June 11, 2010

வெள்ளுடையில் சில கருப்பு ஆடுகள்

கிறிஸ்தவம் என்ற போர்வைக்குள்ளேயே இன்று பலர் குளிர்காய்ந்து வருவது ஒருபுறமிருந்தாலும். வெள்ளுடை அணிந்த அதன் தலைவர்கள் பலர் கீழ்த்தரமான, கேவலமான மனிதர்களால் மன்னிக்க முடியாத(ஒருவேளை தெய்வம் மன்னிக்கக்கூடும்!!!) செயல்களைச் செய்வது இன்று பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

குறிப்பாக கத்தோலிக்கர்கள் என்றும், கிறிஸ்தவத்தின் தலைமையே நாங்கள் தான் என்று மார்தட்டிக் கொள்ளும் ரோமிலும், கனடா மற்றும் அயர்லாந்திலும் கத்தோலிக்க பாதிரியார்கள் நசித்த சிறுவர், சிறுமியரின் வாழ்க்கைகள் ஏராளம். Paedophilia என ஆங்கிலத்தில் அறியப்படும் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துதலை சில வருடங்களாகவே எவரும் அறியமாட்டார்கள் என்ற தெனாவட்டில் செய்திருக்கிறார்கள் இந்த காமுகன்கள்.

மேற்கே மட்டுமல்லாமல் நம்மூர்களிலும் கூட இவர்களின் பாலியல் வன்முறைகள் தொடரத்தான் செய்கின்றன. குறிப்பாக கேரளத்தில் பாதிரியார் ஒருவரால் மானபங்கப்படுத்தப்பட்ட கன்னியாஸ்திரீ ஜெஸ்மி என்பவர் ஆமென் என்ற புத்தகத்தில் பாதிரியார்களையும் அவர்களின் அட்டூழியங்களையும் புட்டு புட்டு வைத்திருக்கிறார்.

அவர் தனது புத்தகத்தில் பாதிரியார்களும், கன்னியாஸ்திரீகளும் உறவு வைத்திருந்தார்கள் எனவும், கன்னியாஸ்திரீகள் அவர்களுக்குள்ளாகவே ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டிருந்தார்கள் எனவும் எழுதிப்போகிறார்.

பொதுவாக கத்தோலிக்க பாதிரியராக ஆக விரும்பும் ஒருவர் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற வரைமுறை வைத்திருக்கிறார்கள். தமக்கென்று எவரும் இருக்கக்கூடாது எனவும் அப்படி இருந்தால் அது திருச்சபைக்கும் அவர்கள் செய்யும் ஊழியப்பணிகளுக்கும் தடையாக இருக்குமென்பதால் இத்தகைய கொள்கையைக் கொண்டுள்ளது கத்தோலிக்க திருச்?சபை

இயற்கையாகவே பாலியல் ரீதியான மாற்றங்களுக்குள்ளாகும் இருபாலரின் உடலை என்ன தான் கட்டுப்படுத்தினாலும் பலநேரங்களில் பாலியல் இச்சை என்பது தவிர்க்கவியலாதது. அது இயற்கையானதும் கூட. அதற்காகவே திருமணம் என்ற எழுதப்படாத சட்டம் உள்ளது.

இயற்கையை எதிர்த்து இவர்களாகவே ஒரு சட்டம் இயற்றிக்கொண்டால் அது எத்தனை காலத்திற்கு தான் நிலைக்கும். திருமணமே கூடாது என கிறிஸ்தவர்கள் பின்பற்றும் விவிலியமும் சொல்லுவதில்லையே. பின்னே எதற்கு இந்த தடைகள்; அதன் பின்னர் ஏன் தடைகளைத் தாண்டுகிறார்கள்!!

இவர்கள் செய்தவை அனைத்திற்கும் சேர்த்து இன்று கத்தோலிக்க சபைகளின் தலைவர் போப் பெனடிக்ட் கடவுளிடமும், மக்களிடமும் மன்னிப்பு கேட்டிருக்கிறாராம். இனிமேல் குழந்தைகளுக்கு எதிரான இது போன்ற தவறுகள் நடக்காது என்றும் உறுதியளித்திருக்கிறாராம். என்னமோ போங்க :(

சாதாரண மனிதர்களைக் கூட நம்பி விடலாம் இந்த சாமியார்களை நம்ப முடியாது போலும்.

3 comments:

ஆனந்த் தங்கமணி said...

நெற்றிப் பொட்டில் அறைந்தாற்போல், சரியான தெளிவான ஒரு பதிவு.

இவர்களை எல்லாம் தெய்வம் நின்று தண்டிப்பது உண்மையில் தெய்வத்தின் தவறு.

நாகர்கோயில் கார்மல் பள்ளியில் நான் படிக்கின்ற சமயம் எங்களது தலைமையாசிரியர் ஒரு பாதிரியார்.

அவரைப் பற்றி கார்மல் பள்ளி தலைமையாசிரியரின் காம லீலைகள் என்று ஒரு வார பத்திரிகையில் கட்டுரையே வந்தது.

அவர் செய்த அநியாயங்கள் அவ்வளவு அதிகம்.

சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு மாணவனை அவர் கன்னத்தில் அறைந்த செய்தி பத்திரிகையில் வர வில்லை.


"இயற்கையை எதிர்த்து இவர்களாகவே ஒரு சட்டம் இயற்றிக்கொண்டால் அது எத்தனை காலத்திற்கு தான் நிலைக்கும். திருமணமே கூடாது என கிறிஸ்தவர்கள் பின்பற்றும் விவிலியமும் சொல்லுவதில்லையே. பின்னே எதற்கு இந்த தடைகள்; அதன் பின்னர் ஏன் தடைகளைத் தாண்டுகிறார்கள்!!"

மதத்தினை இவர்கள் மனம் போன்ற வகையில் வசதிப் படுத்திக் கொண்டதன் விளைவு இது.

"சாதாரண மனிதர்களைக் கூட நம்பி விடலாம் இந்த சாமியார்களை நம்ப முடியாது போலும்."

உண்மை.

அதற்கும் வழி வைத்திருப்பார்கள். போதகனை நம்பாதே, போதகத்தை நம்பு என்று.

கிறிச்சான் said...

நெற்றிப் பொட்டில் அறைந்தாற்போல், சரியான தெளிவான ஒரு பதிவு./////////////

வழி மொழிகிறேன்

எட்வின் said...

@ ஆனந்த் தங்கமணி

உங்க மனவருத்தம் புரியுதுங்க. இன்னைக்கு பெரும்பாலான சபைகளில் இந்த விளையாட்டுக்கள் அரங்கேறி வருவது தான் வேதனை தரும் விஷயம்.

கண்டிப்பாக போதகனையோ, சாமியாரையோ நம்பினால் நாசம் தான்.

நற்பண்புகளை நாடினாலே நலமானது.

Post a Comment

Related Posts with Thumbnails