ப்போம்

5. ஷங்கர்,ரஜினி,ஐஸ்,ரஹ்மான்-எந்திரன்

இந்த வருடம் பலராலும் ஆவலாய் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்று எந்திரன். எந்திரனின் எதிர்பார்ப்பை கூட்டியிருப்பது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமல்ல... இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்ட காட்சியமைப்பு, ஆஸ்கர் நாயகன் ரஹ்மானின் இசை, உலக நாயகி ஐஸ்வர்யா, என பலவற்றைப் பட்டியலிடலாம்

எந்திரன் ஏப்ரல் 14 அன்று வெளிவருமா என்பது ஏப்ரல் 14 அன்று தான் தெரியும் :)

6. வேட்டைக்காரன்-கோட்டைக்காரன்!!!

குருவி, வில்லு, வேட்டைக்காரன் என தொடர்ந்து தோல்வியடைந்திருக்கும் நடிகர்!!? விஜய் கோட்டைக்காரனாக கோட்டையில் அமர்வாரா இல்லை பலரைக் காப்பி(copy)யடித்து வேட்டைக்காரன் மாதிரியான நகல் படங்களில் நடிப்பாரா!!! என பார்ப்போம்

7. இந்தியா-உலக அரங்கில்

2009 ன் ஆரம்பத்தில் பொருளாதார நெருக்கடிகளால் உலகம் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கையில் ஆசிய நாடுகளான இந்தியாவும், சீனாவும் ஓரளவு தாக்குப்பிடித்து நின்றன.

2009 ன் இறுதியில் வளைகுடா நாடுகளும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படவே பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை.

2010 ல் இந்தியாவின் பங்கு உலக அரங்கில் என்னவாக இருக்கும் குறிப்பாக கோப்பன்ஹேகனைத் தொடர்ந்து நவம்பர் 29 ல் மெக்சிகோ நகரில் நடைபெறவிருக்கும் ஐ.நா வின் பருவநிலை மாநாட்டில் என்ன மாதிரியான நிலைப்பாட்டை எடுப்பார்கள் என பார்ப்போம்.

8. டைகர் உட்ஸ்-கோல்ப்

2009 ன் இறுதியில் பல சிக்கல்களில் மாட்டித் தவித்த உலகின் முன்னணி கோல்ஃப் ஆட்டக்காரர் டைகர் உட்ஸ் தனது விளம்பரதாரர்களை ஒன்றன் பின் ஒன்றாக இழந்தார்.

அதில் குறிப்பிடும் படியானது திராவிட்டை கழட்டி விட்ட அதே GILLETE நிறுவனத்தினர்.

2010 ல் மீண்டும் முதலிடத்தைப் பிடிப்பாரா என கோல்ஃப் உலகம் சர்ச்சை செய்து கொண்டிருக்கிறது.

9. ஃபெடரர் Vs நடால்

2009 ல் ஆண்கள் டென்னிஸ் உலகின் தர வரிசையில் முதல் இரு இடங்களை பிடிப்பதற்கு கடும் போட்டி நிலவியது சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் மற்றும் ஸ்பெயினின் ரஃபேல் நடால் இடையே தான்.

எனினும் 2009 ன் இறுதியில் காயங்கள் காரணமாக தர வரிசையில் நடால் சற்றே சறுக்கியது முதலிடத்தை மீண்டும் பிடிப்பதற்கு ஃபெடரருக்கு வாய்ப்பாகிப் போனது. இந்த வருடம் எவ்வாறு அமையும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

10. இந்தியா-பிரிவினைகள்

2009 ல் ஆந்திராவிலும், உத்திரப்பிரதேசத்திலும் தனி மாநிலம் கோரியவர்கள், மகாராஷ்டிராவில் மராத்தி மட்டுமே பேச்சுமொழியாக இருக்க வேண்டும் என நிர்ப்பந்தித்த சிவசேனாவினர் என பிரிவினைகளுக்கு விதையிட்டவர்கள் என்ன செய்வார்கள் எனவும் அவர்களை மத்திய அரசு எவ்விதம் கையாளும் என்பதும் போகப்போகத் தான் தெரியும்.

இவை ஏற்கெனவே எல்லைகளினாலும், மொழிகளினாலும் பிரிந்து கிடக்கும் இந்திய மாநிலங்களையும், மக்களையும் எவ்விதம் பாதிக்குமோ தெரியவில்லை.

2 comments:

calmmen said...

very good thinking

கிறிச்சான் said...

ஆஸ்கார் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது 44வது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினார். ஸ்லம்டாக் மில்லினர் படத்திற்கு இசையமைத்ததன் மூலம் புகழின் உச்சிக்கே ‌சென்ற ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருது பெற்று தமிழகத்துக்கே கவுரம் சேர்த்தார். அவர் தனது 44வது பிறந்த நாளை ‌நேற்று எளிமையாக கொண்டாடினார். பிறந்த தினத்தை தனது குடும்பத்தாருடன் செலவிட்ட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஏராளமான ரசிகர்களும், சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Post a Comment

Related Posts with Thumbnails