October 23, 2009

Boyzone-Gately, மைக்கேல் ஜாக்சன், கிறிஸ்தவம்-ஓரினத்திருமணம்


தொண்ணூறுகளில் ஆங்கில பாப் இசைப்பிரியர்களையும்,இளவட்டங்களையும் கவர்ந்த குழுக்களில் Back Street Boys, Westlife, Boyzone போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவற்றில் Boyzone குழுவின் பாடல்களைத் தான் தொண்ணூறுகளில் நான் அதிகம் கேட்டு வந்திருந்தேன்.

அயர்லாந்தைச் சார்ந்த ஐந்து நண்பர்களால் உருவாக்கப்பட்டது Boyzone பாப் இசைக்குழு. கடந்த சில நாட்கள் முன்னர் இந்த இசைக்குழுவைச் சார்ந்த Stephen Gately என்பவர் ஸ்பெயினில் விடுமுறைக்காக சென்றிருக்கையில் தனது உறக்கத்திலேயே (தனது 33 ஆவது வயதில்) மரணமடைந்தது பாப் இசை உலகில் பெரிதாகப் பேசப்பட்டது.

அவர் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் அல்லது தற்கொலை செய்திருக்கலாம் என ஆரம்பத்தில் பேசப்பட்டாலும் இயற்கையான காரணங்களாலேயே அவர் மரணமடைந்ததாக பின்னர் தெளிவுபடுத்தப்பட்டது. இவர் ஒரு Gay என்பது குறிப்பிடத்தக்கது.

Boyzone பாடல் ஒன்று காணொளியாய்




----------

மைக்கேல் ஜாக்ஸன்

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். அதனை MJ இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என சொன்னாலும் தகும் என்றே படுகிறது. சில தினங்கள் முன்னர் This Is It என்ற பெயரில் மைக்கேல் ஜாக்ஸன் லண்டனில் செய்யவிருந்த நிகழ்ச்சிக்காக செய்த முன்னேற்பாடுகளையும், அவர் மற்றும் அவரது குழுவினரின் பயிற்சிகளையும் தொகுத்து முன்னோட்டமாக ஜாக்ஸனின் நெருங்கிய நண்பரும், அவரது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், நடன இயக்குனருமான Kenny Ortega வெளியிட்டார்.


This Is It திரை அரங்குகளில் இந்த மாதம் 28 அன்று வெளிவர இருக்கிறது. அதன் இயக்குனரும் Kenny Ortega தான். இப்போதே முன்பதிவுகளும் துவங்கி விட்டன. ஜாக்ஸன் உயிரோடு இருக்கையில் அவரது குறிப்பிட்ட பாடல் தொகுப்பு ஒன்றிற்கு கிடைத்த விலையை விட அவர் மறைந்த பின்னர் வெளியாகவுள்ள இந்த தொகுப்பிற்கு அதிக விலை கிடைக்கும் எனத் தெரிகிறது.

------------
கிறிஸ்தவம்-ரினத் திருமணம்

ஸ்வீடன் நாட்டைச் சார்ந்த லுத்தரன் ஆலயம் ஒன்று ஓரினத் திருமணங்களை நடத்த அனுமதி அளித்துள்ளது. ஓரினத் திருமணங்களுக்கு அனுமதி அளித்து கடந்த மே மாதம் ஸ்வீடன் நாடு சட்டம் இயற்றியிருந்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐரோப்பாவில் நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், நார்வே நாடுகளுக்கு அடுத்தபடியாக ஓரினத் திருமணங்களை அனுமதிக்கும் ஐந்தாவது நாடாகிறது ஸ்வீடன்.

ஆனால் கிறிஸ்தவர்களின் புனித நூலான விவிலியமோ ஓரினத் திருமணத்திற்கு எதிரான கருத்தையே கொண்டுள்ளது என்பது சுவாரஸ்யமானது.

இது சரியா தவறா என்னவென்பது இன்னும் எனக்கு புரிந்தபாடில்லை. மேலே குறிப்பிட்ட Boyzone ன் Stephen Gately ம் ஓரினச் சேர்க்கையாளர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

3 comments:

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

'That's it' இங்கு இங்கிலாந்தில் வெளியாகி ஒரு மாதமாகிவிட்டது.

எட்வின் said...

அப்படியா பாஸ், ஆனா sony ன் official website ல் This Is It அக்டோபர் 28 ல் தான் United Kingdom லும் வெளிவருவதாகப் போட்டிருக்கிறார்களே... ஒருவேளை நீங்கள் சொல்வது Trailer ஆக இருக்குமோ. இந்த தளத்தை பாருங்கள்.

http://www.sonypictures.com/movies/michaeljacksonthisisit/international/

Trailer க்கு Youtube ன் இந்த தளத்தைப் பாருங்கள்

http://www.youtube.com/watch?v=ixoYsLze3pY

ahaanandham said...

ஓரி{ரே இ }ன த்தை,ஒரு மதம் இணைத்து வைக்கிறது,{.நல்லதுதானே }... மக்கள் யாவரும் ஒரேஇனம் என்பதற்கு இப்படி அர்த்தம் எடுத்துருக்காங்க ,{என்ன கொடும சார் }

Post a Comment

Related Posts with Thumbnails