உலகம்
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் உத்தரவின் பேரில் மேலும் 4000 வீரர்களை அமெரிக்கா ஆப்கனுக்கு அனுப்பவிருப்பது ஈராக்கை அடுத்து அமெரிக்கரின் கவனம் முழுமையாக ஆப்கன் மீது திரும்பியிருப்பதை காட்டுகிறது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் உத்தரவின் பேரில் மேலும் 4000 வீரர்களை அமெரிக்கா ஆப்கனுக்கு அனுப்பவிருப்பது ஈராக்கை அடுத்து அமெரிக்கரின் கவனம் முழுமையாக ஆப்கன் மீது திரும்பியிருப்பதை காட்டுகிறது.
அதோடு ஆப்கனும்,பாகிஸ்தான்-ஆப்கன் எல்லைப்பகுதியும் தான் உலகின் மிக பயங்கரமான பகுதிகள் எனவும் முழங்கியிருக்கிறார் ஒபாமா.ஈராக்கிலேயே பேரழிவு ஆயதங்கள் ஒன்றையும் இவர்களால் கண்டெடுக்க முடியவில்லை.ஆப்கனில் என்ன செய்வார்கள் என பார்ப்போம்.
----------
அரசியல்
தமிழகத்தில் பா.ம.க,அம்மாவுடன் இணைந்திருப்பது அத்தனை ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.ஏறத்தாழ ஒரு வருடத்திற்கு முன்னரே தமிழகத்தில் ஆளுங்கட்சியுடன் கருத்து வேறுபாடு கொண்ட பா.ம.க மத்தியில் பதவிக்காக மட்டும் ஆதரவு அளித்து வந்ததும் இப்போது அதே பதவியை பெறும் வகையில் கூட்டணி மாறியிருப்பதும் அவர்களின் பதவி மோகத்தை மீண்டும் வெளிப்படுத்தியிருக்கிறது.
--------
வருணின் கருத்துக்களும் அதனைத் தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட சரண் நாடகங்களும், பேரணியும்,கலவரமும்,துப்பாக்கி சூடும் மேனகாவின் மத முலாம் பூசப்பட்ட கருத்துக்களும் வருந்தத்தக்கது.
--------
கிரிக்கெட்
ஆஸ்திரேலிய அணியை இறுதி டெஸ்ட் ஆட்டத்தில் தோற்கடித்த இளம் தென்னாப்பிரிக்க அணி அதனைத் தொடர்ந்து நடந்த இரு T20 ஆட்டத்திலும் வென்று T20 தொடரையும் வென்றது.
நியூசிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் தோல்வி அடையும் தருவாயிலிருந்த இந்திய அணியை டிராவிட்டும் காம்பீரும் பொறுப்புடன் ஆடி சமன் செய்தது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
நியூசிலாந்தின் புதியவர்கள் நன்கு மட்டை வீசினாலும் அனுபவம் இல்லாமையால் வெற்றிபெறும் வாய்ப்பை இழந்தனர்.மூன்று நாள்கள் தொடர்ச்சியாக ஆடுகளத்தில் இருப்பது அவர்களில் பலருக்கு புதியது.லக்ஷ்மணனின் சதமும் அருமை.
இங்கிலாந்தின் பீட்டர்சன் மே.இ.தீவின் சந்தர்பாலை,'அவர் அணிக்காக விளையாடுவது இல்லை,தனக்காக மட்டுமே விளையாடுகிறார்'என குறை கூறியது தேவையற்ற செயல்.பீட்டர்சன் அவரது ஆட்டத்தில் கவனம் செலுத்தினால் அதுவே பெரிய விஷயம்.இதனை இங்கிலாந்தின் தற்கால பயிற்சியாளர் ஆன்டி ஃப்ளவரும் கண்டித்திருக்கிறார்.
-------
ஃபார்முலா 1
1954 க்கு பின்னர் ஃபார்முலா 1 பந்தயத்தில் முதல்முறையாக களமிறங்கும் புதிய அணி ஒன்று முதல் இரண்டு இடங்களை பிடித்தது நேற்று(29.03) தான் முதல்முறை. யாரும் எதிர்பாராதவிதம் தங்களின் Mercedes எஞ்சின் மூலம் முதல் இரண்டு இடங்களில் வந்து அந்த சாதனையை Brawn அணி நிகழ்த்தியது.
பொருளாதார நெருக்கடிகளால் 'Honda' அணியினர் இந்த வருடத்தின் போட்டிகளிலிருந்து தங்களை விலக்கிக் கொண்டது 'Brawn' அணிக்கு சாதகமாகியிருக்கிறது. Brawn அணியைச் சார்ந்த பிரிட்டனின் ஜென்சன் பட்டன் மற்றும் பிரேசிலின் ரூபன் பேரிக்கலோ கடந்த ஆண்டில் ஹோண்டா அணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வருடத்தின் முதல் போட்டியான நேற்றைய போட்டியில் கடந்த முறை இரண்டாவது இடம் பிடித்த ஃபெராரி அணி புள்ளி ஏதும் பெறாமல் ஏமாற்றமடைந்தது.
2 comments:
ஃபார்முலா 1 இன்னுமா நடத்திகிட்டு இருக்காங்க!முன்பெல்லாம் தொலைக்காட்சிய திறந்தா எங்கேயாவது ஒண்ணு டுர்ன்னு ஓடிட்டு இருக்கும்.இப்ப காசு கொட்ட ஸ்பான்சர் இல்லாம வண்டிய P ல போட்டுவச்சிருக்காங்கன்னு நினைச்சேன்!
இன்னமும் நடந்து கிட்டு தான் இருக்குங்க... இந்தியாவோட விஜய் மல்லயா Force India அப்படின்னு 2 வண்டி வச்சிருக்காரு.அறிமுக வருடமான போன வருடம் புள்ளி எதுவும் கிடைக்கவில்லை.இந்த தடவ பாப்போம் எப்பிடின்னு.
Post a Comment