June 01, 2010

யாரோ அவள்

அன்றும் அவள் வந்து போனாள்

அடர்ந்த விருட்சங்கள் நடுவே

அகலாத வெண் பனிமேகத்தினிடையே

அகன்ற விழிகள் மொழி பேச

அமைதியான அதிகாலையை

அலங்கரித்தாள்


கயல்விழியால்

கவிதை மழை பொழிந்தாள்;

நாணத்தால்

நாணலையும் நாணச் செய்தாள்;

புன்னகையால்

என்னகம் நிறைத்தாள்


கலையும் வெண்மேகத்தினிடையே

கலைத்துச் சென்றாள் என் மனதினையும்;

கண்ணசைத்து

கனவினூடே கரைந்தாள்

மனதினை கறைபடியச் செய்து விட்டு.

மனதினை களவாடியும் சென்ற(அ)வள் யாரோ!!!

யாரோ அவள்?

(தூக்கத்தில வந்த கனவுங்க இது... வேற ஒண்ணுமில்ல. :) ஹி ஹி ஹி )

7 comments:

நசரேயன் said...

//
மனதினை களவாடியும் சென்ற(அ)வள் யாரோ!!!

யாரோ அவள்?
//

நீங்க தான் சொல்லணும் .. எங்களையே கேட்டா ?

கிறிச்சான் said...

யாரோ அவள்?

ஒரு வேளை, நம்ம எசுவடியா பாட்டியா இருக்குமோ?

எட்வின் said...

நன்றிங்க நசரேயன்... அது யாருன்னு தெரிஞ்சா நானே சொல்ல மாட்டேனாக்கும்.

எட்வின் said...

கிறிச்சான் said...

//ஒரு வேளை, நம்ம எசுவடியா பாட்டியா இருக்குமோ?//

ஆஹா மக்கா இதுக்கு நீ எல்லாம் எதுக்கு எழுதுறன்னு கேள்வி கேட்டிருக்கலாம்.

பாட்டியா கூட இருக்கும்டே... சொல்ல முடியாது :)

அன்புடன் நான் said...

கவிதை நல்லாயிருக்குங்க...

ஆனா இது தூக்கத்துல வந்ததா தெரியல.!

எட்வின் said...

@ சி.கருணாகரசு

கண்டிப்பா கனவில வந்தது தான் அன்பரே... ஆனா நான் வளர்த்து வைத்திருக்கும் கனவுலகில் வந்தவங்கன்னு சொல்லலாம் :)

Joe said...

//
(தூக்கத்தில வந்த கனவுங்க இது... வேற ஒண்ணுமில்ல. :) ஹி ஹி ஹி
//

கவுண்டமணி பாணியில சொன்னா...
Noooo, I don't believe!

Post a Comment

Related Posts with Thumbnails