அடப்பாவிகளா 15 ஓவர் மீதியிருந்திச்சேடா அதுக்குள்ள Mutual Understanding அது இதுன்னு சொல்லி ஆட்டத்த நிறுத்திப்புட்டு Draw னு ஏமாத்திப்புட்டீங்களே.(மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில்) இதுல தரவரிசைல முதல் இடமாம் இந்தியாவுக்கு... நல்லாக்கீது உங்க அழுகுனி ஆட்டம்
இந்த அழுகுனி ஆட்டம் ஆடுறதுக்கு ஆட்டமே ஆடியிருக்க வேண்டாமே! ஆட்டம் ஆரம்பித்த முதல் நாளிலேயே ஆட்டத்த சமநிலைல முடிச்சிருவோம்னு சொல்லிட்டு கும்மியடிக்கவாது போயிருக்கலாமே.
பதினைந்து ஓவர்கள் அதாவது 90 பந்துகளுடன் ஏழு விக்கெட்டுகளும் மீதமிருக்க 86 ஓட்டங்கள் எடுக்க முடியாதா என்ன? இரு பக்கமும் வெற்றி சாதகமாகத் தானே இருந்தது.
இரு அணிகளுக்குமே தோற்று விடுவோம் என்ற பயமா இல்லை ஐந்து நாட்கள் ஆடி விட்டோம் என்ற களைப்பா தெரியவில்லை?! இத்தனைக்கும் முதல் மற்றும் இரண்டாம் நாள் ஆட்டங்கள் மழையினிமித்தம் முழுமையாக நடைபெறவில்லை.
இப்படி அழுகுனி ஆட்டம் ஆடினால் டெஸ்ட் ஆட்டத்தைப் பார்க்க எவர் தான் மைதானத்திற்கு வருவார்?
இரு அணித்தலைவர்கள் பரஸ்பரம் பேசி சமநிலையில் முடித்துக் கொள்கிறார்கள்; இன்றையதினத்தை கிரிக்கெட்டில் மற்றுமொரு கருப்புதினமாக கணக்கில் கொள்வதைத் தவிர வேறு என்ன செய்து விட முடியும் ஒரு கிரிக்கெட் ரசிகனால் :(
3 comments:
உண்மை தான், ஆட்டத்தை இடை நிறுத்தியவுடன் எனக்கு கூட அதிர்ச்சியாக தான் இருந்தது.வெற்றியோ தோல்வியோ போராடி பார்த்திருக்கலாம். நிச்சயமாக இந்திய அணிக்கே சாதகமாக இருந்தது.. இந்த இடத்தில் தான் சேவாக்கின் தேவை நினைப்பில் வந்து தொலைத்தது. போராடும் குணம் இல்லாவிட்டால் பிறகென்ன விளையாட்டு..!!
ஆமாங்க கந்தசாமி,
இன்னும் வேடிக்கை என்னன்னா? மே.இ. தீவுகள் அணி தலைவர் இந்தியாவின் இந்த நடவடிக்கை அவரை அதிர்ச்சி அடைய செய்ததாக தெரிவித்திருந்தார்.
ஆனால் தோனியோ... ஆட்டம் சமநிலையில் முடிந்ததற்குக் தான் வருத்தம் ஏதும் படவில்லை என சப்பை கட்டு கட்டுகிறார். என்னத்த சொல்ல! :(
அம்பயர்களால் மட்டும் தான் தவறான தீர்ப்பு வழங்க முடியுமா என்ன?.எங்களாலும் முடியும் என்று நிரூபித்திருக்கிறார்களோ அணித்தலைவர்கள்
Post a Comment