ஒரு வாரமாகவே வளைகுடா நாடுகளில் கடும் காற்றும் மழையுமாக காலநிலையில் பெரிதான மாற்றங்கள் இருந்து வருகின்றது. ஓமன் தலைநகர் மஸ்கட்டில் மழை இன்றும் இருந்தது.ஓமனில் இரு தினங்கள் பள்ளிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
துபாயிலும்,அபுதாபியிலும் 25.03 அன்று காற்றுடன் பனிக்கட்டி மழை பெய்தது.ஓமன் மற்றும் கத்தாரில் பரவலாக மணலுடன் கூடிய காற்று இருந்து வந்தது.
இரு தினங்கள் முன்பு துபாயில் மிக உயரமான புர்ஜ் துபாய் கோபுரத்தில் மின்னல் தாக்கிய சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இங்கே. மின்னஞ்சல் செய்த அண்ணன் 'Paul' அவர்களுக்கு நன்றி.
கடும் காற்றும்,இடியுடன் கூடிய மழையும் இரு தினங்களுக்கு பின்னர் மீண்டும் வரலாம் என gulfnews தெரிவிக்கிறது.
7 comments:
துபாய் பனிக்கட்டி நிலத்தை தொலைக்காட்சியில் கண்டேன்.
படங்கள் எடுத்த நண்பருக்கு வாழ்த்துக்கள்.
நன்றி எட்வின்.
புகைப்படங்கள் அருமையாக இருகின்றன...சென்ற வார உலகம் படித்தேன்...நாட்டு நடப்பு உங்க blog'ல தான் தெரிஞ்சிகுறேன் இப்போ! மிக்க நன்றி arnie..
1 கி.மீட்டர் உயர கட்டிடம்(நக்கீல் யோசித்துக்கொண்டு இருக்கிறார்கள்) கட்டினால் இதை மாதிரி இன்னும் பல படங்கள் எடுக்கலாம்.
மின்னல் படங்கள் எல்லாம் ஒரிஜினலா? என்று சந்தேகமாக இருக்கு.
இங்கு பல மின்னல்கள் இடி உருவாக்குவதில்லை.ஊர் பழக்கத்தில் காதை மூடிக்கொண்டு முட்டாளாகியிருக்கேன்,பல முறை.
நன்றி குமார் அவர்களே. மின்னஞ்சலில் நண்பர் அனுப்பினார். ஒரிஜினலா டியுப்ளிகேட்டா நு கேட்டா தெரியாது அய்யா.
THIS IS OLD PHOTO SEE THE CRANE BUT NOW NO CRANE DONT MAKE FOOL
இந்த பதிவு எழுதியே ஒரு வருடம் ஆகப் போகிறது, நீங்க இப்ப தான் வந்திருக்கீங்க நவாப் சார். Im not trying to make anyone fool.
Post a Comment