என்ன தான் பெரிய இணைய தளமானாலும் சிறு சிறு தவறுகள் நேர்வது இயல்பு தான்.
உலகம் முழுதும் கடந்த நான்கு வாரங்களாக உற்று நோக்கிவரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் நிகழ்வுகளை சர்வதேச கால்பந்து பேரவை http://www.fifa.com/ என்ற தளத்தில் நொடிக்கு நொடி தரவேற்றி வருகிறது.
அந்த தளத்தில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் அணிகளுக்கு எதிரான போட்டியின் முடிவில் ஆரம்பத்தில் 'ஸ்பெயின்' காலிறுதி போட்டியில் "ஜப்பானை" சந்திக்கும் என்று (தவறுதலாக) குறிப்பிட்டிருந்தார்கள்.
சில நிமிடங்களுக்குள்ளாக பராகுவே என்று சரி செய்தும் விட்டார்கள்.
இது தான் ஆனைக்கும் அடி சறுக்கும் என்பதோ!! இந்த பழமொழிக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு இன்றும் நேற்றும் நடந்து முடிந்த காலிறுதிப் போட்டிகள்.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தென் அமெரிக்க நாடுகள் பிரேசில் மற்றும் அர்ஜென்டினா இரண்டும் காலிறுதியிலேயே வெளியேறி விட்டன. தென் அமெரிக்காவில் இருந்து எஞ்சியிருப்பது உருகுவே மற்றும் பராகுவே மட்டுமே. பராகுவே நிலைக்குமா விடைபெறுமா என்பது இன்று தெரிந்து விடும்.
6 comments:
பராகுவேக்கு ஸ்பெயின் ஆப்பு அடிச்சிட்டாய்ங்க. இனி ஒரே ஒரு தென் அமெரிக்க நாடு மட்டும் தான் .
பதினாறு வோட்டு போட்டிருக்காங்க, ஒரு பின்னூட்டம் கூடயில்லையே? ஒரு வேலை கரிக்கட்டை ஆட்டம் பத்தி எழுதினா தான் பேசுவாங்களோ?
Oh btw, IT support is provided by Mahindra Satyam, so perhaps you could blame it on them!
/////////என்ன தான் பெரிய இணைய தளமானாலும் சிறு சிறு தவறுகள் நேர்வது இயல்பு தான்/////////Nobody is perfect !!!
அதே இணையத்தளத்தில் இதுக்கு முன்னாடி நடந்த ஆர்ஜென்டீனா - ஜெர்மனி போட்டியில் ஆர்ஜென்டினா அரை இறுதிக்கு தகுதி பெற்றது என்று மெட்ச் அட்டவணையில் இருந்தது பிறது மாற்றிவிட்ார்கள் சில கணங்களில்
http://www.fifa.com/worldcup/matches/index.html
@ Joe
பின்னூட்டம் போட நேரம் இருந்திருக்காது ... விடுங்க பாஸ்.
"கரிக்கட்டை ஆட்டம்" LOL :))
ஒஹோ இது மஹிந்த்ரா வேல தானா!!
@ கிறிச்சான்
சரிதானுங்கோ
@ Ramesh
ஒருவேளை முன்னாடியே என்ன மாதிரியான தகவல் அடிக்கணும்னு தயாரா வச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன். அதை அப்படியே ஒட்டி விட்டுறாங்க போல. அப்புறம் கத மாறின பின்னாடி வெட்டி விட்டுறாங்களோ?!
Post a Comment