கிரிக்கெட் வர்ணனையாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி உள்ளது. ஆங்கிலத்தை தங்கள் முதல் மொழியாகக் கொண்டவர்களின் ஆங்கில வர்ணனையில் அதிகம் தவறுகள் நேர்வது இல்லை.
பல நேரங்களில் அவர்கள் கூட உளறுவதை கேட்க நேரிடும். இதனிடையில் ஆங்கிலத்தை தங்கள் முதல் மொழியாக கொள்ளாத இந்தியா, இலங்கை, பாகிஸ்தானைச் சார்ந்த சில வர்ணனையாளர்களின் கிரிக்கெட் வர்ணனையை கேட்கவே அபத்தமாக இருக்கும்.
அந்த வகையில் பாகிஸ்தானின் ரமீஸ் ராஜாவும் இந்தியாவின் அருண் லாலும் வர்ணனை என்ற பெயரில் கொடுக்கும் தொல்லை கொஞ்ச நஞ்சமல்ல.
ஐ.பி.எல் ல் விளையாடுபவர்கள் மட்டுமல்லாது வர்ணனையாளர்களும் குடித்து விட்டு உளறினார்கள் என்ற குற்றச்சாட்டும் உண்டும்.
http://www.cricinfo.com/iplpage2/content/site/iplpage2/hearhear.html இந்த சுட்டியில் ஐ.பி.எல் போட்டிகளினிடையில் வர்ணனையாளர்கள் உளறிய சிலவற்றை தொகுத்திருக்கிறார்கள். படித்து ரசியுங்கள் !!
சில தினங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா-பாக் முதல் டெஸ்ட் ஆட்டத்தினிடையில் ரமீஸ் உளறிக்கொட்டினார் என்றால் மிகையல்ல. Partnership என்பதற்கு Relationship என்றது தான் அபத்தத்தின் உச்சம்.
இது மட்டுமல்லாமல் தேவையின்றி அவர்கள் நாட்டு அணியினரை அதிகம் புகழ்வதும் இந்த வர்ணனையாளர்களுக்கு அழகல்ல.
அருண்லாலும் ரமீசும் செய்கின்ற அட்டூழியத்தைப் பாருங்கள் இந்த காணொளியில்
5 comments:
சரியாக கவனித்து இருக்கிறீர்கள் !!
ரிச்சி பெனாட், டோனி கிரெய்க், பாய்காட் ஆக மாற அடிக்கடி ரமீஸ் ராசாவும், அருண்லாலும் முயற்சித்து காமெடியன்களாகத்தான் ஆவார்கள்.
//
அருண்லாலும் ரமீசும் செய்கின்ற அட்டூழியத்தைப் பாருங்கள் இந்த காணொளியில்
//
அருண்லால் இந்த காணொளியில் வர்ணனை செய்யவில்லையே, எனக்கு மைக்கெல் ஹோல்டிங் குரல் போலலல்லவா இருக்கின்றது
நன்றிங்க வினையூக்கி... சுட்டி மாறிப் போய் விட்டது. இப்போது சரிசெய்து விட்டேன்
எட்வின், அருண்லாலை சில கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பிடித்திருக்கிறதாம்..:) கிரிக்கெட் தொடர்பதிவு எழுதியவர்களில் சிலர்.
@ முகிலன்
சரி விடுங்க பாஸ். சில பேருக்கு பிடிச்சிருக்கு பல பேருக்கு பிடிக்கல. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ரசனை அப்படின்னு சொல்றதவிட வேற என்னத்த சொல்ல... ம்ம்ம்
Post a Comment