June 19, 2026

சிங்காரச் சென்னை எனும் தோற்றப்பிழை

 சிங்காரச் சென்னை என்பதெல்லாம் பெயரளவிற்குத்தான் என்பதை துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்ட இந்த ஒற்றைக் காணொளி சொல்லி விடுகிறது

இத்தனைக்கும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை, ஜார்ஜ் டவுன், பிராட்வே ஆகிய முக்கிய இடங்களை உள்ளடக்கிய சென்னையின் மையப்பகுதி தான் துறைமுகம் தொகுதி.

சுகாதாரமின்மை, வீடுகள் இல்லாமல் பொதுமக்கள் வீதிகளிலும், நடைமேடைகளில் தங்கும் நிலைமை. பெண்கள் பாதுகாப்பாக ஒதுங்குவதற்கு கூட போதிய வசதி இல்லாத நிலை என அத்தனை பிரச்சனைகளைத் தாங்கி நிற்கிறது இந்த பகுதி. ஈக்கள் மொய்க்கும் அந்த இடத்தைப் பார்க்கையில் தலையில் அடித்துக் கொண்டேன்.

இந்த தொகுதிக்கு உட்பட்ட - அரசியல் கட்சிகளும், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட மதங்கள் சார்ந்த தொண்டு நிறுவனங்களும், தன்னார்வலர்களும் என்ன செய்கிறார்கள் என்று கேள்விகள் எழுந்தாலும் இதற்கு முழு பொறுப்பும் ஏற்க வேண்டியது அரசு தான். 

இந்த பகுதியை இத்தனை காலம் யார் ஆட்சி செய்தார்கள் இப்போது தெரிந்தெடுக்கப்பட்டிருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர் யார், சென்னையின் தற்போதைய மேயர் யார் என்பதெல்லாம் சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பது இல்லை. 

இப்படியானச் சூழலில் வாழும் மக்களுக்காக பரிதாபப்படும் அதே நேரம், சென்னையில் தடுக்கி விழும் இடங்களில் எல்லாம் சபைகளை, பிரார்த்தனைக் கூடங்களை உருவாக்கி பணம் ஈட்டும் கிறிஸ்தவ நிறுவனங்கள் எத்தனை இப்படியான மக்களை சென்று சந்தித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கிறார்கள் என்கிற கேள்வியும் எழுகிறது. 

இதனாலேயே தான் ‘நான் ஓர் கிறிஸ்தவனாக சா*க மாட்டேன்’ எனத் தொடர்ந்து பேச வேண்டியிருக்கிறது. மக்களோடு மக்களாக நின்ற இயேசுவுக்கும் இன்றைய பணம் விழுங்கி போலி கிறிஸ்தவத்திற்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. 

காலம் எல்லாவற்றையும் நம் முன் தெளிவாக நிறுத்தி வைத்திருக்கிறது. 

இதைப் பார்த்துவிட்டு மீண்டால் சிங்காரச் சென்னை 3.0 திட்டத்திற்கு முதல்வர் விஜய் ஒப்புதல் என செய்தி. வேடிக்கையாக இருக்கிறது. இந்த ஆட்சி எப்படியான சக்தி என்பதெல்லாம் இரண்டு ஆண்டுகளில் தெரிந்து விடும் 🚶🏽‍♂️

காணொளி - நீலம் சமூக அமைப்பு 

https://youtu.be/fcD3erwGTNg?is=lgZr1LYnmCvHgPGU 

Related Posts with Thumbnails