அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பில் கிளின்டனின் ஒரே மகளான செல்ஸீக்கு இன்று (ஜீலை 31) கல்யாணமாம். இந்த நூற்றாண்டின் விமரிசையான திருமணமாக இருக்கும் என பரவலாக அமெரிக்காவில் பேசிக் கொள்கிறார்களாம்.
முன்னாள் அதிபரின் மகளும் அமெரிக்காவின் இராஜாங்க செயலாளரின் மகளுமாயிருப்பதால் செல்ஸீயின் திருமணம் வெகு விமரிசையாக நடைபெறும் என தெரிகிறது.
திருமண ஏற்பாடுகள் அனைத்தும் பயங்கர கெடுபிடிகளுக்கிடையில் செய்து முடிக்கப்பட்டிருக்கின்றனவாம்.திருமண ஏற்பாடுகளை படம்பிடிக்க பத்திரிக்கையாளர்கள் அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றனர்.
இதனிடையில் திருமணத்திற்கு ஒபாமாவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என வேறு கூறுகிறார்கள் அதில் எந்த அளவு உண்மை என தெரியவில்லை.
செல்ஸீயும் அவரது வருங்கால கணவருமான மார்க்கும் நவம்பர் அல்லது டிசம்பரில் தென்னிந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்களாம்.
2000 த்தில் கிளின்டன் அமெரிக்க அதிபராக இருந்த போது அவர் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போதே இந்தியாவின் மீது கிளின்டன் குடும்பத்தினர் அதீத ஈடுபாடு காட்டியிருந்தனர்.
2000 த்தில் கிளின்டன் அமெரிக்க அதிபராக இருந்த போது அவர் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போதே இந்தியாவின் மீது கிளின்டன் குடும்பத்தினர் அதீத ஈடுபாடு காட்டியிருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக 2004ல் ஏற்பட்ட ஆழி பேரலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வண்ணம் பில் கிளின்டன் தமிழகத்திற்கு வந்திருந்ததையும் மறக்கவியலாது.
நன்றி: விக்கி & டைம்ஸ்
1 comment:
Just missed !!!
Post a Comment