ஏர்டெல் கைபேசியில் GPRS மூலம் வலையில் உலவலாம் என நேற்று GPRS ஐ இயக்கிய போது... ஏதோ ஒரு விளம்பர சுட்டியில் தவறுதலாக சொடுக்கியிருக்கிறேன். அப்படி சொடுக்கிய சில வினாடிகளுக்குள்ளாக நீங்கள் தரவிறக்கம் செய்த java games களுக்காக (தரவிறக்கம் செய்யாமலே)99 ரூபாய் கட்டணமாக எடுக்கப்பட்டுள்ளது என ஏர்டெல்லில் இருந்து sms வந்ததும் அதிர்ந்து போனேன்.
ஆகஸ்ட் 2 ஆம் தேதி அன்று தான் (இலவச sms வசதி இருந்தும்)முன்னறிவிப்பில்லாமல் sms களுக்கு 50 பைசா வசூலித்தார்கள், மீண்டும் என்ன இது கொடுமை என நினைத்துக் கொண்டு உடனடியாக கைபேசியிலிருந்தே வாடிக்கையாளர் சேவையில் (121) புகார் செய்தேன்; இரு நாட்களுக்குள் பதிலளிப்பதாக கூறினார்கள்.
இன்று மாலை வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து ஒரு பெண்மணியின் அழைப்பு வந்தது... 99 ரூபாய் பணம் மீண்டும் கிடைக்கப்பெறும் என நினைத்தால் நடந்தது வேறு. நீங்கள் தரவிறக்கம் செய்திருப்பதாகவே எங்களுக்கு தகவல் கிடைத்திருப்பதால் உங்களுக்கு பணம் திரும்ப கிடைக்காது என கூறிவிட்டு துண்டித்தார். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள் என வேறு கூறி கடுப்படித்தார் அந்த பெண்மணி.
மீண்டும் அழைத்தேன் 121 ல்... என்னங்க இந்த மாதிரி ஒரு பெண்மணி கூறினார் என தெரிவித்து விட்டு சற்றே கோபமாக 'ஆகஸ்ட் 2 அன்று தான் குளறுபடி செய்தீர்கள் மீண்டும் என்ன சார் இது' என கூறினேன்.சில வினாடிகள் அமைதி காத்தவர் நாளை மதியத்திற்குள் அந்த தொகை திரும்பக் கிடைக்கப்பெறும் என தெரிவித்தார்.அப்போது தான் சற்று சமாதானமடைந்தேன்.
10 வினாடிகளுக்குள்ளாக இழந்த 99 ரூபாயும் கிடைக்கப்பெற்றேன். நமது பணத்தை நாம் பெறுவதற்கே இத்தனை தில்லு முல்லுகள்... என்னத்த சொல்ல.
இது இப்படியென்றால் ATM தரும் தொல்லை இதை விட பெரிது, கடந்த வாரம் நான் பணம் எடுக்க முயற்சிக்கையில் பணம் வராமலயே பணம் எடுத்திருப்பதாக ரசீது மட்டும் வந்தது. புகார் செய்து விட்டு காத்திருக்கிறேன் அந்த சில ஆயிரங்கள் கிடைக்கப்பெறுமென.

1 comment:
உங்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. உலகிலேயே, செல்பேசியில் upload க்கும் காசு வாங்கும் ஒரே நிறுவனம் ஏர்டெல் ஆகத்தான் இருக்க முடியும். எனவே புத்திசாலி்த்தனமாக GPRS சேவையைப் பயன்படுத்தாமல் இருப்பதே நலம். ஏர்டெல் வரவர அரசு நிறுவனம் மாதிரி யதேச்சாதிகாரம் மிக்கதாக மாறிப் போய்க் கொண்டிருக்கிறது.
Post a Comment