பொதுவாகவே கேரளத்தில் பெரும்பாலான மேடை நிகழ்ச்சிகளில் மலையாள பாடல்களைக் காட்டிலும் தமிழ் பாடல்களே அதிகம் பாடப்படுகின்றன.கேரள இசைப்பிரியர்கள் தமிழ் பாடல்களையே அதிகம் விரும்புவதும் இதற்கு காரணமாக இருக்கலாம்.மலையாள தொலைக்காட்சியான ஏசியாநெட் இரண்டு ஆண்டுகளாக நடத்தி வரும் ஸ்டார் சிங்கர் என்ற சிறந்த பாடக பாடகிகளை வெளிக்கொணரும் நிகழ்ச்சி குறித்து பெரும்பாலானவர்கள் அறிந்திருக்கக் கூடும்.
பாடகர் உன்னிகிருஷ்ணன்,பாப் பாடகி உஷா உதூப்,இசையமைப்பாளர் ஷரத் போன்றோர் நடுவர்களாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.தமிழ் பாடல்களின் ஆக்கிரமிப்பு ஸ்டார் சிங்கர் போட்டியையும் விட்டு வைக்கவில்லை.இதில் இறுதிச் சுற்று வரை முன்னேறியிருக்கும் சோனியா என்பவர் பாடிய சில தமிழ் பாடல்கள் இங்கே.
இளையராஜாவின் "குருவாயூரப்பா"
ரஹ்மானின் "மலர்களே"
இதில் சோனியா உடன் பாடியிருக்கும் நஜிம் 2007-ஸ்டார் சிங்கரின் சாம்பியன் ஆவார்.தற்போது பல திரைப்படங்களில் பாடி வருகிறார்.சோனியா மலையாளி என்ற சாயல் கொஞ்சம் கூட இல்லாமல் அருமையாக பாடியிருக்கிறார்.
இளையராஜாவின்"நின்னுக்கோரி வரணும்"
5 comments:
Super!
Tnk u.
தமிழை பற்றி என்ன நினைக்கிறீர்கள் அருமையான மொழி, ௧௯௯ இல் நான் ஷார்ஜாவில் இந்தியன் படம் பார்த்து கொண்டிருந்த நேரம், ஒரு அரபியும் எங்களோடு படம் பார்க்க வந்திருந்தார், அப்பொழுது, அக்கடான்னு நாங்கள் உடை போட்டால் பாட்டில் வரும் உனக்கு தடா, உனக்கு தடா, என்ற வரி வந்த உடன், அரபியும் அதோடு சேர்ந்து , அய்வா தமாம், அய்வா தமாம், என்ற உடன் நானும் அவரோடு சேர்ந்து அய்வா தமாம் என்றேன், அதனால் தமிழ் மொழி தமாம் தான்
புரிந்ததா எட்வின் தம்பி
அன்புடன்
ஜீவா
சோனியா சேச்சி தூள் கிளப்பிட்டமா,ஆண்டவன் அருள் என்றென்றும் இருக்கட்டும்.
நின்னுக்கோரியில் அவ்வளவாக எடுபடவில்லை.
நன்றி திரு.மாசிலா
ஜீவா said...
//அய்வா தமாம்//
புரிந்தது அண்ணாச்சி,
எழுதப்படிக்க தெரியலனாலும்... எதோ கொஞ்சம் புரியும் அரபி.
சுக்ரன் ஜீவா அய்யா.
வடுவூர் குமார் said...
//நின்னுக்கோரியில் அவ்வளவாக எடுபடவில்லை.//
ஆமாங்க அதில் கொஞ்சம் சொதப்பல் தான்
ஏசியாநெட் சானலின் ஸ்டார் சிங்கர்-2008ல்'சோனியா'வே சாம்பியன் ஆகி உள்ளார்.
Post a Comment