Waka வக்கா அப்படின்னா எதும் கெட்ட வார்த்தை இல்லீங்க... உ.கோ.கால்பந்திற்கான தீம் சாங்காம்
உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் வந்ததும் வந்தது. ஆட்டம் பாட்டம், கொண்டாட்டத்திற்கு குறைவேயில்லை. போட்டிகள் ஆரம்பிக்கும் பல மாதங்கள் முன்னமே அதற்கான ஆர்ப்பாட்டங்கள் துவங்கியிருந்தன.
அதற்கென்றே பிரத்தியேகமாக இசையமைக்கப்பட்ட பாடல்களும் உண்டும். குறிப்பாக கொலம்பியப் பாடகி ஷகிராவின் Waka Waka பாடலும் கெனான் k'naan @ Keinan Abdi Warsame என்ற சோமாலிய-கனடா பாடகரின் Wave your Flag என்ற பாடலும் தான் பிரபலம்.
இதிலும் நம்மூரைப் போன்று அரசியல் செய்கிறார்கள் ஆப்பிரிக்கர்கள். ஆப்பிரிக்காவில் நடக்கும் ஒரு போட்டிக்கு ஏன் கொலம்பியாவைச் சார்ந்த ஒருவர் பாடல் பாட வேண்டும் என பிரச்சினையைக் கிளப்புகிறார்கள்.
உலகம் முழுவதும் இருந்து சிறந்த 32 அணிகள் பங்கு கொள்ளும் ஒரு கூடுகைக்கு கொலம்பியர் பாடினால் என்ன அரபிக்காரர் பாடினால் என்ன? எல்லா இடத்திலயும் அரசியல் ஒண்ணு தான் போலிருக்கு :(
ரஹ்மான் இசையமைத்து, கௌதம் இயக்கிய செம்மொழி மாநாட்டு மையக்கருத்துப் பாடலுக்கும்(தீம் சாங் அப்படின்றதுக்கு இது தானங்க சரியான தமிழ்!!) இதே போன்று பிரச்சினையைக் கிளப்புகிறார்கள்.
ஏன் மலையாளி ஒருவர் இயக்க வேண்டும்,பிற மாநிலத்தவர் ஏன் பாட வேண்டும். அப்படியே எவரும் பாடலாமெனில் ஏன் பாடும் நிலா பாலு பாடவில்லை, மெட்டு சரியில்லை, பழைய மெட்டு என பலருக்கு பல வித கேள்விகள் கருத்துக்கள்.
அமெரிக்க ராப் பாடகர் ப்ளாசே ஏன் பாடுகிறார் என வேறு சந்தேகம் பலருக்கு. ப்ளாசே என்பது அவரது தற்போதைய பெயர் தான். "லக்ஷ்மி நரசிம்ம விஜய ராஜகோபால சேஷாத்ரி ஷர்மா ராஜேஷ் ராமன்" என்பது தான் அவரது ஆரம்பப்பெயர் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ராப் பாணியில் ரஹ்மான் இசையமைத்து ப்ளாசே பாடியிருந்தாலும் அதனை எழுதியதும் அனுமதித்ததும் முத்தமிழ் அறிஞர் என புகழப்படுபவர் தானே.
அதனால் எல்லாப் புகழும், இகழ்ச்சியும் கூட அவருக்கே. அவருக்கு மட்டுமே.
ஆனால் மாநாட்டிற்கு எதற்கு தீம் சாங் என்பது தான் எனக்கு புரியவில்லை.
நன்றி: விக்கி
5 comments:
லக்ஷ்மி நரசிம்ம விஜய ராஜகோபால சேஷாத்ரி ஷர்மா ராஜேஷ் ராமன் //////////// நல்லாருக்கு பேரு !!!
அமெரிக்க ராப் பாடகர் ப்ளாசே ஏன் பாடுகிறார் என வேறு சந்தேகம் பலருக்கு. ப்ளாசே என்பது அவரது தற்போதைய பெயர் தான். "லக்ஷ்மி நரசிம்ம விஜய ராஜகோபால சேஷாத்ரி ஷர்மா ராஜேஷ் ராமன்" என்பது தான் அவரது ஆரம்பப்பெயர் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை
....oh!
@ கிறிச்சான்
செம்ம பேரு தான்
@ Chitra
ஆமாங்க
Thanks - Edwin!
hope BLAZE IS bron in india and he had grown up in zimbabae ..
Post a Comment