August 18, 2009

திராவிட்,பேட்மிண்டன்,சீன வீரர்கள்

இலங்கை முத்தரப்பு தொடர் மற்றும் தென்னாப்பிரிக்க சாம்பியன்ஸ் ட்ராஃபி ஆட்டங்களுக்கு ராகுல் திராவிட்டை தெரிந்தெடுத்திருப்பது என்ன காரணத்திற்கென புரியவில்லை. இரண்டு தொடர்களில் சரிவர ஆடாத காரணத்தால் நீக்கப்பட்ட ரோஹித் ஷர்மாவிற்கு மீண்டும் வாய்ப்பு அளித்திருக்கலாம்.

2011-உலகக் கோப்பை போட்டிகளுக்கென இளம் அணியை உருவாக்கப் போகிறோம் என்று காரணம் காட்டி 2007 ல் மூத்த வீரர்களை நீக்கியது என்னத்திற்கோ தெரியவில்லை. கேட்டால்... அது போன தேர்வுக்குழு என வடிவேல் பாணியில் ஏதும் காரணம் வைத்திருப்பார்களோ என்னமோ!

ஒருவேளை ஷேவாக் குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்புவாரெனில் திராவிட்டிற்கு அணியில் பங்கு என்னவாக இருக்கும்?

ஐ.பி.எல் போட்டிகளில் அருமையாக பந்து வீசிய 'ஓஜா'வையும் அணியிலிருந்து நீக்கியதற்கு என்ன காரணமோ?

--------------------------------------------



தடகள போட்டிகளானாலும்,பிற விளையாட்டுகளானாலும் சீன வீர வீராங்கனைகள் காட்டும் உற்சாகமும், அர்ப்பணிப்பும், விவேகமும், வேகமும் ஆச்சரியப்பட வைக்கின்றன. ஹைதராபாத்தில் சில தினங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த சர்வதேச இறகுப்பந்து(பேட்மிண்டன்) போட்டிகளில் ஆண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர், பெண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் தங்கம் வென்றது சீன சிங்கங்களே.

2008 ஆம் ஆண்டு நடந்து முடிந்த பெய்ஜிங்க் ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 100 பதக்கங்கள் குவித்து தங்க பதக்கம் பெற்ற முறையில் பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்ததும் சீனா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் ஆறாம் நிலை வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நெய்வால் காலிறுதி சுற்றிலேயே வெளியேறினாலும் சர்வதேச போட்டிகளில் காலிறுதி வரை முன்னேறிய முதல் வீராங்கனை என்ற பெயர் கிடைத்தது.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails