March 17, 2009

இந்தியா-நியூசிலாந்து டெஸ்ட் ஆட்டங்கள் ஒரு முன்னோட்டம்

நியூசிலாந்திற்கு எதிரான 20-20 ஆட்டங்களில் தோல்வியடைந்த இந்திய அணி ஒரு தின ஆட்டங்களில் மழையின் குறுக்கீடுகளினாலும்,மட்டைவீச்சாலும் வெற்றியை ஈட்டியது.
ஒரு தின போட்டிகளின் அனைத்திலும் நியூசிலாந்து அணியினர் இந்தியாவிற்கு சரிசமமாகவே ஆடினர்.20-20 மற்றும் ஒரு தினபோட்டிகளை மொத்தமாக கணக்கிட்டால் இரு அணிகளும் 3-3 என்ற கணக்கில் சரிசமமாக வெற்றி ஈட்டியுள்ளன.


நாளை முதல் டெஸ்ட் ஆட்டம் தொடங்கவிருக்கிறது.டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற வேண்டுமானால் இந்திய அணியின் பந்து வீச்சு சிறப்பாக அமைய வேண்டும்.மட்டை வீச்சை மட்டுமே நம்பியிருந்தால் இந்திய அணி வெற்றி பெறுவது நிச்சயமாக கேள்விக்குறிதான்



திராவிட்டை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி


பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் மகன் ஜோஷ் யங் உடன் சச்சின்
பயிற்சிக்கு பின்னர் சேவாக்
நியூசிலாந்தின் மாநில அணியான கேன்டர்பெர்ரிக்காக சதமடித்து புதுப் பொலிவுடன் இருக்கும் திராவிட்
விக்கெட்டுக்களுக்காக ஹர்பஜனின் பின்னால் தோனி நிச்சயம் ஓட வேண்டியிருக்கும்
ஒரு தினப் போட்டிகளின் போது காணப்பட்ட இந்திய ரசிகர் கூட்டம் டெஸ்ட் ஆட்டங்களிலும் தொடருமா?
"பயிற்சிக்கு பின்னர் சோர்வுடன் தோனி"
(டெஸ்ட் போட்டிகளின் இறுதியில் இப்படி நாக்கைத் தள்ளாமல் இருந்தால் சரிதான்)

புகைப்படங்கள் நன்றி: cricinfo

5 comments:

ram.pragash said...

arumai nanbar edwin avargale, neengal mazhai kurukkeedu matrum mattay veechal vetri petradhaga kurippidureenga, emppa neenga bowlingai patri pesureengale, newzealandla ulla kutti groundla endha alavukku bowling podradhe perusu ayya, vettori kooda onnum pannamudiyala,neenga 20/20 appuram 1 day ellathayum onnllam serkka koodadhu, eppadiye pona kojanalla hockeyla 1 game winpanna adhayum serthippeenga pola,ungalukkellam eppadiyo namma teamai edhavadhu sollanum,ungalukkaga eppo score ennanna newzealand 6/61, oruvelai edhukkum neenga enna solluveenganna pitch appadi illai ground appadeennu ennumo pongappa

எட்வின் said...

ஹாக்கிய விடுங்க தல, கிரிக்கெட் பத்தியே பேசுவோம், மைதானம் சிறியது தான் மறுக்கவில்லை(மைதானத்தை குறித்து முந்தைய பதிவிலேயே குறிப்பிட்டிருந்தேன்.) சரி நீங்க சொல்றபடியே 20-20 ஆட்டத்த சேத்துக்கல.

மூன்றாவது ஆட்டத்தை தவிர மற்ற ஆட்டங்களில் எல்லாமே சராசரியாக 28 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன தல. அதனால் தான் இரண்டு Format யும் ஒண்ணா சேத்து கணக்கு போட்டது.

முழுமையாக 50 ஓவர் எந்த போட்டியிலும் வீசப்படவில்லை.

டக்வர்த் லூயிஸ் முறை நியூசிலாந்திற்கு பாதகமானது என்பதை மறுக்க முடியுமா!

வெற்றி பெற வேண்டுமானால் மட்டை வீச்சை மட்டுமே நம்பாமல் பந்து வீச்சும் சிறப்பாக இருக்க வேண்டுமென தான் குறிப்பிட்டிருக்கிறேன்.

ஜீவா said...

அடிவாங்கியவன் ஓடினால்
அடித்தவனும் ஓடுகிறான்,
கிரிக்கெட்
அன்புடன்
ஜீவா

எட்வின் said...

ஜீவா சார்.... ஒண்ணும் புரியல போங்க

ஜீவா said...

அன்பு நண்பரே எட்வின் , இது ஹைக்கூ கவிதை
வேருவொன்றும் இல்லை.
அன்புடன்
ஜீவா

Post a Comment

Related Posts with Thumbnails