March 23, 2009

IPL=இன்டர்நேஷனல் பிரிமீயர் லீக்!


ஐ.பி.எல்லை ஏற்கெனவே பலர் துவச்சு காய போட்டாச்சு ;இனிமேல் நம்ம என்னத்த சொல்றது இதுல அப்பிடின்னு தான் நினச்சிட்டு இருந்தேன். சரி பரவாயில்ல நம்மளும் எதாவது எழுதி வைப்போமேனு தான் கொஞ்சம் நகைச்சுவை உணர்வுடன் இதனை எழுதுகிறேன்.

ஐ.பி.எல் தொடர இவைகள் தான் காரணமா

1.IPL=இன்டியன் பிரிமீயர் லீக் அப்படின்னு சொல்றதுக்கு பதிலா இனி இன்டர்நேஷனல் பிரிமீயர் லீக் அப்படின்னு ரொம்ப சந்தோஷமாவே நம்ம சொல்றதுக்காகவா :)

2.பாவம் லலித் மோடி என்ன செய்வாரு, ஏற்கெனவே அவர் ஊர்ல (ராஜஸ்தான்) கிரிக்கெட் வாரிய தேர்தல்ல தோற்கடிச்சிட்டாங்க.அதனால இருக்கிற கொஞ்ச நஞ்ச மானத்தயாவது காப்பாத்தனுமேனு தான் ஐ.பி.எல்ல நடத்தியே தீருவேன் அப்பிடின்னு பிடிவாதமா இருக்கிறாரு போல.

3.ஐ.பி.எல் இல்லன்னா இப்பிடி ரெண்டு பக்கம் கலருங்க நடுவுல உக்காந்து பேட்டி எல்லாம் குடுக்க முடியுமோ என்னமோ.
கொஞ்சம் சீரியஸா யோசித்ததில் எனக்கு புரிந்தவை

1.பெரும்பாலானவர்களால் கூறப்பட்டு வரும் பணம் மட்டுமே இவர்களின் குறிக்கோள் என்பது இவர்கள் ஐ.பி.எல்லை நடத்த விடாப்பிடியாக இருப்பதிலிருந்தே தெரிகிறது.

2.அதோடு வெளிநாடு ஒன்றில் நடத்தும் இந்த முடிவு நிச்சயமாக இந்தியாவின் பாதுகாப்பு வசதிகளை மீண்டும் சர்ச்சைக்குள்ளாக்கியிருக்கிறது.

3.மேலும் நமது நாட்டின் பகைவர்களுக்கு "எங்களின் பாதுகாப்பு வசதிகள் போதுமானவையல்ல" என்ற தவறான செய்தியையும் நாம் முன்வைக்கிறோம்.

(மைதானத்தில் சென்று நேரடியாக ஆட்டத்தை காணலாம் என்றிருந்தவர்களுக்கு இனி ஏமாற்றமே)

எப்படியோ தேர்தலாவது பிரச்சினை எதுவும் இல்லாமல் நடந்தால் சந்தோஷமே. அதற்காவது பாதுகாப்பு வசதிகள் சரியாக இருக்கின்றனவா என்பதும் சந்தேகம் தான்.தெற்காசியாவில் யார் எப்போ எங்க அடிப்பான்னு யாருக்கு தெரியும்!

4 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இந்தியாவிலேயே ஐபில் போட்டி நடத்த ஒரு ஆக்கபூர்வமான யோசனை

கிரி said...

நல்லா சொன்னீங்க (கேட்டீங்க)

தலைப்பு நல்லா இருக்கு ;-)

violetisravel said...

குவைத் தமிழ் ஆர்வலர்,நும் தமிழ்ச் சேவை வளர்க!!!
தங்களது "எண்ணங்களும் எழுத்துக்களும்"பகுதியை இணையதளத்தில் கண்டு மிக்க
மகிழ்ச்சி.....
தங்கள் விமர்சனங்கள் அருமையோ அருமை!!!
மட்டைப் பந்து விளையாட்டு பற்றியவைகள் மிக நியாயமானவை...
முதல் முறை படித்ததிலேயே தங்களது எழுத்து கவர்ந்தது...
நன்றி...

எட்வின் said...

@ violetisravel

வருகைக்கு நன்றிங்க...

தமிழில ஏதோ கிறுக்கிட்டு இருக்கேன். (நான் எழுதுறது எல்லாம் தமிழா என சில நேரம் கேட்கத் தோணும் ) அதையும் நம்பி சில பேர் படிக்கிறாங்க.

எல்லாம் உங்களைப் போன்றோரின் ஆதரவும், ஊக்கமும் தான் காரணம். நன்றி

Post a Comment

Related Posts with Thumbnails