October 30, 2009

கிறுக்கல்கள் சில

தீவிர'வாத' அரசு

சிறைச்சாலைகளுக்குள்
செல்ஃபோன்கள்
சிரமமில்லாமல்
சிறகடிக்கையில்

தீவிரவாதிகளின் கையில்
தோட்டாக்கள் இருப்பதில்
ஆச்சரியம் ஒன்றுமில்லை

இரண்டிற்கும் காரணம்
இரண்டு...
அரசும் அரசியல்வாதியும்.

வரதட்சணை

இலவசம்
இலவச இணைப்பு
என எதிலும்
இலவசம் எதிர்பார்ப்பவர்கள்
திருமணத்திலுமா
இலவசத்தை எதிர்பார்ப்பர்?

வருங்காலத்தமிழ்!

மகளுக்கு தமிழரசி
என்று பாசத்துடன்
பெயர் வைத்தான் நண்பன்
அவளும் அவனை பாசமாகத்தான்
அழைக்கிறாள் டாடீ (Daddy) என்று

2 comments:

ahaanandham said...

"வருங்கால தமிழ் ",,ரசிக்க வைத்தது,,அருமை,

கிறிச்சான் said...

தமிழினி மெல்ல சாகும்'

Post a Comment

Related Posts with Thumbnails