புவி வெப்பமாகுதலை குறித்த விழிப்புணர்வுக்கும் வெப்பமாகுதலை குறைக்கும் ஒரு பகுதியாகவும் கடந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இறுதி சனிக்கிழமை அன்று Earth Hour என்பது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
முதன்முதலில் 2007 மார்ச் 31 அன்று சிட்னி நகரில் மட்டும் 2.2 மில்லியன் மக்கள் ஒளிவிளக்குகளை ஒரு மணிநேரம் அணைத்து புவி வெப்பமாகுதலுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.(எனினும் 2005ஆம் ஆண்டு தாய்லாந்தில் தான் முதலில் இந்த எண்ணம் உருவெடுத்ததாம்)
2008 ல் அது 50 மில்லியன் மக்கள் பங்குபெற்ற ஒரு உலக நிகழ்வாகியது.கடந்த ஆண்டு 35 நாடுகளின் 370 நகரங்கள் இதில் பங்கெடுத்தன.
இந்த வருடம் புவிக்கும் புவி வெப்பமாகுதலுக்கும் இடையே நடக்கும் வாக்கெடுப்பாக இது கருதப்படுகிறது.அதோடு அகில உலகமே முதல் முறையாக வாக்களிக்கவிருக்கிறது என்பதும் இதன் சிறப்பம்சம்.
ஒவ்வொருவரும் தங்கள் உபயோகப்படுத்தும் மின்சார ஒளி விளக்குகளை ஒரு மணிநேரம் அணைப்பது புவிக்கு அவர்கள் அளிக்கும் வாக்காகவும் ஒளி விளக்குகளை அணைக்காமலிருப்பது புவி வெப்பமாகுதலுக்கு அளிக்கும் ஓட்டாகவும் கருதப்படவிருக்கிறது.
மார்ச் 28 அன்று ஒரு மணி நேரம்(இரவு 8.30-9.30) ஒளிவிளக்குகளை நிறுத்தி தங்கள் ஆதரவை மக்கள் இதற்கு தெரிவிக்கவுள்ளனர். இது வரை 83 நாடுகளின் 2712 நகரங்கள் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளன.
குறைந்தது ஒரு பில்லியன் ஓட்டுகளைப் பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் களம் இறங்கியிருக்கிறது WWF(Worldwide Fund for Nature/World Wildlife Fund) அந்த ஓட்டுகள் இந்த வருடம் டென்மார்க்கின் தலைநகரமான கோப்பென்ஹேகனில் உலக தட்பவெப்ப மாற்ற கருத்தரங்கில் கலந்து கொள்ளவிருக்கும் உலக தலைவர்களிடத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
எனவே உங்களால் முடிந்தால் மார்ச் 28 அன்று இரவு 8.30 முதல் 9.30 வரை ஒளி விளக்குகளை அணைத்து புவிக்கு உங்கள் ஓட்டளியுங்கள்.
மேலும் தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்.
இந்தியர் சிலரின் ஆதங்கம்: இங்க ஒரு நாளைக்கு 6 மணி நேரம் கரண்டே இல்லாம இருட்டா கிடக்கு இதுல இது வேறயா?
Earth Hour குறித்த Youtube ஒளியோவியம் கீழே
3 comments:
அன்பு எட்வின் தம்பி, நல்ல பதிவு, ஒரு நாளைக்கு இந்த உலகத்தில் எத்தனை பேர் புகை பிடிகிறார்கள், எத்தனை பேர் வாகனம் ஓட்டுகிறார்கள், அவர்கள் எல்லோரையும் ஒரு மணிநேரம் நிருத்தசொல்லுங்கள் போதும், பூமி குளிர்ந்துபோகும்
நல்ல பதிவு, வாழ்த்துக்கள், ஒரு வேண்டுகோள், நேரம் இருந்தால் என்னுடைய கடவுளும், நானும்-என்ற உரையாடலை படித்து பாருங்கள்,
அன்புடன்
ஜீவா
//
இந்தியர் சிலரின் ஆதங்கம்: இங்க ஒரு நாளைக்கு 6 மணி நேரம் கரண்டே இல்லாம இருட்டா கிடக்கு இதுல இது வேறயா?
//
இந்தியாவுல டெய்லி எர்த் டேதாங்க :0))
நானும் சொல்லிக்கிறேன்...நல்ல பதிவு...நாளைக்கு ஒரு மணி நேரம் லைட்டையெல்லாம் ஆஃப் பண்ணிரலாம்...
Post a Comment