ஜெய்ப்பூரில் 'ஸ்பைஸ் ஜெட்' விமானத்திற்காக பணிபுரிந்து வரும் விமானிகள் இருவர் போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு பணியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கின்றனர்; கைதும் செய்யப்பட்டிருக்கின்றனர்.
இந்த பிரச்சினையை சற்றே ஆழமாக பார்த்ததில் சான்றிதழ்களில் தவறேதுமில்லை என்பதும் விமானிகளாவதற்கு உரிய பயிற்சிப் பள்ளியில் முறையான பயிற்சி பெறாமலே பயிற்சி பெற்றதாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருப்பதும் புரிய வருகிறது.
மேலும் நான்காயிரம் விமானிகள் பட்டியிலடப்பட்டு சோதனைகளுக்கு உட்படுத்தப்படவிருக்கிறார்களாம். போலிகள் இங்கேயுமா என ஆச்சரியம் மேலிட்டாலும்; கல்வி என்பது வியாபாரம் என்றாகி விட்ட இந்த காலத்தில் இந்த விமானிகள் செய்திருக்கும் சான்றிதழ் மோசடியில் புதிய விஷயம் ஏதும் ஒளிந்திருப்பதாகத் தெரியவில்லை.
சில லட்சங்களை நீட்டினால் விமானிகளுக்கான சான்றிதழ்கள் என்ன மருத்துவர் என்ற பட்டம் கூட கரங்களில் தவழும் காலத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பது பலரும் கண்ட உண்மை.
பல மருத்துவக் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் வகுப்புகளுக்கு சரியாக வராத மாணவர்களும் அபராதம் என்ற பெயரில் சில ஆயிரங்களை கட்டிவிட்டு பிற மாணவர்களைப் போன்றே தேர்வு எழுதுவதையும்; சராசரியான மதிப்பெண்களைப் பெற்று வெற்றிபெறுவதையும் கண்கூடாகக் கண்டவன் நான்.
முறையான செய்முறை பயிற்சியை அளிக்காத கல்லூரிகள் இன்று எத்தனை? முறையான பயிற்சி அளிக்கப்பட்டும் வகுப்புகளை புறக்கணிக்கின்ற மாணவக் கூட்டங்கள் இன்று எத்தனை?! திறமையான ஆசிரியர்கள் இல்லாத கல்லூரிகள் இன்று தமிழகத்தில் மட்டும் எத்தனை உள்ளன!!
கல்லூரிகளை விடுங்கள், முறையான ஆசிரியர்கள் இல்லாத பள்ளிக்கூடங்கள் இன்று இந்தியாவில் எத்தனை! எத்தனை?!
இதற்கெல்லாம் காரணம் யார்? ஏன் இவற்றை தவிர்க்க இயலவில்லை!? என்ற கேள்விகளை எழுப்பினால் அரசாங்கம், அமைச்சர்கள் என்று தான் பழி போடுவோம். அவர்கள் ஒருவகையில் காரணமானாலும்; முறையான பயிற்சி ஏதும் பெறாமலே எப்படியாவது சான்றிதழைப் பெற்று விட துடிக்கும் மாணவ சமுதாயத்தை மறைமுகமாக ஊக்குவிக்கும் ஒவ்வொரு குடிமகனும் அதற்கு காரணம் தான் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நாமும், கல்வி இயக்குனரும், அமைச்சர் பெருமக்களும், அரசாங்கமும் இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமானால் போலி விமானிகள் என்ன போலி மருத்துவர்களும், பொறியாளர்களும் இன்னும் தொடரத்தான் செய்வார்கள்.
நன்றி: ndtv cnn-ibn
4 comments:
பல மருத்துவக் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் வகுப்புகளுக்கு சரியாக வராத மாணவர்களும் அபராதம் என்ற பெயரில் சில ஆயிரங்களை கட்டிவிட்டு பிற மாணவர்களைப் போன்றே தேர்வு எழுதுவதையும்; சராசரியான மதிப்பெண்களைப் பெற்று வெற்றிபெறுவதையும் கண்கூடாகக் கண்டவன் நான்.
...They are playing with innocent lives.... :-(
முறையான பயிற்சி ஏதும் பெறாமலே எப்படியாவது சான்றிதழைப் பெற்று விட துடிக்கும் மாணவ சமுதாயத்தை மறைமுகமாக ஊக்குவிக்கும் ஒவ்வொரு குடிமகனும் அதற்கு காரணம் தான் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
....... Of course!
என்னது போலி விமானுமா??? அய்யயோ சோழியை முடிச்சுப் புடுவானுக போலிருக்கே ...
கலிகாலம் சித்ரா அக்கா...
@ இக்பால்
டெரராத்தேன் இருக்கு. என்ன செய்ய :(
Post a Comment